...

21 views

என் அன்பு உறவுக்காக காத்திருக்கிறேன்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என நாங்கள் குடும்பமாய் ஒன்று சேர்ந்து அம்மா, அப்பா, அண்ணண், அண்ணி, தம்பி, தங்கை, அக்கா, மாமா, பாட்டி, தாத்தா மற்றும் சிறு குழந்தைகள் என சிரித்து பழகிய நாட்கள்! புண்ணகை நிறைந்த முகங்கள், நேரம் பாராமல் வெளியே சென்று வந்த தருணங்கள், நாங்கள் சேர்ந்து எடுத்த புகைப் படங்கள். மறக்க முடியாத பல வண்ண நினைவுகள்!

ஆனால், அந்த சந்தோஷம் எங்களுக்கு நீடிக்க வில்லை! 31 டிசம்பர் 2019 ஆம் ஆண்டில் என்னவென்று கண்டறியமுடியாத ஒரு நோய் அதாவது அதன் பிறகு கொரோனா (கோவிட்-19) எனப்பட்ட நோய்க்கிருமி பலருடைய வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியது! 18 மார்ச் 2020 யில் உலகத்தில் பல நாடுகளில் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. அந்த நாள் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. நாட்டின் நுழைவாயில் நுழைய முடியாத காரணத்தால் பலர் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டனர்!

மேலும் இதன் காரணமாக அங்கேயே தங்கி வேலை செய்யும் கட்டாயம். எங்கள் குடும்பத்தில் சிலர் எங்களை பிரியும் நேரம். ஒவ்வொரு நாளும் நோய் அதிகரித்தது. நாங்கள் தினசரி தேவையான காரியத்துக்கு மட்டும் வெளியே செல்லும் போது முகக்கவரியையும் மற்றும் கைத்தூய்மியையும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவானது. அதுமட்டுமின்றி பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும், அலுவலக ஊழியர்களும் காணொலி மூலமாக தான் தொடர்புக்கொண்டு அவர்களுடைய அன்றாடப் பாடங்களையும் பனிகளையும் செய்கின்றனர். இப்படி தொடர்புக் கொள்ளும்போது சில மாணவர்களுக்கு இணையச் சிக்கல்களினால் பாடங்கள் புரியாமல் சிரமத்தை எதிர்நோக்கினர். இவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் இதுதான் நிலை!


தொடர்ந்து வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும், நாம் அவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்த கோவிட்-19 ஒரு நல்ல பாடத்தை புகுத்தியுள்ளது. அவற்றை நாங்கள் அவ்வாறே ஏற்றுக்கொண்டோம். ஒவ்வொரு நாளும் வெளிநாடுகளில் தங்கியிருக்கிற எங்களின் அன்பானவர்கள் திரும்புவார்கள் என்று நாங்கள் காத்திருக்கிற வேளையில், நாட்கள் நீடிப்பதால் அவை எங்களுக்கு கனவாகி விடுக்கின்றன. எங்களின் கனவு நனவாகுமா? அவர்கள் இரண்டு வாரத்தில் திருப்புவோம் என்று சொல்லி சென்றார்களே! ஆனால், ஒரு வருடமாகிவிட்டது இன்னும் திரும்ப வில்லையே. சென்றவர்கள் திரும்புவார்களா? எவ்வளவோ பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை விட்டு பிரிந்து இருக்கிறார்கள், இப்படி தூரத்தில் இருக்கும் தங்கள் பெற்றோர்களின் அன்புக்காக ஏங்குகிகறார்கள். இவர்களின் ஏக்கம் தீருமா? "என் அம்மாவும் அப்பாவும் எப்பொழுது திரும்புவார்கள்?"என்று இவர்கள் கேட்கும் கேல்விக்கு பதில் கிடைக்குமா? அல்லது இன்று வருவார்கள், நாளை வருவார்கள் என காத்திருக்கும் இவர்கள் அந்த நாட்களை காண்பார்களா? என்னதான் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பினாலும் அவர்கள் கூட இருப்பது போல் ஈடாகாது. அவர்கள் தங்கள் பெற்றோர்களின் அன்பிற்கு ஏங்குவார்கள்.

சில நாடுகளில் தடுப்பூசி இறக்குமதி செய்து பலர் அதை போட்டு கொண்டனர். கூடிய விரைவில் மக்கள் இந்த தடுப்பூசியை போட்டு, நோய் குறைந்து, நாட்டின் நுழைவாய் பகுதிகளை திறந்து, பிரிந்த எங்களது குடுப்பத்தை மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது. இந்த கோவிட்-19 எங்களுக்கு வாழ்க்கையில் அன்பு, துய்மை, சிக்கனம், தூர இடைவெளி என பல காரியங்களை கற்றுக்கொடுத்தது. அதற்காக மிக்க நன்றி.

#அன்பு #குடும்பம் #கல்வி #மாணவர்கள் #நடமாட்டக்கட்டுபாடு #முகக்கவரி #கைதூய்மி #கோவிட்-19 #பிள்ளைகள் #நம்பிக்கை

© Dana's short stories
© Dana Hephzibah