...

1 views

10) Adventures of the four friends


" எப்டி தப்பிக்கறது . " என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள் வர்ஷினி .

" என்ன நடக்குது இங்க . " வருண் .


"‌ பாத்தா எப்டி தெரியுது டி . " வர்ஷினி .

" லூசு . உனக்கும் இவளுக்கும் ஆகாது இல்ல . " வருண் .

" ஆமா . ஆகாது தான் . " வர்ஷினி .

" அப்புறம் எப்டி... " என்று இழுத்தான் வருண் .

" அது.....  எங்க ரெண்டு பேருக்கும் ஆகலைன்னாலும் , எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தர் பத்தி ஒருத்தர் நல்லாவே தெரியும் . " வர்ஷினி .

" என்ன... " வருண்.

" ஆமா டா . பக்கி . " வர்ஷினி .

" சரி . நீங்க என்னமோ பண்ணங்க . இங்க இருந்து எப்டி தப்பிக்கறது . "
வருண் .

" பாக்கலாம் . " என்ற வினு , சுற்றிலும் பார்த்தாள் . அங்கு பெரிதாக எதுவும் இல்லை . ஆனாலும் எங்கிருந்தோ ஒளி வந்து கொண்டு இருந்தது .


" எங்க இருந்து வெளிச்சம் வருது . " வினு .

" அதோ , அங்க இருந்து . " என்று மேலே உள்ள ஒரு பெரிய  ஓட்டையை காண்பித்தாள் வர்ஷினி .

" அங்க எப்டி போறது . " வருண் .

" ஆமா . அவனுக்கு கால் சுளுக்கிருச்சு . " வர்ஷினி .

" அப்போ நான் அவன கூட்டிட்டு வரேன் . நீங்க போங்க . " வினு .

" ஓகே . " என்றவள் , மேலே ஏறத் துவங்கினாள் .

" நான் கூட்டிட்டு வரேன் . நீ போ . " கிருஷ் .

" நான்... " என்று அவள் எதையோ கூற வர , இவன் அவளை பார்த்து முறைத்தான் .

" போறேன் . " என்று கூறி விட்டு அவளும் மேலே ஏறத் துவங்கினாள் .

அவள் சென்றதும் கீழே அமர்ந்தவன் , அவனது காலை பிடித்து , சுளுக்கெடுத்து விட்டான் .

" வா போலாம் . ஏற முடியும் இல்ல . " கிருஷ் .

" முடியும் . " வருண் .

அது slope போல் இருந்ததால் , படிக்கட்டில் ஏறுவது போல் ஏறினார்கள் .

அங்கு இருவரும் அந்த காட்டில் இருந்து தப்பிப்பது பற்றி யோசித்துக் கொண்டிருந்தனர் .

" இது என்ன செவுரு . " வருண் .

" இதுக்கு பின்னாடி தான் நம்ம ஓடி வந்து இந்த குழிக்குள்ள விழுந்தோம் . " வர்ஷினி .

" அப்போ அந்த பக்கம் போக முடியாது . " வருண் .

" ஆமா . " வினு .

" அப்போ இந்த பக்கம் போலாம் ‌ . " கிருஷ் .

" வாங்க . " என்று கூறி விட்டு நடந்தாள் வினு .

" ஓய் வினு . நானும் வரேன் . "  என்று வர்ஷியும் அவள் பின்னாலையே சென்றாள் .

" வா போவோம் . அதான் இவங்க ரெண்டு பேரும் போய்ட்டாங்கள்ள . " என்று அவனை அழைத்துக் கொண்டு சென்றான் கிருஷ் .

அவர்கள் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர் . வர்ஷினி குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தாள் .

" குளுருதா டி . " வருண் .

" ஆமா டா . தண்ணில நெனஞ்சுட்டோம்ல . " வர்ஷினி .

" ஆமா . இந்த ஊட்டி குளுரும் சேந்துக்கும் . என்னோட jacket குடுக்கலாம்னு பாத்தா அதுவும் ஈரமா தான் இருக்கு . " வருண் .

" பரவால்ல விடு . " வர்ஷினி .

" மதியம் ஆக போகுது டா . எனக்கு பசிக்குது . " வர்ஷினி .

" இந்த காட்டுல சாப்பாடு கிடைக்காது . " வருண் .

" எனக்கு பசிக்குது . " வர்ஷினி .

" பாக்கலாம்... " வருண்.

.

.


" கந்தியோ மஸ்தி . " ( என்ன ஆச்சு )
நவனதனி .

" ஸித்தா கபிஷமனு . " ( எதுவும் மாட்டல . )

" ழவதுமாசு . " ( எப்படி ) நவனதனி .

" வழபுதா . " ( தெரியல . )

" ஜுபா . " ( ம்ம்ம் . ) நவனதனி .

.

.

.

( அவங்க நாலு பேர் மட்டும் எப்டி தப்பிச்சுருப்பாங்கன்னு நீங்க நினைக்குறிங்க . ஏன்னா , அந்த காட்டுக்கு வந்தவங்கள்ள இவங்க மட்டும் தான் நாலு பேரும் தப்பிச்சுருக்காங்க . எப்டி தப்பிச்சாங்க . hero heroinன்றதால தப்பச்சுட்டாங்களோ???? . பாக்கலாம் . எப்டி தப்பிச்சாங்கன்னு😊 )





© Ashwini