நிலவு முகம் பார்த்த பின்னே...
நிலவு முகம் பார்த்த பின்னே...
நித்தம் கேட்கிறேன்னடி
பூமியை ஏன் வலம் வருகிறாய்
சூரிய குலத்தோனை சேர்ந்திட ,
உன் நட்சத்திர தோழிகள் உடன் வந்தாலோ...
கை கால் முளைத்த வெண்ணிலவே ;
காற்றோடு கலந்து வரும் என் கீதமும்
உன் செவி சேரும் முன்பே வந்துவிடு
உறக்கம் தழுவும் கனவுதனில் .
ஆதித்தன் என்கிற ஆதி மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு அவளுக்கு பிடிக்கும் என்று கவிதை வரைகிறான் பறந்து விரிந்த ஆகாயத்தைப் பார்த்தபடி ,
அன்று முழுநிலவு நாள் ஆதலால் நிலவுமகளும் தன் வெண்ணிற கிரணங்களை இழைத்து இழைத்து ஒளிர்ந்து கொண்டிருந்ததை பார்த்தான் .
மேலும் மேலும் பெயர் தெரியாத அவள் முகம் கண் முன்பு தோன்றி அவனது மனம் முழுவதும் பரவி இம்சித்தாள் .
ச்சே... இத்தனை நாட்கள் கட்டுப்பாட்டில் இருந்த என் மனம் எப்படி அந்த பெண்ணை சுற்றி சுற்றி வருகிறது
என்று தன்னையே நொந்து கொண்டான் .
அதற்கு காரணம் அவன் வயதும் . காலம் கூடிவரும் போது தன் இணைப் பறவை தானே வந்து சேர்வதும் , காலம் காலமாக சரித்திரம் படைத்துவரும் மனதிலிருந்து எழும்பும் காதல் உணர்வு தான் அது என்பதை அறியாதவனும் அல்ல ஆதி .
எனினும்...
தன் மனதின் கட்டுப்பாடும் அதிகாரமும் தன்னிடமே உள்ளது என்பதில் உறுதியாக இருந்தான் .
ஆதித்யன் யார் அவன் தன்னை அறிமுகம் செய்துக்கொள்ள விரும்பி சொல்கிறான் கேட்போம் வாங்க நீங்களும் .
நான் ஆதித்யன் என் அப்பா மகேந்திரன் உருவாக்கிய சிறிய நிறுவனம் .
ஆதித்தன் குரூப்ஸ் ஆஃப் கம்பனியின்
ஒரே வாரிசாக பிறந்தவன் .
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இங்லாந் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு கல்லூரியில் M.B.A முடித்து இந்தியா வந்தேன் .
அப்பா உண்டாக்கிய இருசக்கர வாகனத்தின் உதிரி பாக வியாபாரத்தை முன்னேற்ற வேண்டும் என்பதே என் ஒரே நோக்கம் .
இந்தியாவின் நம்பர் ஒன் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் இடம் பிடிப்பதே ஆதியின் லட்சியம் .
தொழில் முன்னேற்றம் ஒன்றே அவனது எண்ணங்களில் முதலிடம் . அடுத்ததாக அம்மா , தங்கை இவர்கள் நினைவுடன் இருந்தவனுக்கு .
திடீரென முளைத்த நிலவு போல் அவள் ...அந்த நிலவு பெண் பெயர் கூட அறியாத அவள் ஆதியின் மனதில் நங்கூரம் பாய்ந்த கப்பலாக நின்று விட்டாள் .
தத்தளிப்பது என்னவோ இப்போது ஆதித்தனின் மனமே .அந்த நிலவு முகத்தை காணும் ஆவலில் ...சென்ற வாரம் அந்த அந்த கல்லூரியின் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்க அழைத்த போது வேடா வெறுப்பாக தான் சென்றான் ஆதி ..
அவன் அறிந்திருக்கவில்லை அவன் எதிர்காலம் அழைத்து செல்கிறது என்பதை.
அவளின் கவிதையின் அழகும் குரல் வளமும் ஆதியை கட்டி ஒர் இடத்தில் அல்லவா அமர செய்துவிட்டாள் ....
அவள் பெயரை அழைக்கும் போது கவன குறைவாக மொபைலில் இருந்தவனுக்கு
அவள் கவிதை சொல்லி முடிக்கவும் முக்கியமான அழைப்பு வரவும் அங்கிருந்து வெளியேற நேர்ந்தது . இல்லை என்றால் பெயரையவது தெரிந்திருக்கலாம் என்று நினைத்து கொண்டான்.
இத்தனை வயதிற்கு பின் கல்லூரி வளாகத்தின் முன் சென்று நிற்பதும் சரியில்லை , தன் பெயர் நிர்வாகத்தின் பொறுப்புகளை உணர்ந்து அதை தவிர்த்தான் .
ஆதித்தன் குரூப்ஸ் ஆஃப் கம்பனியின் முதலாளி என்ற பெயர் முக்கியம் இல்லையா .
