...

5 views

11) வஞ்சம் தீர்க்க வருகிறாள்.
( 11 ) வஞ்சம் தீரக்க வருகிறாள் .


அனைவரும் நிலாவை சுற்றி அமர்ந்து இருந்தனர் . நிலா மெத்தையில் படுத்து இருந்தாள்  .  " நிலா , எந்திரி டி . " என்று அவளை எழுப்பினாள் வினு .


நிலா சிறிது சிறிதாக கண் விழித்து கொண்டிருந்தாள் . " நிலா . நிலா , " என்று அவள் பெயரை ஏலம் விட ஆரம்பித்தனர் மற்றவர்கள் .

நிலா கண் விழித்தாள் . கிட்ட தட்ட நான்கு நாட்களாக இவள் உறங்கி கொண்டிருக்கிறாள் . மற்றவர்களும் எதுவும் செய்யாமல் அவளை கவனித்து வந்தனர் . இதற்கிடையில் டைம் மிஷின் வேலையும் நடந்து கொண்டிருந்தது .  கிட்ட தட்ட முடியும் நிலைக்கு வந்திருந்தது .


நிலா எழுந்ததும் அவளை பாய்ந்து அனைத்து கொண்டனர் வினுவும் , ஜெனியும் . " என்ன டி . இப்டி பன்னிட்ட . " என்று அழ துவங்கியவர்களை விஷ்வாவும் ஜானும் சமாதானப் படுத்தி அழைத்து சென்றிருந்தனர் .


அவர்கள் சென்றதும் சூர்யா நிலாவிடம் " ஆர் யூ ஓகே நிலா . " என்று கேட்டான் .

" அப்டி தான் நினைக்குறேன் . அது என்னது . அது எதுக்கு என்ன கொல்லனும்னு நினைக்குது . அது எப்டி நீங்க மட்டும் சரியா அந்த இடத்துக்கு வந்திங்க . " நிலா .


" நிலா . இப்போ எதுக்கு இத பத்திலாம் பேசிட்டு இருக்க . நீ கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்ல " சூர்யா .

" நோ . சொல்லுங்க . யாரு அது . " என்று கத்தினாள் நிலா .

" நிலா...... " ஏதோ சொல்ல வந்தவனை தடுத்து நிருத்தினாள் நிலா .

" ப்ளீஸ் . நிருத்துங்க . நீங்க எதுவும் சொல்ல வேணாம் . எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும் . " என்றாள் .


" என்ன நிலா பண்ண போர . அது உன்ன கொன்னுரும் டி ." சூர்யா .

" ஸ்டாப் இட் சூர்யா . அதுக்குன்னு பயுந்துட்டே இருக்க சொல்றியா . உன்ன மாதிரிலாம் என்னால இருக்க முடியாது . எத்தன நாள் பயந்துட்டே இருக்க சொல்ற . சாகுற வரைக்குமா . இந்த ஒரு தடவ தப்பிச்சுட்டேன்னு , எல்லா நாளும் தப்பிக்க முடியுமா . நான் போறேன் " என்ற நிலா வெளியே வந்தாள் . அங்கு மற்ற நால்வரும் அமர்ந்து இருந்தனர் .


மற்றவர் நால்வரும் நிலாவின் வருகையை எதிர்பார்க்காமல் அதிர்ந்தனர் . " என்ன ஆச்சு டி .  " வினு .

" நான் ஒரு முடிவு எடுத்துருக்கேன் . " நிலா .


" என்ன முடிவு டி . " ஜெனி .

" அது , அந்த நெகெட்டிவ் எனர்ஜி கிட்ட போய் நானே என்ன கொன்னுக்கோனு சொல்ல போறேன் . அவள் அப்படி கூறிய அடுத்த நிமிடம் அவள் கன்னத்தில் ஒரு அறை விழுந்து இருந்தது . " என்ன டி நெனச்சுட்டு இருக்க மனசுல . உனக்காக எல்லாரும் வந்தா , நீ போய் சாகுறன்னு சொல்ற . உனக்குன்னு ஒரு கடமை இருக்கு நிலா . அத முடிக்காம நீ சாக கூடாது . அப்டி நீ செத்து போணா , உன்னோட லட்சியத்த யாரு டி செய்வா . அதுக்கு நீ வேணும் டி . " என்று கோபமாக ஆரம்பித்து கெஞ்சலாக முடித்தாள் ஜெனி .


