...

12 views

கண்ணாட்டியின் காதலன்
தனது கையிலிருந்த அலைப்பேசியை ஆட்டிய படியே, காதொலிப்பானில் கேட்டுக்கும் குரலுக்கு பதில் சொல்லி கட்டளையிட்டபடி  தன் நண்பர்களுடன்  இணைய வழியில் இணைந்(த்)து தான்  ' ஃபிரீ ஃபயர்' கேம்மை விளையாடிக் கொண்டிருந்தான் வினித்.  நிசப்தமாக இந்த கூடத்தில் அவனது அரவத்தைத் தவிர வேற சப்தம் இல்லை.

தலையை அலைப்பேசிக்குள் திணித்து விட்டுத் தீவிரமாக விளையாடிக் கொண்டிருந்தான். அழைப்பு மணியோசையை கூட காதில் வாங்காதவாறு அலைப்பேசியில்  அதிக சத்தத்துடன் விளையாடினான்.

இரண்டு மூணு முறை அழைப்பு மணி அடித்து ஓய்ந்தது. அதை அடித்தடித்து ஓய்ந்து போனான் கிரி. கதவு திறந்து தானிருந்தது. ஆனாலும் உள்ளே போக சங்கட்டமாக இருந்தது. தன் நண்பனுக்கு திருமணமாகி மூன்று மாதங்களாகிருக்கும் பட்சத்தில் சற்று உரிமையுடன் செல்ல முடியவில்லை. கதவை தட்டிப் பார்த்தான்." வினித் "என்று மூன்று முறை அழைத்தும் பார்த்தான்.அவனை உள்ளே அழைக்க யாருமில்லை.

அது மாலை ஏழு மணி, வேலை விஷயமாக அந்தப் பக்கம் வந்தவன் இவனை பார்த்துவிட்டு போலாம் என்று எண்ணி தான் வந்தான். அதுவும் அவனிடம் ஐந்து மணிக்கெல்லாம் பெர்மிஷன் கேட்டு விட்டான். முதலில் வெளியே பார்க்கலாம் என்று கிரி சொன்னான். வினித் தான் தடுத்து வீட்டுக்கு வர சொன்னான். ஆனால் அதையே மறந்து விளையாடிக் கொண்டிருந்தான்.

'ஒருவேளை இந்த டைத்துலே ரொமான்ஸ்ஸ ஆரம்பிச்சிருப்பானோ ! கதவை பூட்டாமலா? ஒருவேள அவன் இல்லையோ !' என்று வாசலைப் பார்க்க, அங்கே நின்ற வண்டி அவன் இருப்பைக் காட்டியது.

"சரி மாப்பிள ரொமான்ஸ்ல இருப்பான் போல. நாம இன்னொரு நாள் வருவோம்" செல்ல இருந்தவனின் காதில் வினித்தின் கத்தல் கேட்டது."மச்சான், அவனை சுடு டா !" உணர்ச்சி வசத்தில் அவன் கத்த, கிரி தான், "எதே சுடணுமா?" என்று உள்ளே நுழைய, அங்கே நீள்விருக்கையில் தீவிரமா விளையாடி கொண்டிருக்கும் தன் நண்பனைப் பார்த்தவன், கொலைவெறியானான்.

"இந்நேரம் சிஸ்டர் கூட பேசி, சிரிச்சி  ரொமான்ஸ் பண்ணி குழந்தைக்கு ட்ரை பண்ணாம, குழந்தை மாதிரி விளையாட்டிட்டு இருக்கான்" என்று தலையில் அடித்து கொண்டவன். அவன் அருகே சென்று  "மச்சான்" என்று தோளைத் தொட, பக்கென்று பதறி அமர்ந்தான் வினித்.

"டேய் நான் தான்டா ! "என்றான்.

"ஏய் மச்சான் ! வா டா ! "என்று அவனை அருகே அமர வைத்து, செல்போனைத் தூர வைத்தான். "என்ன மச்சி, வீட்டுக்கு  ஆள் வந்ததுக் கூட தெரியாம, அப்படி என்ன  விளையாட்டு உனக்கு?"

