வர்ணஜாலம்
வர்ணஜாலம்
அத்தியாயம் – 1
நாயகி அறிமுகம்:
நம் கதையின் நாயகி பெயர் நிஷாந்தினி. சுட்டித்தனமான விளையாட்டு பெண் , வயது 18. நிஷாந்தினியின் குடும்பம் சிறியது. நிஷாந்தினியின் அப்பா பெயர் கண்ணன், அரசு வேலையில் உள்ளார். நிஷாந்தினியின் அம்மாவின் பெயர் வித்யா, இல்லத்தரசி. நிஷாந்தினியின் அக்கா பெயர் உத்ரா, கலைக்கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிறாள். நம் நாயகி பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். நிஷாந்தினிக்கு படிப்பை விட விளையாட்டில் தான் அதிக ஆர்வம். பள்ளி கூடைப்பந்து அணியில் இருக்கிறாள். ஆனால் இது நிஷாந்தினியின் வீட்டில் உத்ராவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஏனெனில் நிஷாந்தினியின் அப்பா கண்ணனுக்கு தன்னுடைய மகள் விளையாடுவது தனக்கு அவமானம் என்று நினைக்கிறார். நிஷாந்தினியின் குடும்பம் ஓர் அழகான சிறு ஊரில் வசிக்கிறார்கள்.
நாயகன் அறிமுகம் :
நம் கதையின் நாயகன் பெயர் ராம். சென்னையில் வசிக்கிறான். ராம் பார்ப்பதற்கு அழகாக இருப்பான், வயது 27. எல்லாம் விஷயங்களிலும் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என நினைப்பவன். ராமின் குடும்பமும் சிறியது தான். அப்பா பெயர் சிரஞ்சீவி, பெரிய தொழிலதிபர். அம்மா பெயர் கல்பனா, இல்லத்தரசி. அண்ணன் பெயர் சித்தார்த், வீட்டில் சிறு பிரச்சினை காரணமாக கோபித்து கொண்டு தனியாக இருக்கிறான். ராம் தனது அப்பாவின் நிறுவனத்தை அப்பாவுடன் சேர்ந்து கவனித்து கொண்டிருக்கிறான்.
கதை ஆரம்பம்:
ராமிற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என அவனது அம்மா கல்பனா நினைக்கிறார். அதனால் ராமிற்கு பெண் பார்க்க தொடங்குகின்றனர். அப்போது தான் ராமின் சிறு வயது தோழி அறிமுகமாகிறாள். தாரா ராமின் சிறுவயது தோழி மட்டுமல்ல வெளிநாட்டில் உள்ள பெரிய தொழிலதிபரின் மகள். இதனால் சிரஞ்சீவிக்கு தாராவை மிகவும் பிடித்து போனது. இதனால் ராமிற்கும் தாராவிற்கும் திருமணமாவது உறுதியானது. ராமும் தன் அப்பாவின் நிறுவனம் வெளிநாட்டிலும் பிரபலமாகும் என்பதற்காக திருமணத்திற்கு ஒப்பு கொள்கிறான். ஆனால் காதலித்து தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பது ராமின் ஆசை.இதை பலமுறை தன் நண்பர்களிடமும் சொல்லியிருக்கிறான். இருந்தாலும் தன் அப்பாவுக்காக கல்யாணத்திற்கு ஒப்பு கொள்கிறான். தாரா மாடலிங் துறையில் இருக்கிறாள். அவ்வப்போது ராமை பற்றிய செய்திகளை கேட்டு ஏற்கனவே ராமின் மீது ஆசை கொண்டவளாய் இருக்கிறாள். இதனால் தான் ராமிற்கு வரன் பார்ப்பதை முன்னரே தெரிந்து கொண்டு அதற்கான வேலைகளை செய்து இறுதியில் வெற்றி அடைகிறாள். இறுதியில் ஒரேயொரு நிபந்தனையுடன் கல்யாணப் பேச்சு முடிவடைகிறது. அந்நிபந்தனை யாதெனில் தாரா இனி மாடலிங்கை தொடரக்கூடாது என்பதே. தாரா இதற்கு ஒப்புக்கொண்டதால் ராம்-தாரா திருமண நிச்சயதார்த்த தேதி குறிக்கப்படுகிறது.
இங்கு நிஷாந்தினி சோகமாக வீட்டின் மாடியில் உட்கார்ந்து இருக்கிறாள். கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த உத்ரா நிஷாந்தினியைத் தேடி இறுதியில் நிஷாந்தினி மாடியில் இருப்பதை தெரிந்து அங்கு போகிறாள். நிஷாந்தினி சோகமாக இருப்பதைப் பார்த்து அவளிடம் சோகத்திற்கான காரணத்தினைக் கேட்கிறாள்.உடனே, நிஷாந்தினி பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிளான கூடைப்பந்து போட்டியில் தன்னுடைய பள்ளி அணி வெற்றி பெற்று மாநில அளவிளான போட்டிக்கு தகுதிப் பெற்றது எனச் சொல்கிறாள். இதைக்கேட்ட உத்ரா சந்தோஷப்பட்டு நிஷாந்தினிக்கு வாழ்த்துக்கள் சொல்கிறாள். “இதற்கு ஏன் நீ கவலைப்படுகிறாய்?” என உத்ரா கேட்க, “போட்டிகள் அனைத்தும் சென்னையில் நடக்கின்றன. அப்பாவுக்கு தெரியாமல் நான் விளையாடியது தெரிந்தாலே, அப்பா என்னை கொன்று விடுவார். இப்படி இருக்க நான் எப்படி சென்னை போக முடியும்?” என நிஷாந்தினி பதிலளிக்கிறாள்.
இதைக்கேட்ட உத்ரா நிஷாந்தினியிடம் சென்னை போக தான் உதவி செய்வதாகச் சொல்கிறாள். உடனே, நிஷாந்தினி “எப்படி எனக்கு உதவி செய்யப் போகிறாய்?” என உத்ராவிடம் கேட்க, “கொஞ்சநேரம் நான் யோசிக்க வேண்டும்” என்கிறாள். அப்போது நிஷாந்தினி “இன்று இரவே நான் சென்னை போக வேண்டும்” என்கிறாள். இதைக்கேட்டவுடன் உத்ரா பதற்றத்தடன் யோசிக்க ஆரம்பிக்கிறாள். அப்போது தான் அவளுக்கு தனது அத்தை மகள் ரம்யாவின் திருமணம் ஞாபகம் வருகிறது. உடனே நிஷாந்தினியிடம் “சென்னை போய்வர எத்தனை நாள் தேவைப்படும்?” எனக் கேட்க, “4 நாள்கள் தேவை” என்கிறாள். உடனே உத்ரா நிஷாந்தினியிடம் “சென்ற மாதம் அத்தை மாமா வீட்டுக்கு வந்து ரம்யாவின் திருமண பத்திரிகை வைக்கும் போது நம்மிடம் என்ன சொன்னார்கள் என்று ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்க, “என்ன சொன்னார்கள்?” என்று நிஷாந்தினி யோசிக்கிறாள். அப்போது உத்ரா “ரம்யாவின் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பாகவே ஊருக்கு வர வேண்டும் என்று சொன்னார்கள்” என்கிறாள். மேலும் “அதை வைத்து தான் உன்னை ஊருக்கு அனுப்பமுடியும்” எனச் சொல்கிறாள். நிஷாந்தினி உத்ராவிடம் உனது திட்டம் தான் என்ன என்று...