இப்போது "நினைவாலே அனைப்பேனே ... என்று மௌன ராகம் மோகன் போல் " பாடலின் நிலை ஆதிக்கு கிடந்த ஒரு வாரமாக பாவம்....
அன்றும் அப்படித்தான் அவனது அலுவலக வேலை முடித்து வீடு வந்து , அம்மா மீனாட்சி கைப்பக்குவத்தில் செய்த வைத்த சப்பாத்தி குருமா ...சுவையான இரவு உணவை முடித்த பின்
மொட்டைமாடியில் சற்று நேரம் உலவ நினைத்து மாடிக்கு வந்தவன் . அங்கு ஏற்றப்பட்டு இருந்த கொடி மல்லி மலரின் வாசமும் , வானத்தில் மறைந்து மறைந்து விளையாட்டு காட்டும் முழு நிலவும் ...ஆதியின் மனதில் அவளின் நினைவும் ஒரு வித மோன நிலைக்கு சென்றான் அவன்.
அங்கு மாடியில் போடப்பட்ட இரும்பு கம்பிகளால் இணைந்து ஃபோம் மேத்தை ஊஞ்சலில் அமர்ந்தான் .
அப்போதுதான் ...
கவிதை என்ற வார்த்தையை கூட
தெரிந்து வைத்திறாத ஆதித்தனுக்கே கவிதை வந்ததென்றால் பாருங்களேன் ....
கார் முகிலுடன் போட்டியிட்டதோ
அவளின் கார் குழல்
முழு நிலவாய் ஜொலிக்குது
உன் அழகிய முகம்
கோர்த்து வைத்த விண்மீனாய்
அவள் பல் வரிசை....
இரவு வாடை காற்றில்
எனக்கு குளிர் காய
சுடு காற்றை
என்னில் பாய்ச்ச தான்
அந்த கூர் நாசியோ...
தரிக்கெட்டு ஓடும் என் மனதிற்கு
கடிவாளம் நான் உனக்கு
அளிக்கும் மஞ்சள் கயிற்றில்...
கோல மயிலே சொல்லி விடு..
உன் பெயரை...
தினம் ஜெபித்து கொண்டே
வாழ்ந்து விடுவேனடி
என்று கன்னி கவிஞனாக கவிதை படித்து கொண்டு இருந்தான்....
மறுநாள்...
நிலா முக பெண்ணுக்கு அவனே மனதில் சந்தியா என்று பெயர் வைத்து கொண்டான்....தியா நீ எங்கே இருக்கிறாய் என்று மனதுள் கேட்டு கொண்டவன்... அப்படியே உறங்கி போனான் .
காலை நாளிதழை புரட்டி கொண்டு இருந்தான் ஆதி பின்னால் இருந்து இரண்டு வலிய கரங்கள் கண்ணை மூடியது....
டேய்... எருமை ஜனா... இன்னும் இந்த மொக்கை விளையாட்டை நீ விடலையா....
மச்சி... எப்படி டா... கண்டுபிடிச்ச...
இதுக்கு
ஏஜென்சி வேறு வைக்க வேண்டுமா...இந்த ஹைதர் அலி காலத்து விளையாட்டை இன்னும் விளையாடுவது நீ மட்டும் தான் என்ற ஆதியிடம் அவன் அசடு வழிந்தான் ஜனா.
கருமம் இதை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு... உள்ளே வா டா... அம்மாவை பார்க்கலாம்;....
இருவரும் கிச்சனுக்கு சென்று ஆதித்தனின் தாய் மீனாட்சியை பார்த்தனர்...
ஜனார்த்தனை பார்த்ததும் மீனாட்சியின் முகம் பளீச்சென்று மாறியது...அவருக்கு ஜனா மீது தனிப்பிரியம் .
அதற்கு ஒரே காரணம் அவன் தஞ்சை தரணியில் பிறந்தவன் என்ற ஒன்றே காரணம்....
தஞ்சை மண் மீது அவருக்கு தனி பிரியம் என்ன தான் இருந்தாலும் அவர் பிறந்த மண் அதுவல்லவா... ஆனால் அங்கே செல்ல பிடிக்காமல் பாகை துரும்பாக அவரின் அண்ணன் குடும்பம் அங்கே தான் இருக்கு...
என்ன ஜனா இந்த அம்மாவை .மறந்துட்ட போல
அம்மா... என்ன இப்படி சொல்றீங்க
எங்கே உன் பையை காணும்.... என்று அவர் தேட ..
அம்மா... இந்த முறை நான் தங்க வரலை உங்கள் எல்லோரையும் கடத்திட்டு போக வந்து இருக்கேன் என்றான் .
பின்னாடி எதுவும் அடியாள் பட்டாளம் கொண்டு வந்து இருக்கியா என்று ஆதி எட்டிப் பார்த்தான் .
இல்லை... ஒரே ஒரு பத்திரிகை... என தன் தங்கையின் திருமணப் பத்திரிக்கையை எடுத்து நீட்டினான் ஜனா .