"இல்லடா கிரி !  நம்ம ஃபிரண்ட்ஸ் தான் ஆன்லைன்ல விளையாடலாம் 'வாடா' கூப்பிட்டானுங்க சரி நாமலும் விளையாடலாம் தான் ' ஃபிரீ ஃபயர்' கேம் விளையாட்டிட்டு இருந்தேன். இன்டெர்ஸ்ட் போயிட்டு இருந்துச்சி மச்சான்,  அதான் டா உன்னை கவனிக்கல !" என்று காரணத்தை சொன்னான்."ஏன் மச்சி வீட்ல சிஸ்டர் இல்லையோ?" வீட்டை விழியால் அலசிப்பார்த்து விட்டுக் கேட்டான்.

"ம்ம்ம்...  உள்ள இருக்கா டா ! " என்றான். அவனை ஒரு மாதிரி பார்த்தவன், "உனக்கு மேரேஜ் ஆகிடுச்சி டா,  சிஸ்டரோட டைம் ஸ்பென்ட் பண்ணாம,
இன்னமும் குழந்தை மாதிரி விளையாடிட்டு இருக்க !"
இது போல் பலர்  சொல்லி கேட்டு அவனுக்கு அலுத்துப் போய் விட்டது. கல்யாணமான ஆண்கள் பெண்களிடம் சொல்லும் அதிக அறிவுரைகளில்  இதுவும் ஒன்று. கணவன் மனைவியுடனும் மனைவி கணவுடனும் நேரம் செலவிட வேண்டும் என்பது. எவ்வளவு  நேரத்தை தான் அவர்களுக்கு செலவிட 'எப்போது தான் தங்களுக்காக செலவிட ?'என்று கேட்டால் அதற்கும் பதில் வைத்திருக்கார்கள்.
'கணவன் மனைவி என்று  வந்தபின் தனியாக நேரத்தை செலவழிக்க என்ன இருக்கறதென்று?'கேள்வி வேறு. இவர்களை  கண்டாலே ஆத்திரம் தான் வரும். 

"வா மச்சி ! காஃபி சாப்பிட்டு கிட்டே பேசலாம்" என்று அவனை கிச்சனுக்கு அழைத்து சென்றான். அவனும் அவன் பின்னே சென்றான். "சிஸ்டர் உள்ள இருக்காங்கனு சொல்ற? தூங்குறாங்களா? வெளிய வரவே இல்ல !" என்றவனின் சந்தேகத்தை கேட்டு நகைத்தவன், "அவளா ! அவ லவ்வர் கூட டைம் ஸ்பெண்ட்  பண்ணிட்டு இருக்கா? அதான் டிஸ்டர்ப்  பண்ண வேணாம் கூப்பிடல மச்சி !" என்று பாலை  அடுப்பில் வைத்து சூடேற்றினான்.

"எதே லவ்வர் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு இருக்காங்களா? என்னடா சொல்ற?" என்று பதறிப்போனான்."அட ! ஆமாடா  டெய்லி டூஸ் ஆர் திரி ஹார்ஸ் அவ, அவ லவ்வரோட டைம் ஸ்பெண்ட் பண்ணுவா . நான் அந்த டைத்துலே  அவள டிஸ்டர் பண்ண மாட்டேன் டா " என்றான் அசட்டையாக. அதை கேட்டவனின் முகமோ அஷ்டகோணலாக சென்றது. அவன் முகத்தைக் கண்டு நகைத்தான். அதில் கடுப்பான
கிரி, "என்னடா இதெல்லாம்?"என்றான்.

"மேரேஜ்க்கு அப்றம் என்னால என் லவ்வர மறக்க முடியலனு சொன்னாள்.நானும் என்ன பண்ண ? சரி  டெய்லி டூ ஹாரஸ் மட்டும் டைம் ஸ்பெண்ட்  பண்ணிக்கோனு சொல்லிட்டேன். ஈவினிங் சிக்ஸ் டூ எயிட் அவ லவ்வரோட டைம் ஸ்பெண்ட் பண்ற டைம் டா " என்றான் பெருமையாக.

