...

15 views

காதலோவியம்
வெள்ளை காகிதம் அவன் விரல் தீண்ட தவம் கிடக்க, அவன் விரல்களோ அவளை தீண்ட,  துறுதுறுவென எறும்பை போல அவள் மேனியில்  அலைய , அளந்த அங்கங்களை  மீண்டும் மீண்டும் அளக்க, வண்ணம் தீட்டி முடித்த  ஓவியத்தை  மேலும்  மேலும் மெருகேற்ற  இருப்பவனின் விரலுக்கு தடா சட்டம்  போட்டது போல, அவன் தீண்ட வரும் விரலை தட்டிவிட்டு,  அவன் கைக்குள் அகப்படாமல் போக்கு காட்டிக் கொண்டிருக்கிறாள்.

அவளாடையைப் போல் அவளது இந்தப் போக்கும் சற்று கடுப்பை தர, கோபமெனும் வர்(ண்)ணத்தை முகத்தில் குழைத்து கொண்டு அமர்ந்து விட்டான்.

அவனது  செக்கரை வதனமும் காதல் நிறத்தை  நினைவூட்ட,  ரசித்த மடந்தைக்குள் அத்தனை அழுத்தம். தினமும் இரவில் ராகம் பாடும் அவள் கொலுசு, தன்னை நோக்கி ராகம் பாடிக் கொண்டு வர, வெள்ளை கொடிக் காட்ட வருகிறாள் என்று இதழ்கடையோரம் எட்டிப் பார்த்தது சிறு மூரல்.

ஆனால் அந்த அழுத்தகாரியோ, அவனெதிரே மரக்கிளையில் அமர்ந்து  காலாட்டி, கொலுசால் இசையை மீட்டிய படி அவனது செங்குருதியை சூடேற்றிக் கொண்டிருந்தாள். அவளை முறைத்து விட்டு, முகத்தை திருப்பிக்  கொண்டான்.

"ஓவியரே ! என்ன கோபமா?  என்னை பார்க்காம முகத்தை திருப்பிக்கிறீங்க ?" சிரிப்பை  அடக்கிய படி, அவனை வம்பிழுக்க, அவனிடம் பதில் வராதுபோக , உதட்டை வளைத்து கொண்டவள்,

"எதுக்கு  ஓவியரே இந்தக் கோபம் ?"  விடையை தெரிந்து வைத்து கொண்டு கேள்வி கேட்டு அவனை மேலும் கடுப்படித்தாள். 'எதுக்குனு  தெரியாது பாரு இவளுக்கு? என்னை கடுப்பேத்தறதே வேலயா வச்சிருக்கா . இருடி  கையில் மாட்டாமலா போவ அப்போ இருக்குடி இந்த ஓவியனோட  கோபம்!' உள்ளுக்குள் பொறிந்து கொண்டான்.


"சரி ஓவியரே !  உங்களுக்கு ஒரு டாஸ்க். நீங்க  அதை கம்பீள்ட் பண்ணி ஜெயிச்சிட்டீங்கனா, நான் உங்களுக்கு அடிமை, என்னை நீங்க என்ன வேணாம் செய்யலாம். ஆனால் முடிக்க முடியலேனா நீங்க எனக்கு அடிமை நான் சொல்லுறது தான் நீங்க செய்யணும். ஒகேவா?" என்க

அவனும் என்ன டாஸ்க் என்பது போல அவள் முகத்தை சுவாரஸ்யமாக பார்க்க, " ஏன் வாய்விட்டு என்ன டாஸ்க்னு கேட்க மாட்டீங்களோ?" முனைப்புடன் கேட்டாள்.

"சரி என்ன டாஸ்க்னு சொல்லு?"

"என் ஆடையை தீண்டாம, என்னை தீண்ட முடியுமா? அதாவது என் டிரஸ தொடாமல் உங்க விரல்கள் ஓவியம் வரையுமா?" எனக் கேட்டவளை முழுதாய் அளந்தான்.