மீனாட்சி மற்றும் ஆதி இருவரும் சந்தோஷமாக கொண்டார் பத்திரிக்கை யை பார்த்ததும்,
டேய் என்னடா திடீர் என்று சொல்ற ,என்றான்... ஆதி .
இல்லைடா திடீர் என்று முடிவாகிடுச்சு..
நல்ல குடும்பம்... அதான் என்றான்
ஜனா .
என்னால் அங்கு வர முடியாது... உனக்கே ஓரளவு விஷயம் தெரியும்...ஆதியை அழைச்சுட்டு போ... ஆஃபீஸ் வேலையை அப்பா பார்த்து கொள்வார் என்றார் மீனாட்சி...
இருவரும் ஆதி அறைக்கு சென்று பயணத்திற்கு தேவையான துணி எடுத்து வைத்து கொண்டு கிளம்ப
டேய் மச்சி... நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்... 28 வருஷமா கட்டுக்கோப்பா இருந்த என் மனசுக்குள் ஒரு பெண் வந்துவிட்டாள் டா என்றான் ஆதி
டேய் மச்சி சூப்பர் டா... யார் டா அந்த பெண்... இது ஜனா கேள்வியாக நண்பனிடம் .
முகமும் கல்லூரியும் மட்டும் தான் டா தெரியும் என்றான் ஆதி முகத்தை பாவமாக வைத்து கொண்டு....
நீ கவலைப் படாதே மச்சி பதினைந்து நாள்.... தங்கை கல்யாணம் முடிந்ததும் உன் ஆளை கண்டு பிடிக்கிறோம்... அம்மா முன்னாடி நிறுத்துறோம்... டும் டும் டும் கொட்டுகிறோம்... என்றான்...ஜனா
ம்ம்.... சரிடா மச்சி வா சாப்பிட்டு கிளம்பலாம் என்றான் ஆதி..
அதுவும் சரிதான் டா நான் வந்து சாப்பிடாம போனால் அம்மா என்னை மன்னிக்கவே மாட்டாங்க...
ஹா.. ஹா... அந்த பயம் இருக்கட்டும் ஜனா இந்த அம்மாக்கிட்ட , வாங்க ரெண்டு பேரும் சாப்பிட என்றார் ஆதியின் அம்மா மீனாட்சி ..
உணவு முடிந்து இருவரும் காரில் கிளம்பி விட்டனர் .
ஜனா எதை எதையோ பேசிக்கொண்டு வர சில விசயங்களுக்கு பதில் சொல்லுயும் சில விசயங்களுக்கு பதில் சொல்லாமலும் ஆதி நிலா முக பெண்ணைப் பற்றிய நினைவுகளில் மூழ்கி திளைத்தான் ..
ஜனா அவனை கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்து விட்டு ரொம்ப முத்தி போயிட்டு போலயே என்று சிரித்துக்கொண்டு அமைதி ஆனான்.
வாசலில் கார் சத்தம் கேட்டதும்
அம்மா..ஆதி அண்ணன் வந்துட்டாங்க என்று ஓடிவந்தாள் கல்யாண பெண் ஜானகி...
தன் அண்ணனை விட ஆதியின் மேல் அதிக பாசம் வைத்திருப்பவள் ஜானகி ஆதியும் அப்படியே தனக்கு சாருவை போல் இன்னொரு தங்கை ஜானகி என்றே நினைத்தான் .
தன் தோழிகளிடம் எல்லாம் என் அண்ணன் ஆதி ரொம்ப நல்லவன், வல்லவன் என்று எப்போதும் புகழ்ந்து கொண்டே இருப்பாள் அவர்களே ஆசைப்படும் அளவுக்கு.
இப்படி ஜானகி சொல்லி சொல்லியே இவளின் நெருங்கிய தோழி சந்தியா (ஆம் அவனை அறியாமலே அவளுக்கு வைத்த பெயர்தான் அவனவளின் உண்மை பெயரும்) அவன் எப்படி இருப்பான்.
இவ ஓவரா புகழ்றாளே அவனை ஒருதடவையாவது பார்க்கனுமே என்று மனசுக்குள் நினைத்துக்கொள்வாள்..
திருமணத்திற்கு நான்கு நாளுக்கு முன்பே வந்த ஆதி தன் சொந்த தங்கையின் திருமணம் போலவே திருமண வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தான் .
ஜானகி, ஆதியை எந்த அளவுக்கு எதிர்ப்பார்த்தாளோ அதே போல் தன் உயிர் தோழி சந்தியாவின் வரையும் எதிர் பார்த்தாள்.
திருமணத்தன்று முதல் நாள் காலையில் இருந்தே சந்தியா வர்றா.... சந்தியா வர்றா... என்று சொல்லுக்கொண்டே இருந்தாள் மணப்பெண் .
சந்தியா என்ற பெயரைக் கேட்டவுடனேயே ஆதி ஒரு நிமிடம் அவளா இருப்பாளோ என்று நினைத்தவன் ச்சீ.. ச்சீ... இருக்காது இது நானா வச்ச பெயர்தானே என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டான்..