"எதே டைம் ஸ்பெண்ட் பண்ணிக்கோனு சொல்லிட்டீயா? அட கருமம் புடிச்சவனே ! என்ன பொழப்பு டா இது? அவங்க லவ்வரை மறக்க முடியலேன்னு சொல்லுவங்களாம் இவரும் டைம் ஸ்பெண்ட் பண்ணிக்கோனு பெருமையா விட்டுக் கொடுப்பாராம். அவங்க லவ்வர மறக்க  முடியலேன்னா,  அவங்கள அவன் கூடவே அனுப்பி வைச்சிட வேண்டியதானே டா ! அதை விட்டு டைம் ஸ்பெண்ட் பண்ணிக்கோன்னு விட்டிருக்க. என்ன கருமம் டா இது ?" என்று இருமுறை அவன் தலையில் அடித்துக் கொள்ள, அவனது புரிதலைக் கண்டு, உள்ளுக்குள் நகைத்துக் கொண்டான்.
கிரி அவனை காரி துப்பி, கண்டபடி திட்டினான். அவனோ புன்னகை முகம் மாறாமல்  நின்றான்.

"உன்னை அவ்வளவு திட்றேன். இப்படி வெட்கமே இல்லாமல சிரிச்சிட்டே இருக்க, எங்க டா போச்சி உன் வெட்கம்,மானம் எல்லாம்? எங்க போய் அடகு வச்ச? நீ பண்ற காரியம் உங்க வீட்டுக்கு தெரிஞ்சா, என்ன  நினைப்பாங்க? அவங்க மானமும் தான டா போகும் !அதை யோசிக்காம பொண்டாட்டிக்காக எதையோ செய்றேன், உன்னை நீயே அசிங்க படுத்திட்டு இருக்க டா ! "

அவன் கத்திக் கொண்டிருக்க, கப்பில் இருவருக்கும் சக்கரையும் ப்ரு காப்பி பொடியையும் போட்டு கலந்தவன், சூடான பாலை அதில் ஊற்றினான். அதை கண்ட கிரியோ பாலை விட இன்னும் சூடானான்.

"நீ பண்ற வேலைக்கு பேர் என்னானு தெரியுமா? ' மாமா வேலை '. முதல் முறையா பொண்டாட்டிக்கு மாமா வேலை  பார்க்கறவன்  நீயா தான் இருப்பா ! உனக்கு என்ன சிலையாடா வைக்கற  போறாங்க, மனைவியோட காதலுக்கு விளக்கு பிடிச்சவன்னு. எதிலும் பெஸ்ட் எதிர்பார்க்கறவன் டா நீ ! நீ போய் இப்படி டா இவங்கள சூஸ் பண்ணின?  என்னால நம்பவே முடியல மச்சான்..." தன் ஆதங்கத்தை கொட்டினான்.

"பேசி முடிச்சிட்டீயா மச்சி? இந்தா இத பிடி" கப்பை அவனிடம் நீட்டினான்." இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல"

"பிடி டா"என்றான்  அழுத்தமாக அவனிடம் கப்பை நீட்டியப்படி. அவனும் வாங்கி கொண்டான், ஆனால் பருகவில்லை. " வா மாடிக்கு போலாம்" என்று கதவை சாத்திவிட்டு கிரியுடன்  மாடியேறினான். இருவரும் அமைதியாக காபியை பருகினார்கள் கிரியின் கோபத்தை கண்டு நகைத்தபடி காபியை பருகினான்.

"ஏன் மச்சி ! கல்யாணமானதுக்கு அப்றம் ஒரு பொண்ணு அவங்க அப்பா,  அம்மா, கூட பிறந்தவங்க,  அவங்க வளர்ந்த வீட்டை விட்டு வருவது போல  அவங்ளோட காதலையும் விட்டுடு வரணும் இல்லையா?" என்ற கேள்வி கிரிக்கு முட்டாள் தனமாக இருந்தது .

"அதுக்காக, சீதனமா அவனோட லவ்வரை கூடவே கூட்டிட்டி வர சொல்றீயா டா. உனக்கு பைத்தியம் தான் டா பிடிச்சிருக்கு ! ப்ராட் மைண்டட்னு சொல்லி, கேனத்தனமா யோசிக்கற டா நீ !" என்றான்.

"மச்சி என் பொண்டாட்டியோட லவ்வர் யாருன்னு தெரியுமா உனக்கு?"

