...

3 views

மீண்டும் என்னை உதைப்பாயா கண்மணியே?
சென்னை விமான நிலையம் வழக்கம் போல் பரபரப்பாக காணப்பட்டது..... காலில் மக்கள் சக்கரம் கட்டிக் கொண்டது போல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்த ஜனக் கூட்டத்தின் மத்தியில்... தங்களது உறவினருக்காய் ஒரு கூட்டம் காத்திருக்க... பலர் தங்களது எதிர்காலத்தை தேடி... வெளிநாட்டுக்கு பறக்க ஆயத்தமாக நின்று கொண்டிருந்தனர்.... சற்று முன்னர் தரையிறங்கிய விமானத்திலிருந்து எல்லா ஃபாமாலிடிஸையும் முடித்து விட்டு வெளியே வந்தான் ஆதிரன்..... 29 வயதான இளம்  பொறியியல் பட்டதாரி.... ஆறு வருட வெளிநாட்டு வாசம்...அவனது அழகையையும் தோற்றத்தையும் கொஞ்சம் அதிகமாகவே மெருகூட்டியிருந்தது.... தனது சூட்கேஸை இழுத்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவன்... ஒரு டாக்ஸி பிடித்து... தன் வீட்டை நோக்கி பயணித்தான்.... முகத்தில் ஏதோ ஒரு அவஸ்தை தெரிந்தது... நிச்சயமாக தாய்நாட்டுக்கு வர வேண்டும் என்பதால் தான் வேலைகளை ஒதுக்கி விட்டு வர வேண்டியாதாகி விட்டது... மனைவி பிள்ளைகள் எல்லாம் அமெரிக்காவில் இருக்கிறனர்.... மனைவியின் வேலையும் பிள்ளைகளின் படிப்பும் விடுமுறை எடுத்து தாய்நாட்டுக்கு வர அனுமதிக்கவில்லை... ஆகவே தான் ஆதிரன் மட்டும் இந்தியாவுக்கு வந்திருக்கிறான்.....

காரில் வரும் போது வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வந்தவனுக்கு ஆறு வருடங்களில் சென்னையில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது நன்றாகவே தெரிந்தது.... ஆனால் ஆதிரன் அதை ரசிக்கும் மனநிலையில் இல்லை....

சார்.... சார்.. உங்க இடம் வந்துட்டு.....

என்று ட்ரைவர் அழைக்க.... அதில் தன்னிலை அடைந்தவன்... சூட்கேஸ்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான்.... ட்ரைவருக்கு பணத்தை கொடுத்து அனுப்பியவன் தன் வீட்டிற்குள் நுழைந்தான்..... ஆறு வருடங்களில் பெயிண்ட் கலர் கூட மாற்றப்படாமல் இருக்கும் தன் வீட்டை நிமிர்ந்து பார்த்தான்.... வீட்டில் ஆட்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது.....  ஏதோ ஒரு பதட்டம் நெஞ்சை மூட ..... மூச்சை ஒரு முறை இழுத்து விட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின் ....தன் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தான் .....அங்கு வீட்டின் நடுப்பகுதியில் நடுநாயகமாக படுத்திருந்தாள் அவனது அன்னை..... உயிரற்ற சடலமாய் கிடந்த தாயை சுற்றி பலர் அமர்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர்..... அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக தான் ஆதிரன் வெளிநாட்டிலிருந்து பறந்து வந்திருக்கிறான்..... ஆதிரனுக்கு இதயத்தின் ஓரம் ஊசி வைத்து குத்துவது போல வலித்தது..... கண்களும் தன்னை அறியாமல் கலங்க தொடங்கியது ...... ஆனால் சமூகம் ஆண் மகனுக்கு என்று விதித்திருக்கும் சில விதிகளில் ஒன்று ஆண் மகன் அழகூடாது..... எனவே பொங்கி வந்த கண்ணீரை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்..... வாய்வழியே வெடித்து சிதற தயாராக இருந்த கதறல்கள் எல்லாம்....  அவனது தொண்டைக்குழிக்குள் அமிழ்ந்துபோயின போயின..... அவனது தந்தை தோளில் ஒரு துண்டை போட்டவாறு ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார்...  அவரது கண்கள் இலக்கின்றி எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தன,.... அந்த வீடே பெண்களின் ஒப்பாரியால் நிறைந்திருந்தது.... மற்றொரு பக்கம் சிதையை எரியூட்ட தேவையான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன... தாயின் உடல் நடுகூடத்தில் குளீரூட்டும் சாதனத்துக்குள் வைக்கப்பட்டிருந்தது.....

