மாதவிடாய்
© நாவல்
[#மாதவிடாய்# part 1
தன்னுடைய நண்பர்கள் உடன் விளையாடிக் கொண்டிருந்தாள் கேத்திரின்
அப்போதுதான் வலியும், வேதனையும் நிறைந்த பெண் என்ற வாழ்க்கையில் முதல் அடியை எடுத்து வைக்கிறாள் கேத்திரின்
ஆம் அவள் வயதுக்கு வந்து விட்டாள்
கேத்திரின் வயதுக்கு வந்தவுடன் அவளுக்கான சடங்குகள் பூப்புனித நீராட்டு விழா என்று அவள் வீடே கலகலப்பாக இருந்தது
எல்லா சடங்குகளும் முடிந்து பள்ளிக்கு சென்றாள் கேத்திரின் அப்போதுதான் பள்ளியில் அவளுக்கு அடி வயிற்றில் ஊசியை வைத்து குத்துவது போல் இருந்தது தன்னுடைய காலில் இரண்டு தொடைகளும் பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தது
அதுதான் கேத்திரின்க்கு முதல் மாதம் மாதவிடாய்
பள்ளியில் இருந்து கிளம்பி வீட்டிற்கு வந்துவிட்டாள் கேத்திரின்
பின் தன் அம்மாவிடம் வயிறு ரொம்ப வலிக்கிறது என்று சொன்னாள்
இதுதான் மா மாதவிடாய் இனிமேல் நீ வாழ போகும் ஒவ்வொரு மாதமும் இந்த வலியை தாண்டி தான் நீ செல்ல வேண்டும் என்று கேத்திரின்க்கு அவள் அம்மா ஆறுதல் கூறி
(நாப்கின்) எப்படி பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி குடுத்தாள்.
மறுநாள் காலை கேத்திரின் வீட்டில் அனைவரும் பூஜை அறையில் சாமி கும்பிட்டு கொண்டிருந்தனர்
அப்போது கேத்திரினும் பூஜை அறைக்குள் நுழைய வந்தாள்
அவள் அம்மா கேத்திரின்னை தடுத்து நிறுத்தி இப்பொழுது நீ பூஜை அறைக்குள் வர கூடாது என்று கூறினாள்
நான் ஏன் வர கூடாது என்று கேத்திரின் திரும்ப கேள்வி கேட்டாள்
மாதவிடாய் நாட்கள் முடியாமல் நீ கோவிலுக்கோ, பூஜை அறைக்கோ செல்ல கூடாது என்று கேத்திரின்க்கு அவள் அம்மா தெளிவாக எடுத்து கூறினாள்
கேத்திரின் எதுவும் பேசாமல் சரி என்று மட்டும் தலையை ஆட்டினாள்
பாவம் கேத்திரின் அப்போது அவளுக்கு வயது 14 தான்
அப்போதுதான் கேத்திரின் மனதில் ஒரு கேள்வி எழும்பியது
நான் வயதுக்கு வருவதற்கு முன் நினைத்ததை சாப்பிட்டேன்
நினைத்த இடத்திற்கு சென்றேன்
பல நாட்கள் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டு இருக்கிறேன்.
ஆனால் இன்று நான் வயதுக்கு வந்து எனக்கு முதல் மாதவிடாய் ஆன உடன் என் வீட்டின் பூஜை அறைக்கே செல்ல கூடாது என்கிறார்கள்.
மாதவிடாய் காலத்தில் நான் பூஜை அறைக்குள் வருவது தீட்டு, தப்பு என்றால்
அந்த தப்பை பூஜை அறையில் இருக்கும் அந்த கடவுளே எதுக்கு எங்களுக்கு வலி நிறைந்த வாழ்க்கையாக இந்த மாதவிடாயை குடுக்க வேண்டும்
என்று தன் மனதுக்குள் முதல் கேள்வியை விதையாக விதைத்தாள் கேத்திரின்.
அவளுடைய இந்த கேள்விகள் அவளின் வாழ்க்கையை புரட்டி போட போகிறது என்று அப்போது அவளுக்கு தெரியாது.
காலங்கள் ஓடியது
தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்த பிறகு
சென்னையில் உள்ள தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒரு நல்ல வேலையும் கிடைத்தது கேத்திரின்க்கு.
தன்னுடைய குடும்பத்தை விட்டு முதல் முறையாக தனியாக தன் வாழ்க்கையில் முதல் அடியை எடுத்து வைக்க
திருச்சியில் இருந்து சென்னைக்கு கிளாம்பினாள் கேத்திரின்.
பல மூட நம்பிக்கையும், ஒழுங்கற்ற மனிதனின் செயல்களையும் சமூகத்திலிருந்து புரட்டி போடப்போவது இந்த ஒற்றை பெண் கேத்திரின் தான் என்பது அப்போது அவளுக்கே தெரியாது!!!!
(ஒரு பெண்ணின் இயற்கை உபாதையை கேளி செய்து சீண்டினால் என்ன நடக்கும் என்பதை கேத்திரின் கோபத்தின் மூலம் சென்னையில் பார்ப்போம்,,,,,)
[#மாதவிடாய்# part 2
அதிக கனவுகளுடன் பஸ்ஸில் இருந்து சென்னையில் இறங்கினாள் கேத்திரின்
கேத்திரின்னை அழைத்து செல்ல அவளின் தோழி நிஷா பேருந்து நிலையத்தில் காத்திருருந்து அவள் தங்கியிருக்கும் அறைக்கு கேத்திரின்னை அழைத்து சென்றாள்
அறைக்கு வந்ததும் குளித்து தயாராகி அந்த தொலைக்காட்சி நிருவனத்திற்கு சென்று வேலையில் சேர்ந்தாள் கேத்திரின்
வாழ்க்கையில் நாட்கள் நன்றாக தான் சென்றது
கேத்திரின் வாழ்க்கையை திருப்பி போடும் அந்த சம்பம் நடக்கும் நாள் வந்தது
தன்னுடைய வேலையை முடித்துவிட்டு தன் தோழி நிஷாவுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள் கேத்திரின்
வீட்டிற்கு செல்வதற்கு முன்பு கோவிலுக்கு போய்ட்டு வீட்டிற்கு போவோம் என்று நிஷா சொன்னாள்
கேத்திரின்னும் சரி என்று சொல்லி விட்டு நிஷாவுடன் கோவிலுக்கு சென்றாள்
இருவரும் கோவிலுக்கு உள்ளே சென்று சாமியை கும்பிட்டனர்
அப்போது தான் கேத்திரின்க்கு மாதவிடாய் அந்த கோவிலுக்குள்ளயே ஏற்பட்டது
அதை அருகில் இருந்த இன்னோர் பெண் பார்த்துவிட்டு முதலில் கோவிலில் இருந்து வெளியே போ மா என்று கேத்திரின்னிடம் சொன்னாள்
அப்போது தான் கேத்திரின்க்கு மாதவிடாய்...