...

5 views

மாயை பேசுதடா 2
கிச்சன் கேமராவை பார்த்து மயங்கி விழுந்த பூபதி சிறிது நேரம் கழித்து எழுந்தான் .

மயக்கம் தெளிந்து மீண்டும்  கேமராவை ஆன் செய்து பார்த்தால்  "பாத்திரங்கள் தானாய் நகர்கின்றது. குடத்தில் இருக்கும் தண்ணீர்  பெரியப்  பானையில்  தானாகவே ஊற்றப் படுகிறது. வெங்காயம், தக்காளி இங்குமங்கும் பறக்கின்றன. "

௧டவுளே, இந்த வீட்டில் என்ன தான்  நடக்குது. ஒன்றுமே புரியவில்லை. ஒருவேளை இதற்கு முன் இந்த வீட்டில் இருந்தவர்கள் இறந்து அவர்களின் ஆவி சுற்றுதோ..." என்று  புலம்பிக் கொண்டே  அன்று நாள் முழுவதும் பயத்துடனும், குழப்பத்துடனும் கடத்தினான்  பூபதி.

இன்று ராத்திரி கொஞ்சம் நேரம் கழித்து வீட்டிற்கு போகலாம். அப்போது தான் வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்க்க முடியும் என்று முடிவு எடுத்தான்
பூபதி.

நேரம் கழித்து வந்த பூபதி வீட்டு கதவை திறந்து பார்த்தான். வீட்டில் யாரும் இல்லை. ஆனால், பொருட்கள் கலைந்து இருந்தது. கிச்சனில் சாப்பாடு வேலை முடிவு பெறாமல் இருந்தது....