இறுதி சடங்குகள் தொடங்க.... தலை மகனாகவும் ஓரே மகனாகவும் தாய்க்கு தான் செய்ய வேண்டிய கடமைகளை சரியாய் செய்து முடித்தான் ஆதிரன்.,.. பெரும்பால பிள்ளைகள் இதர கடமைகளை எல்லாம் மறந்தும் துறந்தும் இருந்தாலும் தவறாமல் செய்து முடிக்க நினைக்கும் ஒரே கடமை கொள்ளி வைப்பது தானே.....

ஒப்பாரி அடங்கியது.... கூட்டமும் கலைந்தது... முன் கூடத்தில் ஆதிரனின் தந்தை தரையில் அமர்ந்தாவாறு மாலையிட்டபடி ஃபோட்டோவில் சிரித்துக் கொண்டிருக்கும் மனைவியை வெறித்தாவாறே இருந்தார் ... ஆண்மை என்னும் இலக்கணத்தில் அவரது கண்ணீர் சிறை பட்டுவிட... இதயத்தின் குமுறல்களும் , தனிமையின்  வாசமும் தவிர்க்க முடியாதல்லவா..... இத்தனை நாட்கள் தாரமாய் மட்டுமல்ல தாயாய் கூட சில நேரம் தன் துயர் போக்கிய தன் துணைவியை நினைத்து சத்தம் இல்லாமல், இதயத்தில் இரத்த கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்..... சோகமே உருவாய் இருந்தவரை சில நொடிகள் பார்த்தான் ஆதிரன்.... வந்ததிலிருந்து இன்னும் ஒரு வார்த்தை கூட தந்தையிடம் பேசவில்லை... இவன் பேசினாலும் அவர் கேட்கும் மனநிலையிலும் இல்லை.... ஓயாத வேலைகளால் சோர்ந்து போன அவனது உடல் அவனிடம் ஓய்வுக்காக யாசிக்கவே தன் அறையை நோக்கி நடந்தவன்.... சில நொடிகள் கூட தாமதிக்காது கட்டிலில் விழுந்தான்..... விழுந்த மாத்திரத்திலேயே முதுகில் ஏதோ அழுத்த... படுக்கையை விட்டு எழுந்திருக்காமலேயே..... அது என்னவென்று கைகளால் துளாவி பார்த்தான்...... படுக்கை விரிப்புக்கு கீழ் ஒரு டைரி இருந்தது.... அது ஒரு பழைய டைரி.... அதை கையில் எடுத்தவன் ஏதோ ஒரு உந்துதலினால் அதை திறந்து பார்த்தான்.... அது அவனது தாயின் டைரி..... மெதுவாக அவனது விழிகள் உறக்கத்தை மறந்து அதில் எழுதியிருந்த வார்த்தைகளில் பதிந்தது.....

அன்று ஒரு நாள்..... பூ மொட்டாய்  .....என்  மணி வயிற்றில் நீ உதித்தாய் என் கண்மணி..... வயிற்றுத் தசைகளை பெரிதாக்கி ஒவ்வொரு நாளும் நீ வளர இடம் கொடுத்தேன்..... மழலை நீ என் மணி வயிற்றில் வளரும் நேரம் உனக்கு இடநெருக்கடி வருமோ என தினம்  தினம் கவலை கொண்டேன்..... இரவும் பகலும் உன்னை நினைத்து என் வார்த்தைகளை எல்லாம்  கவிதையாகினேன்... என் மணிவயிற்றில் நீ வளரும் நாட்கள் எல்லாம் என் வாழ்வில்  இனிக்கும் நாட்களாயின...
சுவை தந்த உணவுகள் எல்லாம் எனக்கு வஞ்சனை செய்து வாந்தியாக.... உணவை வெறுத்து உன்னை நேசித்தேன்... என் மூச்சில் கூட நீ தான் வாழ்ந்தாய்... உன் தந்தை கூட மூச்சுக்கு மூச்சு உன்னை புகழ்ந்தார்......