"யாரா இருந்தா என்னடா இதெல்லாம் தப்பு டா !" எனக் கத்தினான்." அட லூசு பயலே ! என் பொண்டாடியோட லவ்வர்  புக்ஸ் டா !" என்றான். " எதே புக்ஸா ?" என கண்மணிகள் தெரித்துவிடுமளவு கண்களை விரித்து கேட்டான்.

"ம்ம்ம்.. புக்ஸ் தான். அவளுக்கு  சின்ன வயசிலிருந்து  புக்ஸ் படிக்கிறதுன்னா ரொம்ப இஷ்டம். என்னால புக்ஸ் படிக்காமல் இருக்க முடியாதுனு அவளுக்கு பிடிச்சத சொல்லும் போது என் கிட்ட  ஷேர் பண்ணிகிட்டா !  'ப்ளீஸ் என்னை புக்ஸ் படிக்க விடுவீங்களானு? 'என்  கிட்ட பெர்மிஷன் வேற கேட்டாள்.

"என்கிட்ட ஏன் பெர்மிஷன் கேட்கற? உனக்கு பிடிச்சத செய்னு சொன்னேன். அதுக்கு அவ  சொன்னத கேட்டு  சிரிக்கறதா ? வருத்தப்படுறதானு? தெரியல டா" என்றவன் தன் மனைவி பகிர்ந்ததை பகிர்ந்தான்.

வழக்கமா கல்யாணமாக போற பெண்கள்  கிட்ட அவங்க அம்மா சொல்ற விஷயம்,'புருஷனுக்கு என்ன பிடிக்குமோ அதை செய். அவர் மனசு  கோணாத படி நடந்துக்க ! அவர் சொல்றத படி கேளுனு  அதான?வேற என்ன சொல்லி அனுப்பி வச்சிட போறங்க. இதுல என் மாமியார், என் ஒயிப் கிட்ட, "அங்கயும் புத்தகத்தை எடுத்து வச்சி படிச்சிட்டு இருக்காத, மாப்பிள்ளைக்கு தேவையானத செய்னு !'
ஏன் கிரி கல்யாணமாகிட்ட,  பொண்ணுங்க புருஷனுக்கு பிடிச்சத மட்டும்  தான் செய்யணும்,  புருஷன் மனசு கோணாத படி தான் நடந்துக்கணும், புருஷன் புருஷன் அவனையே உலகமா தான் சுத்தி வரனும் இல்ல, அவங்க மனைவியா? இல்ல நமக்குனு எழுதி வச்ச அடிமையா? நீ வந்ததும்  கேட்டியே, சிஸ்டர் கூட டைம் ஸ்பென்ட் பண்ணாம விளையாடிட்டு இருக்கனு, எனக்கு ஒன்னு மட்டும் புரியல டா ! மேரேஜ் ஆகற வரைக்கும் நாம நமக்காக நமக்கு பிடிச்சத தான் செஞ்சுட்டு இருந்தோம். மேரேஜ் ஆனதும் அதெல்லாம் விட்டுடு ஒயிப்கூட ஹாஸ்பண்ட் கூட  டைம் ஸ்பெண்ட் பண்ணனும் இல்ல, அப்போ எப்போடா  நமக்கு பிடிச்சத நாம செய்றது? மேரேஜ்னா என்ன ரெண்டுபேரோட ஃப்ரீடத்த பறிக்கறதா?"  அவன் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலின்றி இருந்தான் கிரி.