என்னடி கல்யாண பொண்ணு கனவு கண்டுக்கிட்டு இருக்கியா என்ற குரல் கேட்டு திரும்பியவள் தியா...வந்துட்டியாடி... என்று கட்டிப்படித்து சந்தோசப்பட்டாள்.
கல்யாண வேலையெல்லாம் எப்படி போகுது டி...
ம்ம் ....அதுக்கென்ன சூப்பரா போகுதுடி என் ரெண்டு அண்ணன்களும் போட்டிபோட்டு செய்யறாங்க...
என்னடி சொல்ற உனக்கு ஒரு அண்ணன்தானே அப்பறம் எப்படி ரெண்டு 🤔?
நான் எப்போதும் சொல்வேனே என் ஆதி அண்ணன் அவங்கலதாண்டி சொல்றேன்..
ஆதி என்ற பெயரைக்கேட்டதுமே சந்தியாவின் மனம் அவரை பார்கனுமே என்று சொல்லியது..
அப்போ ஜானுமா என்ன பண்ற மச்சானோட கனவுல டூயட் பாடிட்டு இருக்கிய
ஜானகியின் அறையின் பக்கம் ஆதியின் குரல் கேட்க...
போங்க அண்ணா உங்களுக்கு எப்போதும் கிண்டல்தான் நான் என் ப்ரண்டு சந்தியாக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன் ; என்று அவளையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள் .
ஜானகியுடன் ,சந்தியாவை பார்த்த ஆதி மனம் துள்ள ஆரம்பித்தது மனதில் வண்ண , வண்ண பலூன்கள் பறந்தது ..
உண்மையாகவே அவள்தானா ,
அவளுக்கு பெயரும் நான் வைத்தது தானா கனவா இல்லை இது நிஜமா என்று அசையாமல் நின்றான்.
இதே நிலையில்தான் இருந்தாள் சந்தியாவும் . இவரைப் பார்த்தும் நம் மனம் ஏன் இவ்வளவு சந்தோசப்படுகிறது என்று நினைத்தாள் நாயகி .
இருவரையும் பார்த்து கொண்டு இருந்த ஜானகி 👏👏 என்ன அண்ணா என்னை கிண்டல் பண்ணிவிட்டு இப்போது இருவரும் டூயட் பாடுறிங்கலா என்றாள் 😁
போடி லூசு 🙈என்று சொல்லி விட்டு ஓடிவிட்டாள் சந்தியா..
ஆதி ஆமா....இல்லை என்று சொல்லி விட்டு அவனும் ஓடிவிட்டான்...
இது என்ன நாம விளையாட்டுக்குதானே சொன்னோம் ரெண்டு பேரும் ஓடுறாங்கலலே ஹ்ம்ம் ஏதோ சரியில்லையே🤔 என்று நினைத்துக்கொண்டு நின்றாள் ஜானகி .
ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடி சென்றதில் ஆதி நேரே ஜனார்த்தனன் முன்பு நின்றான் .
அவனின் சத்யாவை பார்த்த விபரங்களை தன் நண்பனிடம் சொல்லவும் .
ஜனா டேய் ...மச்சி மச்சம் டா… உனக்கு தேடவேண்டிய அவசியமே இல்லை . இரு நான் ஜானுவை போய் விபரம் கேட்டுட்டு வரேன் என்று கிளம்பினான் ஜனா.
பாவம் டா ஜானகி, கல்யாண பொண்ணு வேற, அவளை இதுல எப்படிடா மாட்டிவிடறது வேற எதாவது யோசிப்போம் .... என்றான் ஆதி
ஜனுவை என்ன உனக்கு தூது போகவா சொல்ல போறோம், உன் ஆளுக்கும் உன் மேல இஷ்டம் இருக்கான்னு, ஜானகி மூலமா தெரிஞ்சுக்க போறோம் அவ்வளவு தான் டா.
சரி டா ஜனா என்னமோ பண்ணு , எப்படியும் என் சத்யாவை பற்றி விபரம் தெரிஞ்சா போதும் என்று சிரித்தான் ஆதி 😬😬..
இரு டா, நான் ஒரு ஐடியா பண்ணிட்டு வர்றேன்.
ஜானகியின் அறையை நோக்கி சென்ற ஜனா,ஜானகியை தனியா அழைத்து அனைத்தையும் கூறினான்.
ஹய்...ஹய் , ஜாலி ஜாலி என்னோட பெஸ்ட் பிரண்ட், என்னோட அண்ணியா வர போறாளா, நினைக்கும் போதே பறக்கிற மாதிரி இருக்கு அண்ணா.
போதும் போதும் பறந்தது, ஆதி தான் லவ் பண்றான், ஆனா உன் பிரண்ட் மனசுல என்ன இருக்குன்னு தெரியலையே.
எனக்கு தெரிஞ்சு அவளும் ஆதி அண்ணாவை பார்த்ததுல இருந்து ஒரு மார்க்கமா தான் இருக்கா அண்ணா. ஆனா எப்படி கேக்குறதுனு தெரியலையே.
நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன், அத செய்யறீயா.
