...

6 views

வில்லாதி வில்லன்
பாகம் 2 :. ஹிட்லருக்கு மிகவும் நம்பகத்தன்மையான‌ நபர். ஹிட்லர் , பீட்டர் மீது மிகுந்த நம்பிக்கைக் கொண்டவர். தனது அனைத்து ரகசியங்களும் அறிந்த மனிதர். பீட்டர் மிகவும் புத்திசாலி. நன்றாகவும் படித்தவர். அவரை வேலைக்கு வர‌ சொல்லி பல நிறுவனங்கள் அவரை அழைத்தது. ஆனால் அவர் எந்த ஒரு நிறுவனத்திற்கும் செல்லாமல் ஹிட்லருடன் இருக்கிறார். ஒருநாள் பீட்டர் குண்டடிப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் அந்த வழியில் காரில் சென்ற ஹிட்லர் பீட்டரை‌ பார்த்து கொண்டே சென்றார். என்ன நினைத்தானோ ? தெரியவில்லை. யாருக்கு இரக்கம் ‌காட்டாத கொடிய மிருகம், பீட்டர் உயிருக்கு போராடுவதை கண்டு உடனே தனது காரை நிறுத்திவிட்டு பீட்டரை பார்க்க சென்றான். அவரை தனது காரில் வைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். பீட்டரின் உயிரையும் காப்பாற்றினான். அந்த நன்றிக் கடனுக்காகத்தான் பீட்டர் ஹிட்லருக்கு உதவியாகவும் , ஹிட்லருக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதிலிருந்து அவரை காப்பாற்றவும் செய்வார். எந்த பிரச்சனை வராமலும் பார்த்துக்கொள்வார்.

"மிகவும் நேரமாகி விட்டது . நான் நிறுவனத்திற்கு செல்கிறேன், பீட்டரை அங்கே வர‌ சொல்லுங்கள்"என்றும் "பிறகு இந்த பிணங்களை எரித்துவிடுங்கள்" என்றும் கூறிவிட்டு சென்றான் ஹிட்லர். அப்போது இறந்தபோன ஏழை மக்களுக்கு நடுவில் இருந்த ஒரு குழந்தை அழுதுக்கொண்டு இருந்தது. அந்த குழந்தையை பார்த்த ஹிட்லர் அந்த பிஞ்சு குழந்தையையும் விட்டு வைக்காமல் ஒரு இரும்புக் கம்பியால் அந்த குழந்தையின் தலையில் அடித்தான். ஹிட்லர் அந்த குழந்தையை பார்த்து "நீ இருப்பதற்கு இறந்து விடுவது மேல்". "உன்னை நான் உயிருடன் விட்டால் நீயும் என்னைப்போல் ஆகிவிடுவாய், பிறகு எனக்கு போட்டியாக வந்து என்னையே அழித்து விடுவாய்! என்று கூறிவிட்டு சென்றான். குழந்தையும் வலியால் துடித்து இறந்து போனது. ஹிட்லர் தனக்கு எதிரி என்பவன் எவனும் இருக்கக்கூடாது என்று நினைப்பவன். அவ்வாறு இருந்தால் அவனை அழிப்பவன் . இந்த ஹிட்லர் ஏன் இந்த ஏழை மக்களை இவ்வாறு கொன்று குவித்தான். இதற்கான காரணம் என்ன? தொடரும் இந்த ஹிட்லரின் வேட்டை...