...

2 views

🤍ராட்சசனின் ரட்சகி =3🤍
"அனு யார்கூட..? பேசுற! என்று கேட்டவுடன்" நான் அப்புறம் பேசுறேன் ஓகே பை என்று போனை ஆப் செய்தாள் " அனு.
ஹேய் அக்கா..., friend.....college friendபோதுமா! என அவளை பார்க்க ஜானகியோ...,ஹிம்ம் "சரி வா என்று அவள் மேல் ஒரு கண்ணு வைத்திடு
ஜானு இவள் ஏதோ செய்யுறாள் கடவுளே இவளுக்கும் ஆகாஷ் நல்லபடியா, அப்பா அம்மா ஒத்துக்கணும் என்று வேண்டிக்கொண்டே சென்றாள்.."
ஆகாஷ் வீட்டிற்கு வரும்போது..,பொறுமையாக "வண்டியை நிறுத்தி விட்டு மெதுவாக கதவை திறக்க போக ..,அங்கு அவனின் தந்தை குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டிருந்தார்" 'ஹய்யோ' ஐயா.., "தூங்கலை என்று பயந்து கொண்டே உள்ளே வந்தவனை ஆராய்ந்தார் தந்தையின் பார்வையில் சந்திக்காமல் உள்ளே செல்ல முயன்றவனை.., பரத் எங்க ஊர் சுத்திட்டு வரீக என்றதும்."
ஐயா... "நண்பன் வீட்டுக்கு போயிட்டு வரேன் என்று ஒவ்வொரு வார்த்தையாக சொல்லி முடிக்க..."
ஹிம்ம்..., சரி " சாப்பிட போங்க.., உங்களுக்காக அம்மா காத்திட்டு இருக்காக என்றதும் நடைப்பயிற்சிக்கு வெளியில் சென்றார்" தப்பிச்சோம் சாமி என்று அம்மா...,என்று 'கூப்பிட்டு கொண்டே உள்ளே செல்லும் முன்.., கை கால் அளம்பி விட்டு, முகம் துடைத்தப்படியே! அமர மூக்கை துளைக்கும் பிரியாணி வாசம் அம்மா இன்றைக்கு பிரியாணி ஆஹ்...
ஆமாம் பா உனக்கு பிடிக்குமே னு ஐயா தான் ஆட்டுக்கறி எடுத்து கொடுத்துட்டு நல்ல செய் புள்ளை இதை தான் விரும்பி சாப்பிடுறாக என்று கூறினார் பிறகு
சமைச்சு வெச்சேன் ஒரு பிடிகூட நீ வராமல் சாப்பிட மாட்டேன் காத்திருந்தாக நீ தான் வரலை என்றதும் சாப்பிடுங்க என்று மல்லுகட்டாத குறை பா... போதும் போதும் என்றே கொஞ்சமா கொரித்துவிட்டு போனார் இனிமேல் லீவு நாளில் ஐயாவோடு கொஞ்சம் சாப்பிடும் நேரம் மட்டும் அவரோடு இரு புரியுதா.. "
அவனுக்கோ பச்சாத்தாபம் கொண்டு மனம் அவனை திட்டி தீர்க்க சரி மா இனிமேல் அப்படியே செய்கிறேன் என்றான் ஆகாஷ். ஆமா.., "சின்னவரே யாரு அந்த பொண்ணு.., அழகா சாமி படத்தில் இருக்கும் அந்த இலட்சுமி மாறி இருந்தா..., உங்கஐயா சொன்னாவோ சாப்பிட்டு கொண்டிருந்தவன் புரையேற ஹைச்சோ போச்சு தெரிஞ்சிட்டா.., அம்மா அப்பாட்ட நீங்கள் தான் சம்மதம் வாங்கி தரணும் என்ன ப்பா அந்த மனுஷன் கிட்டையா ஆஹ் இழுத்தவர் அம்மா... அம்மை என்று செல்லம் கொஞ்சினான் அவரின் அருகில் வந்து ஹும்கூம் என்ற ஒரு சத்தத்தில் அவனோ ஐயா பேசியதை கேட்டுவிட்டார் போலவே என்று முழிக்க பரத் எக்ஸாம் எப்போ...?
ஐயா இந்த மாசம் இறுதி உனக்கு நம்பிக்கை இருக்குல வெற்றி பெற்றுவிடுவாய் தானே ஆமாம் ஐயா கண்டிப்பா எனக்குத்தான் அந்த போஸ்டிங் கண்கள் மிளிர கூறினான்... அதனை கண்டவர்
உன் பேர் பரத் ஆகாஷ் என்று வைத்ததே இந்த தேசத்தை காத்த என் தாத்தா பெயர்...
பேரில்மட்டும் அல்ல உருவத்திலும் அவரை போல் நீ இருப்பதால் தான் இந்த பேரே உனக்கு