என்ன அது சொல்லு..சொல்லு.. என ஆர்வம் காட்டினாள் ஜானு . அண்ணா உன் தங்கச்சி எப்படி அசத்த போறானு பாரு .
உன் காதை குடு என்று காதில் ரகசியமாக சொல்லிவிட்டு சென்றான் ஜனா.
அறைக்கு சென்ற ஜானகி, சந்தியாவிடம் நான் இளநீர் குடிக்க தோட்டத்துக்கு போக போறேன், வர்றியா டி...
நான் வரல டி நீ போய்ட்டு வா, நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்.
சரிடி நான், ஆதி அண்ணா கூடவும் ஜனா அண்ணா கூடவும் தோட்டத்துக்கு போறேன் நீ நல்லா தூங்கு என்று சொல்லியபடி அங்கிருந்து போவதா போல் பாசாங்கு செய்தாள் ஜானகி .
ஆதி பெயரை கேட்ட சந்தியா சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள், எங்க போகலாம்னு சொன்னடி ஜானு தோட்டத்துக்கா, நானும் வர்றேன் டி, என்னையும் கூட்டிட்டு போ. இப்போ தான் வரல தூங்கணும் னு சொன்ன, அதுக்குள்ள என்ன ஆச்சு டி.
எனக்கு நீ சொன்னது சரியா கேக்கல டி, அதான் அப்படி சொல்லிட்டேன், என்னையும் கூட்டிட்டு போடி ப்ளீஸ்.
சரி சரி, அதுக்கு ஏன் டி கெஞ்சுற வா போகலாம்.(அடி கள்ளி உனக்கும் ஆதி அண்ணா மேல லவ் இருக்கா, என் கிட்ட கூட சொல்லமா மறைக்கிறீயா என்று மனதிற்குள் சிரித்து கொண்டாள். )
சந்தியா நல்லா இருந்த முகத்தை திரும்பவும் கழுவி, ஒப்பனை செய்து வந்தாள். என்னோட சுடிதார் நல்லா இருக்கா ஜானு இல்ல வேற மாத்தவா.
நாம போறது இளநீர் குடிக்க டி, உன்ன யாரும் பொண்ணு பார்க்க வறலையே, என்று சீண்டினாள் தன் தோழியை .
ஆமால, சரி சரி வா டி ஜானு, போகலாம் என அசடு வழிந்தாள் சத்யா . பின்...
ஆதி, ஜனா, ஜானு, சந்த்யா நால்வரும், அவர்களின் தோட்டத்தை அடைந்தனர்.
ஓய் கல்யாணப் பொண்ணு, பக்கத்தில் கல்யாணத்தை வச்சுக்கிட்டு ஊர சுத்துற? ஒரு இடத்தில் உட்கார்! என்று சொல்லி விட்டு, இளநீர் வெட்ட சொல்ல, சர சர வென , மரத்தில் ஏறும் பண்ணையாளை வேடிக்கை பார்த்த சந்தியா., என்னா வேகமா ஏறராரு! என்று அண்ணாந்து, பார்த்தபடி இருக்க, ஆதியின் கண்கள் அவளையே பார்த்தபடி, இருந்தது.
அண்ணாந்து பார்க்காதே பெண்ணே!
தரையில் இரண்டு, விண்மீன்களை,
பார்த்த, சூரியனும் குழம்பி போய்,
நிற்கிறது, கள்ளுண்ட போதையில்,
வானம் தலை கீழாக தெரிய!
என்னையும் கவிதை கிறுக்கனாக ஆக்கி விட்டாளே! இந்த தேவதைப் பெண்? காற்றில், மிதந்து வந்த,
ஊதாக் கலரு ரிப்பன், சிட்டுவேஷன் சாங்காக அமைய, அவளைப் பெற்ற, அப்பாவுக்கும், அம்மாவுக்கும், மானசீகமாக போட்ட, சலாம் க்கு, ஜனாவும், ஜானகியும் சிரித்து கொண்டார்கள்.
டேய் போதும் டா! ஜொள் விட்டது, அவளும் உன்னை வித்தியாசமாக பாக்குறா! ஜனா, சொல்ல, சந்தியா தன்னை, கேள்வியுடன், பார்ப்பதை பார்த்து, அறிவே இல்லடா ஆதி உனக்கு! என்று , திட்டி கொண்டான்.
இதோ, அன்று மதியம், திருமண மண்டபத்துக்கு, கிளம்பி கொண்டு இருந்தார்கள் அனைவரும்.
ஆதியும், , ஜனாவும், போட்ட லிஸ்டின் படி, பொருட்கள் எல்லாம் தயாராக இருக்கிறதா? என்று, சரிபார்த்து எடுத்து, வைத்து கொண்டு இருந்தனர்.
ஜனாவின் அம்மா, வந்து, ஜனா! மறந்துட்டேண் டா.... வெள்ளி குத்து விளக்கு, , கடையில் ஆர்டர் பண்ணி இருந்தோம், நான் போன போது, கேட்ட சைஸில் இல்லை.