அவள் பாதமும் முகத்தையும் தவிர, மற்ற பாகங்களை எல்லாம்  ஆடை மறைத்திருக்க, அவளது டாஸ்க் கொஞ்சம் கடினம். முகத்தில் முத்தமிடுவதையும் பாதத்தை தீண்டவதை தவிர வேறொன்றும் செய்ய முடியாது. அது தான அவளுக்கு வேண்டும் , அதற்கு தான் இன்று முழுவுடலையும்  மறைத்து வைத்திருக்கிறாள். அவளுக்கு அவன் அடிமை தான் இருந்தும் வாய்  மொழியால்  ஒத்துக் கொள்ள வைக்க எண்ணுகிறாள்.

ஆனால் விடுவானா அந்த ஓவியன்? 'நான் உனக்கு அடிமைப் போல நீயும் எனக்கும் என் காதலுக்கு அடிமையடி
அதை உன் வாய் மொழியால் ஒத்துக் கொள்ள வைக்கிறேன் 'என்று சபதமேற்றவன், தன் முன் அனாமத்தாக இருந்த வெள்ளை  காகிதத்தை  கண்டு, அவளையும் நக்கல் சிரிப்போடு பார்த்து விட்டு அந்தக் காகிதத்தில் அவளை வரைய ஆரம்பித்தான்.

'நான் இங்க டாஸ்க் கொடுத்திருக்கேன். இந்த மனுசன் என்ன வரைஞ்சிட்டு இருக்கார்?' எனத் தலையில்  அடித்து கொண்டாள்.

தன்னைச் சுற்றிச் சுற்றி வருவான், தன்னை  தீண்ட முயல்வான் என்று எண்ணியவளுக்கு பெருத்த ஏமாற்றம் தான். அவனோ, அவளை கண்டுகொள்ளவில்லை வரைவதில்  மும்மறமாக இருந்தான்.

"இந்த மனுஷன... !" பல்லைகடித்த படி அவனருகில்  வந்து, " உங்க கிட்ட என்ன சொன்னா,  நீங்க என்ன பண்ணி..." என்று கேட்க வந்தவள்  வாயடைத்து போனாள்.

அவன் ஓவியன், அவளை தீட்டுவதில்  மட்டும் வல்லவன் அல்ல, வரைவதிலும் வல்லவன் என்று மீண்டும் ஒத்துக் கொண்டாள்.

அந்த வெள்ளைக் காகிதம் இப்போது அவளது ஆடையற்ற பூவுடலை தாங்கிருக்க. அவளையும் அவள் அங்கங்களையும் அச்சு பிசராமல் வரைந்திருந்தான்.

"என்ன டாஸ்க் சொன்ன? உன் ஆடைய தொடாம  உன்னை தொடனுமா ? ஓவியன் டி நான் ! எனக்கே டாஸ்க்கா? இதோ பார் உன் ஆடைய தொடாம,  உன் அங்கத்தை தொடுறேன், உச்சி முதல்  அவள் பாதம் வரை அவளது ஒவ்வொரு அங்கத்தையும்  தீண்டி விட்டான்.    பெண்ணிவளின் பெண்மையை தீண்ட, அவளையே  தீண்டியது போல உணர்வு அவளுக்குள் கிளிர்ந்தேழுந்தது, உதட்டைக் கடித்து, அவனிடம் மாட்டிக் கொண்ட தவிப்பைக் காட்டினாள்.


அவளது மூரலிடமிருந்து இதழை விடுவித்தவன், தன் கட்டை விரலால் வருடி"இட்ஸ் மைன்,  எனக்கு மட்டுமே அதை  தீண்ட  உரிமை இருக்கு என் அடிமையே ! இந்த சேவகனுக்கு இந்த சேவகி சேவை செய்ய தயாரா? " என்று அவளை கையிலேந்தி,அவள் முகம் பார்த்து ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க,

அதில் மயங்கியவள், "ஓவியரே ! உங்க திறமைக்கு மட்டுமல்ல உங்க காதலுக்கும் நான் அடிமை தான் . இந்த சேகவனுக்கு இந்தச் சேவகி சேவை செய்ய எப்பவோ அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துட்டேன், நீங்க என்ன வேணாலும் என்னை செய்யலாம்" என்றவள் கண்ணடித்து இதழை குவித்து முத்தங்களை பறக்க விட்டாள். அந்த ஓவியனும் அந்த ஓவியத்தை வண்ணம் தீட்ட  தூக்கிச் சென்றான்.


© All Rights Reserved