"எங்கள பொறுத்த வரைக்கும், அவங்களுக்கனான ஸ்பேஸ் அவங்களுக்கு குடுக்கணும் அதான் ப்ரீடம்
எங்க மேரேஜ் லைஃப்ல  நான் அவளுக்கும் அவ எனக்கும் இந்த ஃப்ரீடம் கொடுத்திருக்கோம். எங்க பேமிலிஸ்காக நாங்க வேலைக்குப் போறோம். எங்க மேரேஜ் லைஃபக்காக நாங்க டைம் ஸ்பெண்ட் பண்றோம். அண்ட் அதே நேரம் எங்களுக்காகவும் நாங்க டைம் ஸ்பெண்ட் பண்ணிக்கிறோம். இப்போ நீ வந்த நேரம் கூட அவங்க அவங்களுக்காக  ஸ்பெண்ட் பண்ற நேரம் தான். இந்த டைம் அவ புக்ஸ் படிப்பா,  கதை எழுதவா ! நான் ஃபிரண்ட்ஸ் , கேம், பைக் வீடலையும் இருப்பேன் வெளியேவும் ஊர் சுத்துவேன். அப்றம் ரெண்டு பேரும் சேர்ந்தே சமைப்போம் அந்த டே ல நடந்தத ஷேர் பண்ணிப்போம். அதுக்கு அப்றம் எல்லாம் நாங்க சேர்ந்து செலவழிக்கற. டைம் தான். மார்னிங் ஆபிஸ் ஸ்கூல்னு ரன்னிங் காம்பெடிசன் தான். இது தான் எங்க வாழ்க்கையோட டைம்டேபிள். இது சரியா? தப்பா? தெரியாது, பட்  எங்க ரெண்டு பேருக்கும் இது கம்போர்ட்பிள் அண்ட் பீஸ் ஃபுல் இருக்கு.

இது எங்க அம்மா அப்பா வந்தாலும் நாங்க ஃபலோவ் பண்ணுவோம். குழந்தைங்க வந்தால் அதுக்கு தனி பிளான். ஆனால் யாருக்காகவும் எங்க ஸ்பேஸ் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

சின்ன வயசில இருந்து புடிச்சி செய்ற விஷயத்தை, கல்யாணம் ஆகிடுச்சேனு ஏன் செய்யாம இருக்கணும் ? ஏன் இன்னொருத்தருக்காக  மாத்திக்கணும். முக்கியமா  பொண்ணுங்களுக்கு தான் சொல்லுறேன். பசங்க, எப்படியாவது ஃபிரண்ட்ஸ் , அது இதுனு வெளியே ஊர் சுத்துறோம். ஆனா பொண்ணுங்களுக்கு நாம வெளிய கூட்டிட்டு போன மட்டும் தான் வெளிய வருவாங்க,  சிலர் அதுவும் பண்றது இல்ல ! எப்ப பாரு வேலை வேலைன்னு இருக்கறது. வீட்ல இருக்க லேட்டிஸ்க்கு கூட கொஞ்சம்  டைம் கிடைக்கலாம். ஆனால் வேலைக்கு போற லேட்டிஸ்க்கு ஆபிஸ் ஸ்கூலுன்னு அங்கயும் வேலை பார்த்துட்டு வீட்டுக்கு வந்தும் வேலை பார்க்கறாங்க, ஏதோ அவங்களுக்கு ஒரு மணி நேரமோ இரண்டு மணிநேரமோ தான் கிடைக்கும்  அந்த டைம்லையும் சிலர் குடும்பத்துக்குனு செலவு பண்ணிடுவாங்க, தூங்கற நேரமும் கூட ரொம்ப கம்மி. இப்படியே போனா அவங்க லைஃப் ஒரு வெறுப்பு வந்திடாது?. அந்த வெறுப்பு அவங்களை மட்டுமில்ல  குடும்பத்தையும் சேர்த்து பாதிக்கும்.
மனைவியா வரவங்களுக்கு , நாம கொடுக்கிற  பெரிய கிஃப்ட் ரெஸ்பெக்ட், ஸ்பெஸ், லவ் அண்ட் கேர் இந்த நாலையும் குடுத்து போதும் சி நெவர் லீவ்ஸ் யூ அண்ட் சி லீட்ஸ் குட் லைஃப் வித் யூ. கோர்ட் கேஸ் போறாங்களே ஏன் இதுவும் ஒரு காரணம் தான். அண்ட் கள்ளக்காதல் ஏன் வந்தது? நாம கொடுக்காத அடேன்சன் எங்கோ முகம் தெரியாத ஒருத்தன் அவங்களுக்கு கொடுக்கறனால தான்.  நான் சொல்றது பொண்ணுங்களும் சேர்த்து  தான்.

இங்க ஸ்பேஸ் ரெண்டுபேருக்கும் தான்  தேவைப்படுது. அதை சரியா யூஸ் பண்ணிகிட்டாலே போதும் லைஃப் சூப்பர் போகும்.