அதனால், வேற செய்ய சொல்லி விட்டு வந்தோம் , மண்டபத்திற்கு போவதற்குள், வாங்கி வந்துடு! கண்ணு என்று ரசீதை நீட்டினாள்.
ஜனா கைவேலையாக இருக்க, இங்கே கொடுங்கம்மா. நான் போய் வாங்கி வந்து விடுகிறேன்!
கடையில் போய் ஃபோன் பண்றேன். நீங்கள், என் கிட்டே கொடுக்க சொல்லி, கடைக்காரர் கிட்ட சொல்லிடுங்க, என, சொல்லி கொண்டு இருக்க, சந்தியாவை இழுத்து வந்தாள் ஜானு.
அண்ணா, இவளுக்கு, ஃபேன்ஸி ஸ்டோரில், சில பொருட்களை வாங்க வேண்டி இருக்காம். அப்படியே இவள் சொல்லும் கடையில், நிறுத்தி இவளை இறக்கி விட்டுட்டு, விளக்கை வாங்கி வரும் போது, பிக்.அப் பண்ணிக்கோ அண்ணா! என்றாள்.
தேங்க்யூ தங்கச்சி. நீ அல்லவா இப்போது என் குல தெய்வம்! என
மனதில் நினைத்தபடி, போகலாமாங்க? என்றான் சந்தியாவை நோக்கி.
ம் … என்று சொல்லி விட்டு, கிளம்ப, ஆதியை பார்த்து தம்ஸ் அப் காட்டினாள் ஜானு, சந்தியா அறியாமல்.
பார்த்த முதல் நாளே... உன்னை பார்த்த
முதல் நாளே... ஓர் அலையாய் வந்து என்னை இழுத்தாய் பின் கடலாய் மாறி எனை அனைத்தாய்.....என்ற பீஜியம் ஒலி எழுப்ப...
பைக்கில் வான் வெளியில் பறப்பது போன்று பறந்தான் ஆதி.
சென்று கொண்டே இருந்தவன்,
திடீரென முளைத்த சந்தில் இருந்து, ஒரு சின்ன பையன், சைக்கிளை கையை விட்டு விட்டு, ஸ்டைலாக ஓட்டிய படி குறுக்கே வர, அவன் மீது மோதாமல் இருக்க, சடன் ப்ரேக்கை அழுத்த, வண்டி இடது புறமாக சரிய, கீழே விழுவதை தவிர்க்க நினைத்த ஆதியின் இடது கையால் வண்டியை, பேலன்ஸ் செய்து, சந்தியாவையும் கீழே விழாமல், காப்பாற்ற நினைத்த ஆதியின் பைக்கின் கூரிய இடப்பகுதி கையை கிழித்தது.
அவன் கையிலிருந்து ரத்தம் கொட்ட, பதறி போய் விட்டாள் சந்தியா
அவசரமாக, பைக்கில் இருந்த, முதலுதவி பெட்டியை எடுத்து, பஞ்சால் இரத்தம் வழிவதை துடைத்து, சவ்லான் இட்டு, பேண்டேஜ் துணியால் கட்டிவிட்டு, ஒரு டிடி போட்டுடலாமா? பக்கத்தில் டாக்டர் யாராவது இருக்கிறார்களா? என தன் அழகிய விழிகளால் அங்கும் இங்கும் பார்வையால் தேடினாள்.
அது வரை அவளுடைய, உபசரணைகளில் மயங்கி போய் இருந்தவன், இதுக்கு போய் இப்படி பதறலாமா? மணி ஆயிடுச்சு.
இதோ ஒரு கடை இருக்கு நீங்கள் போய் உங்களுக்கு, தேவையானதை வாங்குங்க! நான் நகைக் கடைக்கு போய்விட்டு வந்து விடுகிறேன்! என்று சொல்லி அவளை அங்கு இறக்கி விட்டு செல்ல, பார்த்து போயிட்டு வாங்க! என்ளாள் சதியா .
சரி என்று சிரித்தபடி பைக்கை கிளப்பினான் அவன்.
விளக்குடன் திரும்பியவன், அவளை இறக்கி விட்ட கடைக்கு வந்தான். வாங்கிட்டீங்களா என்றவனை, வாங்கிட்டேன்! இங்க கார்டு எல்லாம் அக்செப்ட் பண்ண மாட்டாங்களாம், பக்கத்தில் ஏ. டி .எம் எதுவும் இல்லை! என்றாள் தயக்கமாக.
இப்ப எவ்வளவு தரணும் என்று கேட்க 615/ ரூபாய் என்றார் கடைக்காரர்.
ஆதி பணத்தை எடுத்து நீட்ட, போற வழியில் எடுத்து தரேன்! என்றாள். நான் கேட்டனா? நான் எல்லாம் வளையல் வாங்கி தந்தால், போட்டுக்க மாட்டீங்களா என்றான்.. ம்ஹும், உரிமையோட தங்க வளையலே வாங்கி தாங்க, போட்டுக்கறேன்! என்று, குறும்பு சிரிப்புடன், நிலத்தை பார்க்க,
ஒர்க் அவுட் ஆயிடுச்சிடா ஆதித்தா! என்று வாய் விட்டே சொல்லி விட,
ஆகும்! ஆகும்! வண்டியை எடுங்கள்! என்று சொல்ல, சீறிப் பாய்ந்தது வண்டி..