சூட்டினேன் அவர் நேர்மையான சிப்பாய் ஆஹ் ராணுவத்தில் இருந்தார் அவரை போல் நீயும் வரவேண்டும் என்பது என் ஆசை என முதலில் நினைத்தேன் உனக்கும் அதில் விருப்பம் இருப்பது போல் தோன்றியது அதான் பா சரி பொண்ணு பேரு என்ன..? அது..,அது அனு பா.... என்றதும் வெறும் அனு மட்டுமா இல்லை இல்லை பா அனு காமாட்சி என்றதும் நல்ல பேர் நம்ம குலதெய்வம் பெண் தெய்வம் தான் என்றதும் அவங்க அப்பா அம்மா விடம் நாளை போய் பேசலாம் என்றதும். ஐயா.... என்று அவனின் மனம் மகிழ்ந்து அவரை ஓடி சென்று தழுவி க்கொண்டான் நீ எங்களுக்கு ரொம்ப முக்கியம் பா என் தலை புள்ள வெளியூரில் இருக்கிறான் அம்மா அப்பா இருக்கிறார்கள் என்று நினைப்பே இல்லாமல் அவனின் குடும்பம் மட்டுமே... என்று ஆதங்கம் பட ஐயா அண்ணன் வேலைக்கு போனதால் தான்... என்று ஆரம்பிக்க போதும் வேண்டாம் பரத் நம்ம நெனப்பே இல்லாதவனை நாம் நினைப்பதே தவறு தான் என்று வேதனை வெளிப்பட்டது... "
ஐயா... என்றதும் விடுப்பா.., போ போய் சாப்பிட்டு தூங்குங்க என்று கூறிவிட்டு அவரின் அறையை நோக்கி சென்றார்..
ஜானகி நடுவில் அமர்ந்து இருக்க தந்தை, தாய் இருவரும் அருகே அருகே அமர்ந்து அனுவை பார்த்து கொண்டிருக்க "அவள் சின்ன புள்ளை உனக்கு எங்க டி..,போச்சு அறிவு.. ஜானகியை திட்டினார்.ரேணுகா (அம்மா)
ரேணு விடு..., ராஜன்(அப்பா ) சரி ஒத்துக்கொள்கிறோம் னு ஒரு பேச்சிக்கு வைத்துக்கொள்வோம் ஜானகியை இருக்கும்போது உனக்கு எப்படி திருமணம் செய்ய சம்மதிப்பேன் அனுவை பார்த்துக்கொண்டு கேட்டார் ராஜன்.
அப்பா..., அக்கா விற்கும் நல்ல மாப்பிள்ளை பார்த்துவிடலாம் இரெண்டு பேரின் கல்யாணத்தை ஒன்றாக வைத்திடலாம் என்று ஐடியா கொடுக்க... எல்லாம் பக்கவா பிளான் பண்ணிட்டு தான் இருவரும் எங்கிட்ட சம்மதம் மட்டும் கேட்கிறீங்க அதானே ..!ஹைச்சோ..!அப்பா இல்லை இல்லை அவளை தான் நாளை பொண்ணு கேட்க வந்தாலும் வருவார்கள்.., எனக்கு இல்லை "யார நீங்க சொல்லி.., கை நீட்டினாலும் தடால் அடியாக அது பாதாளம் என்றாலும் விழுவ தயார் என்று நாடகப்பாணியில் கூறும் தன் பெரிய பெண்ணை எண்ணி பெருமையாக இருந்தது ராஜனுக்கு" ஆனால் கூடவே அவளின் "குறும்பை எண்ணி சிரிக்க ஆரம்பித்தனர்... சரிடாம.. அவர்கள் யாரு.., எந்த ஊர் என்ன பன்றான் பையன் என்று ராஜன் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைக்க ஆரம்பித்தார். அனுவோ பேரு ஆகாஷ் பா காவல்துறை எக்ஸாம் எழுதப் போறான் கண்டிப்பா வேலை கிடைச்சிடும் என்று கூறினாள் என்ன மா இப்போதுதான் வேலையே என்றதும் சந்தேகமாக இழுத்தவர் அதற்குள் அப்பா சொந்த தொழில்தான் அப்பா காமாட்சி பட்டு சில்க் கடையின் முதலாளியே அவன்தான் என்று கூற என்னடாமா சொல்ற நம் வேண்டிய பட்டவர் போல தோன்றுதே உண்மையா...ஆமாம் பா நம்ம குடும்பத்திற்கு எங்கபுடவை எடுத்தால் ராசி னு சொல்வீங்களே அதே தான் நமக்கு மட்டும்
இல்லை எல்லோருக்கும் அந்த கடை தான் ராசி என்கவும் "ராமையா" ஐயா அவர்கள் மகனா ஆமாம் பா என்றாள் ஜானகி அப்பா கேள்விக்கே வேலை இல்லை நல்ல குடும்பம் என்ற திருப்தியோடு வரட்டும் நாளைக்கு பேசிக்கொள்வோம் என்று அவரவர் தூங்க செல்ல இங்கு ஜானகியை கட்டி பிடித்து கொண்டு அன்பு மழையில் நனைத்தாள் அனு... அவளோ விடு டி போ போய் உன் போனுக்காக ஒரு ஜீவன் வெயிட் பண்ணும் அவளை அனுப்பிவிட
ஜானகி தூங்க சென்றாள் எப்போதும் டைரி எழுதும் பழக்கம் இருப்பதால் எழுதியவள் தொண்டை காய்ந்தது சரி தண்ணீர் குடிப்போம்என
பாட்டில் நீரை மட மட வென்று அருந்திவிட்டு ஏதோ சத்தம் இது யாரு என்று பார்க்க போனால் இந்த நேரத்தில் ஜென்ஸ் குரல் ஹஸ்கி வாய்ஸ் ளா என்று அனுரூமில் என்றதும் ஓ.... என்று அதற்குமேல் இங்கு நின்றால் நாகரிகமா இருக்காது காதல் ஜோடி ரெண்டும் பேசட்டும் என சிரித்துக்கொண்டு அவளின் அறைக்கு சென்றாள் .
தொடரும் 🌼🙏
அநபாயன் 🤍

© Ash(ஈசன் )