...

14 views

மௌனவிழியாள்
மௌனவிழியாள்

இன்று ஒரு முடிவாக,  அவளிடம் பதிலை வாங்கி விட வேண்டும் என்று முனைப்புடனே அந்தக் காஃபி சாப்பிற்குள்  நுழைந்தான் வருண்.

வழக்கமாக முகவுரையுடன் விழிகள் தெரியும் மட்டும் வந்து நின்றாள், ஒரு வார்த்தை பேசாமல்  புருவங்களை உயர்த்தி' என்ன வேண்டும்' என்றாள் இதுவும்  வழக்கம்  தான். அவனும் அந்தப் பழுப்பு நிற விழிகளால் ஈர்க்க பட்டு ஐந்து நிமிடம் பேசற்று மௌனமாகி போனான்.

மேசையை இரண்டு முறை தட்டினாள்." ஆஹான்... "வழக்கம் போல அவனுக்கு பிடித்த ' கேப்ச்சினோ 'என்றவன் இரண்டு என்றான். அவளும் எதுவும் அவனிடம் கேட்காது சென்று விட்டாள்.

'டேய் வருண், சொதப்பாத டா, பீ ஸ்டெடி' என்று தனக்கு தானே  சொல்லிக் கொண்டிருக்கும் போதே இரண்டு கேப்ச்சினோவை அவன் முன்னே வைத்துவிட்டு நகர இருந்தவளிடம், "உன் கிட்ட கொஞ்சம் பேசணும்"என்றான் இரண்டு மாதங்கள் கழித்து.  விழிகளை அதிர்ச்சியில் விரித்தாள்.

"உட்கார் உன்கிட்ட பேசணும்"என்றான். அவளும் சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் இவர்களை கவனிப்பதாய் தெரியவில்லை. தயக்கத்தோடு அமர்ந்தாள் அவன் முன்.
"எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு, தினமும் இங்க வர காரணமும் அதான். அது உனக்கும் தெரியும். ஐ லவ் யூ கண்மணி... டூ யூ லவ் மீ?" என பட்டென கேட்டு விட, 'பே'வென விழித்தாள்.

"உன்னை பத்தி எல்லாம் தெரியும்... உன்னால் பேச முடியாதுனு நீங்க இங்க வேலை பார்க்கிறேன். உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்சிகிட்டேன். நீ இப்போவே பதில் சொல்லனும் இல்ல ரெண்டு நாள் கழிச்சி கூட சொல்லலாம்" என்றான்.

"ஓ..." தனக்குள் சொல்லிக் கொண்டவள் அவனிடம் சைகையில் 'என்னை பத்தி எல்லாம் தெரியும் சொன்னீங்க, எனக்கு கல்யாணமான விஷயம் தெரியாதா' எனக் கேட்க,அவனுக்கு சுத்தமாக விளங்கவில்லை.

"நீ சொல்றது புரியல எனக்கு" என்றான். கையை உயர்த்தி கட்டியவள், விழிகளால் யாரையோ தேட, அவள் விழித் தேடலை உணர்ந்தவன் போல சரியாக வந்து நின்றான் அவன்.

"என்ன?" அவளை பார்த்து கேட்கவும், அவள் வருணை காட்டி, தன்னை காதலிப்பதாக சொன்னதை சொன்னாள் சைகையில் அதை புரிந்து கொண்டவன் சிரித்துக் கொண்டே, "ப்ரோ ! கண்மணி பத்தி எல்லாம் தெரியும் சொன்னீங்க, அவளுக்கு கல்யாணமானது  தெரியாதா?" எனக் கேட்கவும் அவனிதயத்தில் யாரோ வேட்டு வைத்தது போல இருந்தது.

"இப்போ தான் எங்களுக்கு ரிசண்ட் கல்யாணம் ஆச்சி ! நான் அவ ஹஸ்பண்ட்  அர்ஜுன்"என்றிட இருவரையும் நம்பாமல்
பார்த்தான். "என்ன நம்பலையா ப்ரோ!
"என்றவன் தன் பர்ஸை எடுத்து காட்டவே, அதில்  இருவரும் திருமணக் கோலத்தில்  இருந்ததை கண்டு உண்மை என்று நம்பினான்.

இருவரையும் பார்த்துவிட்டு எழுந்தவன்,"ஸாரிமா, ஸாரி ப்ரோ" என்றவன் மீண்டும் அர்ஜுனிடம் திரும்பி, " சொல்றேன் தப்பா எடுக்காதீங்க ப்ரோ, சச்ச பவர் ஃபுல் ஐஸ், முடிஞ்சா அதையும் சேர்த்து  மறைக்க சொல்லுங்க, இல்லன்னா என்னை போல வேற எவனாவது விழுந்திட போறான்"என்று அர்ஜுனின் தோளை அழுத்தி விட்டுச் சொன்னான்.

"நானும் அந்தக் கண்ணுல தான் விழுந்தேன் ப்ரோ !" என்று வெட்கப்பட, மீண்டும் அவளை பார்த்து பெருமூச்சுடன் வெளியே சென்று விட்டான்.

கண்மணி அர்ஜுனை முறைக்க, அவனோ கண்சிமிட்டி விட்டுச் சென்றான்.


© All Rights Reserved