வீட்டுக்குள் செல்ல, எதிர்ப்பட்ட ஜானு அவனை பார்த்து என்ன அண்ணா ? சிக்னல் கிடைச்சிடுச்சா? என்றாள்.
ஒரு சிரிப்புடன் அவளை கடந்து சென்றவன், சந்தியாவை தேட, சந்தியாவோட அப்பாவும், அம்மாவும் வந்திருக்காங்க! அவங்க அப்பாவை தேடி போய் இருக்கா! என்று ஜானு சொன்னாள்.
சந்தியாவின் அப்பா அம்மாவைப் பார்க்கும் ஆவலில் அவர்களைத் தேடிப் போனான் ஆதி.
அவர்கள் முதலில் மண்டபத்துக்கு போன காரில், மண்டபத்திற்கு சென்று விட்டதாக சத்யா கூறினாள் .
சரி மண்டபத்தில் போய் பார்த்துக் கொள்ளலாம் !என்று சொல்லிவிட்டு ;
சந்தியாவை ஜானுவுக்கு துணையாக அமர சொல்லிவிட்டு ,மற்ற பொருள்களை வண்டியில் ஏற்றுவதற்கு உதவி செய்யப் போனான் ஆதி.
மண்டபத்துக்கு போய், பரபரப்பான சூழ்நிலையில், சந்தியாவின் அப்பாவையும், அம்மாவையும் மறந்தே போனான் ஆதி.
சிறிது நேரத்தில் பெண் அழைப்புக்கு ரெடியாகி செல்வதற்கு, கல்யாணப் பெண்ணை போலவே ரெடியாகி வந்து நின்ற சந்தியாவை பார்த்து இமைக்க மறந்தவனாக மயங்கி நின்றான் ஆதி.
சந்தியா எங்கடா மா! இருக்க என்று ஒரு குரல் கேட்க, தோ அம்மா! இங்கே இருக்கேன் என்று அவள் குரல் கொடுக்கவும், சத்யாவை தேடி அங்கு வந்த பெண்ணை பார்த்த ஆதிக்கு ஒரு நிமிடம் தலை சுற்றியது.
இவர்களை எங்கோ பார்த்திருக்கிறோம்! எங்கு பார்த்திருக்கிறோம் ?என்று யோசித்தான், ஆதியின் வீட்டில் ஸ்டோர் ரூமில் கிடந்த ஒரு குடும்ப புகைப்படம் நினைவு வந்தது அவனுக்கு.
சித்திரா அத்தையா இவர்கள்? இந்த சித்திரா அத்தையின் பெண்ணா சந்தியா? அடடா ..., நம் காதலுக்கு, நம் உறவே, மங்களம் பாடிடும் போல இருக்கே! அப்பாவுக்கும், அத்தைக்கும் தீராப் பகை ஆயிற்றே.
சித்ரா அத்தையை பற்றி அம்மா சொன்ன தகவல்கள் நினைவு வந்தது . சித்ரா அத்தை, அவர்களின் தூரத்து சொந்தக்கார பையனான கோபியை விரும்பினாள்.
கோபியின் குடும்பம் சற்று வசதி குறைந்த குடும்பம். அத்துடன் கோபி, அவ்வளவாக படிக்கவும் இல்லை. சற்று சோம்பேறியாக, ஊர் சுற்றிக் கொண்டிருந்த அவனை, எப்படித்தான் காதலித்தாளோ இந்த சித்ரா தெரியவில்லை! காதலுக்கு கண்ணில்லை! காது இல்லை! எதுவுமே இல்லை என்பது ஊரறிந்த விஷயமாயிற்றே.
தாத்தாவுக்கும் அத்தையை கோபிக்கு கொடுப்பதில் அவ்வளவாக விருப்பம் இல்லையாம். ஆதியின் அப்பாவும், சித்தப்பாவும் கண்டித்து, வீட்டில் அடைத்து வைக்க,
காதல் தந்த தைரியத்தில், கோபியின் குடும்பம் தந்த ஆதரவிலும் , ஒரு கோவிலில் வைத்து கோபியை கரம் பிடித்து , திருமணம் செய்து கொண்டு போனாள் சித்ரா.
தாத்தாவுக்கு ஏகப்பட்ட கோபம். என் பேச்சை மீறி போனவள் ,இனி இந்த வீட்டு வாசப்படி மிதிக்கக்கூடாது! என்று சத்தம் போட்டார். என்னை மீறி அவளைப் பார்ப்பவர்கள் யாருக்கும், இந்த வீட்டில் நுழைய அனுமதி இல்லை! என்று சொல்லி எல்லாரையும் அவளுடன் பேசாமல் தடுத்தார்.