முதல் முறை நீ என்னை உதைத்தாய்..... எனக்குள் படபடப்பு..... உன் தந்தைக்கு கூட என்ன ஆயிற்றோ என்ற பரிதவிப்பு.,.. என்னை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்......


முதல் உதை வளர்ச்சியை குறிக்கும்
கர்ப்பத்திலுள்ள குழந்தையின் முதல் உதை வயது, வளர்ச்சி மற்றும் இயக்க நிலையை குறிக்குமாம். கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் குழந்தை அவனது / அவளது கைகளை நீட்டும்போது, அடிவயிற்றில் ஒரு சின்ன படபடப்பை உணரமுடியும். ஆகவே கவலை கொள்ள வேண்டாம்....

என்று மருத்துவர் கூறியதும் தான்... எனக்கு நிம்மதியே வந்தது..... கண்மணி நீ வளர தொடங்கி விட்டாய் என்று நான் அறிந்த நேரம் உன்னை நான் நினைக்காத நொடிகள் இல்லை.... நான் உன்னையே நினைப்பது போல் நீயும் என்னையே நினைத்துக் கொண்டிருப்பாயா என்று அடிக்கடி சிந்திப்பேன்.....


என்  உடலை நான் அசைக்கும் போது உன் அசைவுகளையும் கொஞ்சம்கொஞ்சமாக நான் உணர தொடங்கினேன்....  என் செரிமான சத்தத்தின் எதிர்வினையாக நீ  வயிற்றுக்குள் நீந்தும் போது நான் அடைந்த பரவசத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.... நீ இயல்பாக உன்  கைகால்களை நீட்டும் போது..... என் உடலே ஒரு முறை சிலிர்த்து அடங்கும்....

உறங்கும் போது கூட உன்னை தான் நினைத்துக் கொண்டிருப்பேன்.... இடது பக்கத்தில் படுத்தால் உன்னிடமிருந்து அதிக உதைகள் எனக்கு கிடைக்கும்.... ஏன் தெரியுமா.....
கருவுற்ற பெண்கள்  இடது பக்கத்தில் படுத்தால், அவர் அதிகமான  உதைகளை அனுபவிக்கக்கூடுமாம்..... ஏனென்றால் இடது பக்கத்தில் படுப்பதால் குழந்தையின் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் .....இதனால் அவர்கள் அசைவும் அதிகரிக்கும்..... எனவே,  இடது பக்கத்தில் படுத்துக்கொண்டு குழந்தை அதிகமாக உதைத்தால் அது அழுத்தத்தைவிட , குழந்தையின்  ஆற்றலை  பிரதிபலிக்குமாம்..... அன்றிலிருந்து உன் ஆற்றலை உணரவே இடது பக்கமாக படுப்பதை வாடிக்கையாக்கி கொண்டேன்.....

என்னை நீ உதைக்கும் நேரம் எல்லாம் நீ என்னை எத்தனை முறை உதைக்கிறாய் என்று நான் எண்ணிக் கொண்டே இருப்பேன்.... உன்னிடமிருந்து உதைகளை பெறுவதற்காகவே காத்திருப்பேன்.... சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகள் அதிகமாக உதைக்குமாம்.... நீயும் சுறுசுறுப்பான புத்தியாலியான குழந்தை என ,என் கருவில் இருக்கும் போதே நீ உறுதி செய்து விட்டாய் தெரியுமா.....

ஒன்பது வாரங்கள் தாண்டிய பிறகு உன்னிடமிருந்து எனக்கு அதிகமான உதைகள் கிடைத்தது.... சந்தோஷத்தில் திக்குமுக்காடி விட்டேன்..... 16 - 25 வாரங்களுக்கு இடையில் எந்த நேரத்திலும் நீ உதைப்பாய்..... ஆகவே அதை உணர்ந்து மனதார ரசிக்க நான் எப்போதும் விழிப்புடன் காத்துக் கொண்டிருப்பேன்....

