...

7 views

ஜென்மத்தின் தேடல்
அரண்மனைக்கு வந்தவுடன்,

"நாச்சியார்... நாச்சியார்... தண்ணீர் கொண்டு வா.." என்று அழைத்தார் ஜமீன் செங்கோடன்.

உன் மூத்த மகன், ஜமீனின் மானத்தை காப்பாற்ற காத்திருக்கும் களங்கண்டான் எங்கே... என்றார் கோபமாக ஜமீன் செங்கோடன்.

ஏன் இவ்வளவு கோபமாக கேட்கிறீர்கள்.
என்றாள் நாச்சியார்.

"ம்ம்ம்ம்.... உன் அருமை மகன் வந்த பிறகு பேசலாம்." என்றார் ஜமீன்.

சரி, கோவிலில் அம்மன் உத்தரவு கிடைத்துவிட்டதா?... என்று கேட்டாள் நாச்சியார்.

"உத்தரவு கிடைத்து விட்டது. ஆனால், சகுனம் ஏதும் சரியாக இல்லை... தேங்காய் என்றுமில்லாமல்  இன்று அழுகிவிட்டது... கற்பூரம் அணைந்து விட்டது... அது மட்டும் மனதில் உறுத்தலாக இருக்கிறது... " என்று கூறினார் ஜமீன்.

"கவலை வேண்டாம்... உத்தரவு கிடைத்துவிட்டது. அது போதும்... இனி திருவிழாவிற்கு நல்ல நாள் குறிக்கலாம்.. நடப்பது எல்லாமே நல்லதுக்கு  தான் என்று நினைத்து கொள்ளுங்கள். " என்றாள் நாச்சியார்.

"கணக்குப்பிள்ளை, நம்ம கோவில் பூசாரியிடம்  நாளை காலை  திருவிழாவிற்கு நல்ல நாள் குறிக்க
நம்பூதிரி  அரண்மனைக்கு வருகிறார்கள் என்று கூறி அப்படியே, அவரையும் வர சொன்னதாக கூறி விட்டு வாருங்கள் " என்றார் ஜமீன்.

"சரிங்க ஐயா... " என்று கண்கள் கலங்க கூறினார் கணக்குப்பிள்ளை.

அதற்கு ஜமீன், " நீங்கள் எதற்காக கண் கலங்குகிறீர்கள் என்று புரிகிறது. ஆனால், அதில் உங்கள் மேல் என்ன தப்பு இருக்கிறது. விடுங்கள் களங்கண்டான்...