வசந்த் அன் கோ காலம் 📻
வழக்கம் போலவே லேட்டா இரவு 8 மணிக்கு தான் காலேஜ்-ல இருந்து கிளம்பினேன். தலைக்கு மேல ப்ராஜக்ட் வேலை.....ஒரு அவுட்புட்டும் வர மாட்டிங்குது, பைனல் ரிவ்யூ வேற நெருங்கிட்டே இருக்கு......மண்ட காய்து....பஸ் விட்டு இறங்கின உடனே எதிர் கடையில சுடச்சுட மிளகாய் பஜ்ஜி வாசம் தூக்குச்சு. அம்மா சொன்ன தால எண்ணெய் பலகாரம் வேனாம்னு 'சூடா ஒரு மசாலா டீ' கேட்டேன். அத வாங்கி குடிக்கும் போது அங்கே ஓடிட்டு இருந்த ரேடியோ பெட்டி "அந்த காலம் அது அது அது வசந்த் அன் கோ காலம்.....இந்த காலம் இது இது இது இதுவும் நம் வசந்த் அன் கோ காலம்..." அத கேட்ட நான் சிரிச்சுகிட்டே, கிலாஸ மேஜ மேலே வச்சிட்டேன். 7 ரூவா போக 3 ரூவா சில்லரைய டீக்கடை கார...