...

1 views

ஸ்நான ப்ராப்தி(சிறுகதை)கவிஞர்,எழுத்தாளர்:மாசிலாமணி.
1985களில் காசியின் அகன்ற வீதி கங்கைக் கரையுடன் இணைந்து நீண்டு சென்றுகொண்டிருந்த காலம்.வரிசை மாறாத பழங்கால கோயில் மாடம் போன்ற வீடுகள்.எதிரேதான் அனைத்து ஜீவன்களின் பாபம் போக்கும் புண்ணியநதி கங்கை அமைதியாக தவழந்துகொண்டிருக்கிறாள்.இடையிடையே கோயிலுடன் கூடிய மயானப் படித்துறைகள் சடலங்களை சாம்பலாக்கிக்கொண்டிருக்கிறது.
மென்மையான ஒரு குரல் மாடவீட்டிலிருந்து புண்ணியம் நாடி வந்த விருந்தினர்களின் காதில் விழாமல் இல்லை.அந்த வீதியில் அலமேலு பாட்டியை தெரியாத ஆளே இல்லை எனச் சொல்லலாம்.வருபவர்களுக்கு எல்லாம் இதிகாசப் புராணக் கதைகளைக்கூறி காசி பெருமை பேசியே வாழ்ந்து வருபவள்.பேரனை
அப்பா மஹாதேவா,இங்க சித்த வாப்பா என்றாள்.மஹாதேவன் புலம்பியபடியே வார்த்தை கொஞ்சம் அழுத்தமாக என்ன பாட்டி,சொல்றதை சொல்லு என்றான்.
இப்ப என்ன செய்யப் போற.
குளிக்கப்போறேன்.சித்த பொறுஎன்றாள்.
சிறிய வீடுதான் என்றாலும் வீட்டின் நடுவில் முற்றம்.அதன் ஈசான மூலையில் கிணறு ஒன்று உண்டு.இது காசியில் சாத்தியம்தான்.
பாட்டி பேச்சைத் தொடர்ந்தாள்.
அகத்துக்குள்ளேயே எத்தனை நாளைக்குத்தான்குளிச்சிண்டிருப்பே.
வருஷம் முப்பது கடந்தாச்சு.சின்ன வயசுல ஐஞ்சாறு முறை கங்கையில குளிக்க வச்சிருக்கேன்.அதுக்கப்பறம் கங்கையில ஸ்நானம்
செஞ்சிருப்பியா.உங்கம்மாவாவது சொல்லப்படாது.
அடுப்பங்கரையிலிருந்து ஒரு குரல்.
நான் சொன்னா எங்க அவன் கேக்கறான்.உங்க செல்லப் பேரானாச்சே என்றாள் மென்மையான குரலில் மங்களம்.
சரி.நான் பாத்துக்கரேன்.உன் வேலையப் பாரு என்றாள் மருமகளிடம் பாட்டி.
யப்பா,குழந்தை மஹாதேவா ஊர்லேர்ந்து பெரியப்பாவும் பெரியம்மாவும் கங்கை ஸ்நானம் செய்ய வந்துருக்கா.என் பையனோ காசி மடத்துல குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க போயிருக்கான்.உங்க அக்கா தையல் வேலையா இருக்கா.தங்கை பரீட்சைன்னு படிச்சிண்டிருக்கா.உன் தம்பியோ அப்பாகூடவே...