நெடிய கழியும் இரா 4
"இறந்து விடவேண்டும் என்ற உந்துதல் ஒன்று தான் பிறருக்கு பாரமாக இருப்பதாக உள்ள உணர்வு, மற்றொன்று சமுதாயத்திலிருந்து துண்டிக்கப்பட்டது போன்ற உணர்வு. இரண்டு உளவியல் நிலைகளால் உண்டாக்கப்படுகிறது. இத்துடன் அவர்களிடம் செய்து முடிக்கும் திறன் இருந்தால், அது ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் அபாயத்தை அதிகரிக்கும். ஒரு மனிதனின் வாழ்க்கையில் அடுத்தடுத்து ஏற்படும் துயரமான மற்றும் கோபத்தைத் தூண்டும் அனுபவங்கள் நாளடைவில் அவரை துயரத்தின் வலியையும், இறப்பின் பயத்தையும் தாண்டி செல்ல வைக்கிறது. ஒருவரின் தற்கொலை முயற்சி அனுபவங்கள் அவரை மீண்டும் முயற்சி செய்யக்கூடும் வாய்ப்பை அதிகரிக்கும்.
- அமெரிக்க உளவியலாளர் தாமஸ் ஜாய்னர் "ஏன் தற்கொலை மூலம் இறந்து போகின்றார்கள்” (Why people Die by Suicide) (2006) என்ற புத்தகத்திலிருந்து.
பலரது துக்கங்களையும் காயங்களையும் கண்ணீர் தடங்கள் மூலம் ஆற்றிய இரவின் இருள் மெள்ள மெள்ள விலகியோட விடியலின் வெளிச்சம் பரவ ஆரம்பித்தது.
கௌதமின் முந்தைய நீண்டு நெடிதான இரவானது ஒரு வழியாக முடிவுக்கு வந்திருந்தது. காலையில் எழுந்து குளித்து முடித்து வந்தவன் மனைவியின் படத்துக்கு விளக்கேற்றிவிட்டு பால் வைப்பதற்கு மயானத்துக்கு காலையிலேயே கிளம்பி சென்றிருந்தான்
அரைமணி நேரத்திற்கு பிறகு வீட்டுக்கு திரும்பியவன் மனைவியின் அஸ்தியை புகைப்படத்தின் முன் வைத்து விட்டு அன்றைக்கு செய்திருந்த உணவு படையலிட்டு குடும்பம் முழுவதும் சாமி கும்பிட்டனர்.
வழிபாடு முடித்து வெளியே கிளம்பிய மகனை சாப்பிட்டு போகச் சொல்லி அழைத்து நிறுத்தினார் கௌதமனின் தாயார் பூங்காவனம்.
"ம்மா... கிளம்பும் போதே எங்கே போறேன்னு கேட்டா எப்படி போற வேலை உருப்படும். எனக்கு சாப்பாடு வேணாம். வெளியே பார்த்துக்கிறேன். நீங்க எல்லாம் சாப்பிடுங்க. குழந்தைகளை சாப்பிட வைங்க" என்றுவிட்டு வெளியேற போனவனை மீண்டும் நிறுத்தியது அவரது குரல்.
"அஸ்தியை நம்ம கிணத்து தண்ணீல கரைக்கணும். அப்பதான்பா காடாத்து சடங்கு முழுசா பூர்த்தியாகும்"
கோபத்துடன் திரும்பியவன் தாயின் முகவருத்தத்தை கண்டு ஒரு கணம் தாமதித்து விட்டு அழுத்தமாகவும் அதேநேரம்...