காதல் , காதலன் சொன்னதும் நீயும் தவறா தான புருஞ்சிகிட்ட,  ஆனா இங்க காதல் என் மனைவிக்கு நான் குடுக்கற  ஸ்பெஸ் காதலன்ங்கறது என் மனைவிக்யோட ஹாபி. அவ காதலனோட  டைம் ஸ்பென்ட் பண்றதுல என்ன தப்பு இருக்கு?

பொண்ணுங்களோடு ஹாபிய தான்  நான் காதலன்னு சொல்லுறேன், அவங்களுக்கு அவங்க காதலனோட   டைம் ஸ்பென்ட் பண்றதுனால என்ன குத்தமாகிட போகுது? இப்போ  சொல்லுடா, நான் செய்ற வேலைக்கு பெயர் என்ன  புருஷனா? இல்ல மாமாவா?" கேட்க , கிரிக்கு   தான் ஏதோ போல் ஆகிவிட்டது.

"சாரி மச்சான் உன்னை போய் தப்பா
நினைச்சிட்டேன். நீ சொன்னது எல்லாமே சரி தான் எல்லாத்தையும் விட்டு  வர ஓயிப்க்கு  கண்டிப்பா நீ சொன்ன அந்த நாலையும் கொடுத்தே ஆகணும் டா ! சிலர் நேரம் என் ஒயிப் எரிஞ்சு, கத்தி விழுவா, எனக்கு காரணம் அப்ப புரியல இப்போதான் புரியுது,  அவளுக்கு  கொடுக்க வேண்டியத கொடுக்கணும். தேங்க்ஸ் மச்சான்" என்றான் முகமலர்ந்து.

"டைம் ஆச்சி வா கீழ போலாம்" என்று கிரியை அழைத்துக் கொண்டு  கீழே சென்றான். சரியாக அவனது மனைவியும் ஓய்வு அறையில் இருந்து வந்தாள்.

"அடடே ! கிரி அண்ணா எப்போ வந்தீங்க?" உரிமையாக கேட்பவளை தவறாக எண்ணியதை  நினைத்து  முதலில் வருத்தம் கொண்டவன் பின் தன்னை சரி செய்து கொண்டு
மலர்ச்சியுடன்,
"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடித்தான் மா !"என்றான்.

"காஃபி போட்டு கொடுத்தாரா?" அவனிடம் கேட்டு விட்டு, " ஏங்க என்னை கூப்பிட்டு இருக்கலாம்ல" என்றவளை இருவரும் புன்னகையுடன் கண்டனர். "இருக்கட்டும் சிஸ்டர், நீங்க உங்க லவ்வரோட டைம் ஸ்பெண்ட் பண்ணனும் போது  டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நினைச்சோம்" என்ற கிரியை குழப்பமாகப் பார்த்தாள்." நீ சிஸ்டருக்கு எக்ஸ்பிளைன் பண்ணு நான் கிளம்புறேன்" இருவரிடம் விடைபெற்று சென்றான்.

"என்ன லவ்வரு டைம்னு சொல்லிட்டு போறாரு ஒன்னும் புரியலையே " என்று கணவனிடம் வினவினாள் ஹாசினி.

"ஹனி" என்றவன் அனைத்தையும் சொல்ல, " அடப்பாவி ! அவர்  என்னை தப்பா நினைக்க வச்சிட்டீயே !" என்று  இரண்டு அடிகள் கொடுத்தாள்."ஹாஹா, முதல்  உன்னையும் என்னையும் தப்பா தான் நினைச்சான்,  அப்றம் சரியான எஸ்பிளானேஷனும் கொடுத்ததும் புரிஞ்சிக்கிட்டான்.சரி அதை விடு நைட் என்ன டின்னர்?"

"எக் நூடுல்ஸ் வேணும் , அதுவும் உன் கையால !" என்றவளின் இடையைச் சுற்றி கைப்போட்டு சமையலறைக்கு நோக்கி அழைத்துச் சென்றவன், அவளுக்காக எக் நூடுல்ஸ் செய்ய ஆரம்பித்தான்.


முற்றும்
© All Rights Reserved