16 வாரங்களுக்கு முன்னால் வயிற்றில் சிறிய படபடப்பு ஏற்பட்டது .... மீண்டும் உன் தந்தை என்னை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்....

கவலை வேண்டாம்.... இது இயல்பானது தான்.... என்ற மருத்துவரின் வார்த்தைகளை கேட்ட பின் தான் அவருக்கு நிம்மதியே வந்தது......

24 வாரங்கள் கழித்து, நீ என்னை உதைப்பதை அடிக்கடி உணர்ந்தேன்.... அபோதெல்லாம் ......

என் கண்மணி என்னை உதைக்கிறான்.... என்று கத்தி கூச்சலிட வேண்டும் என தோன்றும்.... அத்தனை ஆனந்தமாக இருக்கும்....

கர்ப்பத்தின் முடிவில் குழந்தையின் உதைகள் குறைந்தால் அதன் ஆரோக்கியமின்மையை குறிக்கும்
" கர்ப்பத்தின் 28 வாரங்களுக்குப் பிறகு குழந்தையின் உதைகள் குறைந்துவிட்டால் , உடனடியாக ஒரு டாக்டரை பாருங்கள் .  உதைகள் குறைவது ஆரோக்கியமின்மையை குறிக்கிறது....இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், பத்து உதைகளுக்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தை பதிவு செய்யுங்கள் .இது சிசுவிற்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்பதையும்,  தாயின் சர்க்கரை அளவு குறைந்து கொண்டிருக்கிறது என்பதையும் குறிப்பிடுகிறது....
குழந்தையின் அசைவுகளை உணரமுடியவில்லை என்றால், ஒரு டம்பளர் குளிர்ந்த தண்ணீரை குடித்துவிட்டு. கொஞ்ச நேரம் நடந்து பாருங்கள். இரண்டு மணி நேரத்தில் 10 முறையாவது  உதைக்கவில்லையெனில், நீங்கள்  மருத்துவரை சந்தித்து ஒரு அல்ட்ராசவுண்ட் பரிசோதனையை பெறுங்கள்....மருத்துவர் ஏதேனும் சிக்கலைக் கண்டறிந்தால்,நீங்கள் அவசரகால சிசேரியனுக்கு உட்படுத்தப்பட வேண்டும்....

என்று யாரோ கூறியது என் நினைவில் இருந்தது.... ஆகவே நீ என்னை உதைப்பதை கவனித்துக் கொண்டே இருப்பேன்..... நீயும்

நான் நலமாக இருக்கிறேன் அம்மா... என்பது போல அடிக்கடி என்னை உதைப்பாய்.... அந்த நாட்களில் தான்... நான் பெண்ணாய் பிறந்ததற்காக ஆண்டவனுக்கு அதிகமான நன்றிகளை சொன்னேன்.... நான் நினைக்கிறேன்.... நான் செலுத்திய நன்றிகளால் ஆண்டவனே சலித்து கொண்டிருப்பான்...

36 வாரங்களுக்கு பிறகு உதைகள் குறைந்தது..... ஆனால் கருப்பையில் இல்லாமல் விலாவில் உதைக்க ஆரம்பித்து விட்டாய்.....

கருப்பையிலேயே உதைத்து உதைத்து விளையாடி என் கண்மணிக்கு சலிப்பாகி விட்டது போல.... அதான் இப்போது புதிதாக விலாவில் உதைத்து விளையாட துவங்கி விட்டது.... என்று உன் தந்தையிடம் கூறி சிரித்தேன்..... அவரும் என் வயிற்றின் மீது தன் கையையை வைத்து..... அடிக்கடி என் மணி வயிற்றில் உன் அசைவுகளை உணர்வார்....


அப்போது தான் .....அவரது உயிரை பெற்றெடுப்பது ஒரு தாயாய்  அளவில்லா மகிழ்ச்சியைத் தந்தது.... இந்த கர்பகாலத்தை போல் சந்தோஷமான காலங்கள் என் வாழ்வில் எப்போதும் இருந்தது இல்லை.... பத்து மாதங்களுக்கு பதிலாக பத்து வருடங்களாய் இருந்தாலும் அதை இனிமையாய் கடந்திருப்பேன்....

