...

9 views

தண்டவாளம்!!
வண்டை வண்டையாய் பேசினால் சண்டை என்றுதானே அர்த்தம்?
அப்படிதானே அனுபவமும் சொல்கிறது?

வீட்டுக்கு வீடு தண்ணீர் குழாய் வந்துவிட்டதால் , குழாயடி சம்பவங்கள் இல்லை என சொல்ல முடியுமா?

அந்த சண்டை சரியான நேரத்திற்கு குழாயை திறந்து விடுவதில்லை எனும் சண்டையாக பரிணாமம் அடைந்திருக்கிறது.


அதனால

வரி வாங்குகிறவர்கள் தான் விழிபிதுங்கி நிற்கிறார்கள் அடிக்கடி தலைவர் வந்து சமாதானம் செய்ய வேண்டியிருக்கிறது

இதுதான் உண்மை நிலவரம்

காலை 6.30க்கு தெரு முழுவதும் சுறுசுறுப்பாக, தண்ணீரை ட்ரம்களில் நிரப்பி கொண்டிருக்க,

விறுவிறுப்பாக சண்டையும் ஆரம்பித்திருந்தது

என்னடி பிரச்சனை?இப்ப எதுக்கு இவ்வளோ கத்துற?
டெய்லி இதே வேலையா போச்சு - நீ தண்ணியே புடிக்க வேணாம் போடி -என்றவர் பொறுக்க மாட்டாமல் பேசுவது தெளிவாக தெரிந்தது

அந்த மனிதருக்கு 40 ஐ கடந்திருக்கும்.

என்றாலும்
கோவம் குறையாமல் கேட்டார்


சேலையை தூக்கி கட்டி, கொண்டையை முடிந்தபடி
என்னய்யா? எப்பவுவே என்னயே குத்தம் சொல்லிட்டிருக்க?

என வலது கையை நீட்டி முகத்து நேராய் ,
மிரட்டும் தொனியில் கேட்டு

வம்புக்கு நிற்கும்
வீம்புக்காரியாய்

அந்தம்மா அவரை முறைத்து பார்க்க

அவரோ,

என்னம்மா பண்றது? படிக்கிற பிள்ளைங்க தண்ணி புடிச்சா படிக்க முடியுமா சொல்லு?
நாமதான் இதெல்லாம் பாத்துக்கணும் என்றார்

அதுக்கு அந்த அம்மா,
சலிப்போடு,
ஆமாம். படிக்குதுங்களாம்

உள்ள போய் பாருங்க
ரெண்டும் செல்போன நோன்டினு இருக்குதுங்க.

இதுங்க யெல்லாம் படிச்சி முடிச்சி கடைசி காலத்துல மருந்து மாத்திரை வாங்கி தர போவுதுங்களாக்கும் என்று முணுமுணுத்தபடியே

மனபாரத்தோடு உடல் வலியையும் தாங்கி கொண்டு


அமைதியாக தன் வேலைகளை பார்க்க தொடங்கினாள்

அந்த 40 வயது மதிக்கதக்க மனிதர்

ஏன்டா, தடிமாடுங்களா.
கூடமாட வந்து உதவி செய்யமாட்டீங்களா?
டெய்லியாடா சொல்லுவாங்க?
என வீட்டை பார்த்து குரல்
கொடுக்க,

ஓடிவந்த ரெண்டும்

இப்ப என்னப்பா, தண்ணி புடிக்கணும் அதான,

புடிச்சிட்டா போச்சு என கோரசாக சிரிக்க,

அந்த அப்பா அம்மா இருவரும் சேர்ந்து ஓரே குரலில்

போங்கடா ,
போய் குளிங்க
அதான்
எல்லாம் முடிஞ்சிடுச்சே
என்று சொல்லி விட்டு ஒருவரையொருவர் பார்த்து பெருமூச்சு விட்டு சிரித்துக் கொண்டார்கள்.
..........x........x......x.......x........x.......x.......x

நீங்களும் சிரித்திருந்தால் கமென்ட் ல சொல்லவும்
© s lucas