" அதுக்கு நீ இருக்க ஜெனி . அதுக்கு நா வேணும்னு எந்த அவசியமும் இல்ல . " என்றாள் நிலா .


" நிலா லூசு மாதிரி பேசாத நிலா . " வினு .


" நா கரெக்டா தான் பேசுறேன் . நான் எடுத்த முடிவுல எந்த மாற்றமும் இல்ல . " என்றவள் திரும்பி நின்றாள் . " எங்க இருக்க நீ . நேர்ல வா . எதுக்கு போய் ஒழிஞ்சுட்டு இருக்க . " என்று கத்தினாள் அவள் .



எந்த மாற்றமும் இல்லை . நிலாவிற்கு சுறுசுறுவென கோபம் தலைக்கேற ,  இன்னும் கத்த தொடங்கினாள் நிலா . "  சொன்னல்ல , என்ன கொல்லனும்னு . வா , இப்போ வந்து கொல்லு வா . " என்று இன்னும் கத்தினாள் . அப்போதும் எந்த மாற்றமும் இல்லை .


" இப்போ நீ வரலனு வை..... " என்றவள் பக்கத்தில் இருந்த பூ ஜாடியை உடைத்து , சூர்யாவை இழுத்து அவனின் கழுத்தில் கத்தியை வைத்தாள் நிலா .


" இப்போ நீ வரலன்னா , இவன கொன்னுருவேன் . " நிலா .


இதை கேட்டதும் மற்றவர்கள் அதிர , சூர்யாவும் சேர்ந்தே அதிர்ந்தான் . அதுவும் அதிர்ந்தது போலும் , திடீரென மின் விலக்குகள் அனைந்து எரிந்தன . நெகெட்டிவ் எனர்ஜி ( பேய் ) வந்து விட்டது என்பதற்கு இதுவே சாட்சி .


நிலா வாய்க்குள்ளையே சிரித்து கொண்டாள் . திடீரென நிலா தூக்கி எறியப்பட்டாள் . தூக்கி எறியப்பட்டதில் அவளின் தலையில் இருந்து ரத்தம் வழிய தொடங்கியது . மெலிதாக ஒரு புகை போல் ஒரு உருவம் வந்தது .

" என்ன டி நெனச்சுட்டு இருக்க நீ . அவன நீ கொன்னுருவியா . அவன் என்னோட வாரிசு டி . எப்டி டி நீ அவன கொல்லுவ . அதுக்கு நா உன்ன விட்ருவன்னா டி . " கத்தியது அந்த உருவம் . அந்த நெகெட்டிவ் எனர்ஜி கத்தியதில் அங்குள்ள அனைத்து பொருட்களும் கீழே விழுந்து உடைந்தது .


நிலா சற்றே பயந்தாலும் , தன்னை தேற்றி கொண்டவள் " ஆமா கொல்லுவேன் . என்ன பண்ண முடியும் உன்னால . " நிலா கத்தவும் ,  அனைவரும் அவளை  " நீ என்ன பைத்தியமா டி . " என்பது  போல் பார்த்தனர் .


அதை கேட்ட அந்த நெகெட்டிவ் எனர்ஜி , நிலாவின் தலை முடியை பற்றி தூக்கியது . " என்ன டி நெனச்சுட்டு இருக்க நீ . " என்று கத்தியது .


" நா எதுவும் நினைக்குல . முதல்ல , நீ யாருன்னு சொல்லு . கொஞ்சம் கூட தைரியம் இல்லாதவளா இருக்க நீ . அதுனால தான் உன்ன பத்தி சொல்ல பயப்படுற . " நிலா சரியாக வீக் பாய்ன்டை பிடிக்க , நிலாவை அப்படியே கீழே விட்டது அந்த உருவம் .


" நா தைரியம் இல்லாதவளா . " அந்த உருவம் .


" ஆமா . நீ தைரியம் இல்லாதவ தான் . " நிலா .


" சொல்றேன் . என்ன பத்தி முழுசா சொல்றேன் . " என்ற அந்த உருவம் மெல்ல மெல்ல உரு மாற தொடங்கியது . முதலில் ஒரு கோரமான உருவமாக இருந்த அது , இப்போது ஒரு அழகிய மங்கையாக மாறியது . அனைவரும் அதை அதிசையத்துடன் பார்த்து கொண்டிருந்தனர் .


அதுவும் அதன் கதையை சொல்ல ஆரம்பித்தது .

அதை நாம் அடுத்த பாகத்தில் பார்ப்போம் .

★★★★★




© Ashwini