எட்டி எட்டி நீ அன்று பாதம் உதைத்தாய்... அதற்காகவே நான்  ஏங்கி  இருக்க ..... நீ மீண்டும் மீண்டும் உதைப்பாய்.... நானும் உன் தந்தையும் ஈருடல் ஓருயிராய் வாழ்ந்தோம் ..... உன் உதயத்தால் தான் மூவுடல் ஓருயிராய் வாழ்ந்தோம்.....

நேற்று நான் கேட்டு பெற்ற வரமாய் என் வாழ்வை நிறைத்தாய் மகனே..... படித்து பட்டம் பெற்று.... வேலை தேடி கண்ணுக்கெட்டா தூரம் நீ பறக்க.... கைகெட்டாததாகிப் போனதோ உன் அன்பான பேச்சுகள் தான்.... அன்று உதைப்பாய் என்று நான் ஏங்கிய போதெல்லாம்... என் ஏக்கம் தீர்க்கவே பல முறை உதைப்பாய் ..... இன்று உன்னுடன் பேச ஏங்கும் என் இதயத்தின் ஏக்கங்கள் எல்லாம்... கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து உன்னிடம் வந்தாலும்.... என் ஏக்கத்தை தீர்க்க மறுப்பது ஏன்....

என் கண்மணியே ஆதிரன் ... உன்னோடு பேச வேண்டும் என நான் கொண்ட ஆசை எல்லாம் நிராசையாய் போய் விடுமோ என பயமாக இருக்கிறது... காலனுடைய பாசக்கற்றை கண்டு நான் அஞ்சவில்லை... மீண்டும் ஒரு முறை உன்னிடம் பாசமாக சில வார்த்தைகள் பேசாமல்... என் காலம் முடிந்து விடுமோ என்று தான் அஞ்சுகிறேன்...

மரணம் என்னை தழுவும் நேரத்தில் கூட நீ என் அருகில் இருந்தால் போதும் ஆதிரா.... நான் நிம்மதியாக கண்ணை மூடுவேன்.... உன் தந்தை உன்னை மிகவும் நேசிக்கிறார்... அவரை கை விட்டு விடாதே....

அம்மா உன்னை மிகவும் நே......

அத்துடன் ஒரு சிறிய கோணலுடன் எழுத்துக்கள் முடிவடைந்திருக்க.... கண்ணீர் துளிகள் ஆங்காங்கே விழுந்து... எழுத்துக்கள் கரைந்து காய்ந்திருந்த இடங்கள் கண்ணில் பட்டது....

சட்டென.... படுக்கையிலிருந்து எழுந்த ஆதிரன்..... தன் தாய் எழுதிய பத்திகளுக்கு மேல் குறிப்பிட பட்டிருந்த தேதி மற்றும் நேரத்தைப் பார்த்தான்....

தேதி : 21.4.2021 , நேரம் : இரவு 10

இன்று தேதி: 22.4.2021....

ஆதிரனின் கண்கள் அதிர்ச்சியில் விரிய... இமைகளை உடைத்து அவன் கண்களிலிருந்து வெளிவந்த கண்ணீர் அந்த டைரியில் பட்டது.... ஏற்கனவே காய்ந்திருந்த தாயின் கண்ணீர் மகனின் கண்ணீர் துளிகளை தாங்கிக் கொண்டது.... பத்து மாதம்  கருவில் தாங்கிய தாய்... கருமாதி செய்த பின்னும் தன் மகனின் கண்ணீரை தாங்க தவறவில்லை.....

அ...... அம்மா.... அம்மா..... என்ன மன்னிச்சிடுமா...... என்று கதறி அழுதான் ஆதிரன்.....  அழுதாலும்..... உருண்டு.. புரண்டாலும்....

காலம் சென்ற பின் பட்ட அன்புக் கடனை தீர்க்க வழியில்லையே.....

அவன் காதில் எங்கோ இருந்து ஒரு குரல் மென்மையாக ஒலித்தது....

மீண்டும் என்னை உதைப்பாயா கண்மணியே....


அன்புடன்....

எபின் ரைடர்....
© All Rights Reserved