அப்போது ஆதி சிறு பையன் என்பதால், நடந்த விவரங்கள் எதுவும் அவனுக்கு அவ்வளவாக தெரியவில்லை .
சிறிது நாட்கள் சென்று , சித்ரா கர்ப்பமாக இருப்பதாக சொல்லிக் கொண்டு வீட்டுக்கு வர ,அவளை வீட்டுக்குள் சேர்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார் தாத்தா.
யாரை நம்பிக் கொண்டு, வீட்டை விட்டு போனாயோ? அவன் கூடவே இரு! இந்த வீட்டுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! என்று கோபமாக சொல்லி கதவை தாளிட்டு விட்டார்.
அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது என்றும், அதற்குப் பிறகு கோபியும், அவளும் அந்த ஊரை விட்டு, அவர்களது சொந்த ஊரான தஞ்சை யோடு வந்துவிட்டதாகவும் கேள்வி பட்டார்கள்.
அங்கு விவசாயத்தோடு, சிறு வர்த்தக நிறுவனமும் நடத்தி வருவதாக கேள்விப்பட்டதோடு சரி. அவர்களை யாரையும் நேரில் பார்த்ததில்லை ஆதி .
சித்ரா அத்தையின் குடும்பத்தோடு ஒட்டுறவு இல்லாமல் போய் நீண்ட நாட்களாகி இருந்தது.
இந்த நிலையில்தான் ,சந்தியாவை பார்த்ததும் ,அவளின் அழகிலும் அவளுடைய பாசத்திலும், கவிதையிலும் மேலும் அனைத்திலும் தன் மனதைப் பறி கொடுத்ததும் நினைவு வர, எப்படி இத்தனை எதிர்ப்புகளையும் மீறி ,அவளை கை பிடிக்க முடியும்? என்று யோசிக்க ஆரம்பித்தான் ஆதி.
அதற்குள் சந்தியாவின் குரல் கேட்டது நீ இங்க இருக்கியா ஆதி? அம்மாவும், அப்பாவும் உன்னை பார்க்கவேண்டும் என்று சொல்கிறார்கள்! உன்னை அறிமுகப்படுத்தி வைக்கிறேன் வா! என்றாள் .
இருவரையும் பார்த்து வணங்கி விட்டு, என் பெயர் ஆதித்யன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ள, அப்படியா? ரொம்ப சந்தோஷம்! எங்க இருக்க? அம்மா பெயர் என்ன? அப்பா பெயர் என்ன ?என்று கேட்க ,உடனே அவனுக்கு அப்பா பெயர் மகேந்திரன். அம்மா பெயர் மீனாட்சி என்றான்.
நீ... நீ.. என்று சித்ரா தடுமாற... ஆமாம் அத்தை! நான் உங்கள் அண்ணன் மகன் ஆதித்யன்! வெங்கடா சலத்தின் பேரன் .கோவிந்தனின் அண்ணன் மகன் . உங்களுடைய செல்ல மருமகன் என்று சொல்லவும், சித்ராவின் முகம் போன போக்கைப் பார்த்தால் பயமாக இருந்தது ஆதி , சத்யா இருவருக்கும் .
சட்டென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் சித்ரா , போகிற வேகத்தில் சந்தியாவையும் பிடித்து இழுத்துக்கொண்டு போனாள்.
ஆதித்யன் முடிவு பண்ணி விட்டான். சந்தியாவின் மனத்தை மாற்றி விட்டு விடுவாள். அவள் இனிமேல் நம் கூட பேசுவாளோ என்று கூட தெரியவில்லை அவனுக்கு.
மறுநாள் ஜானுவின் கல்யாணம் சிறப்பாக நடந்தது .அவனை பார்த்து ஒரு தயக்கத்துடன் சென்று கொண்டிருந்தாள் சந்தியா . இந்த பிரச்சனையை எப்படி கையாள்வது? என்று ஆதித்யனுக்கு யோசனையாக இருந்தது.
அன்று மாலை,திருமண மண்டபத்தை காலி செய்ய வேண்டும். மதியம் 3 மணிக்கு மேல் ஆகி இருக்க, அனைவரும் அவரவர் வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள் .
கல்யாண வீட்டு காரர்கள் மட்டும் இருந்து, கணக்குப் பார்த்துக் கொண்டும் அவர்களுடைய பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார்கள்.
சந்தியா பெற்றோருடன், ஒரு அறையில் அமர்ந்திருந்தாள். ஆதித்யா அவளை தேடிப்போக, சித்ரா சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அத்தை என்று கூப்பிட்டவனை, அப்படி கூப்பிடாதே, உங்கள் குடும்பத்திற்கும், எனக்கும் தான் ஒரு ஒட்டும் உறவும் கிடையாது! என்று எழுதப்பட்டு விட்டதே! இப்போது எங்கிருந்து வந்தது அத்தை என்ற உறவு? என்றாள் கோபமாக.
அத்தை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் சென்ற பிறகு , சில நாட்கள் கழித்து, அங்கு நடந்த அனைத்தையும் அம்மா எனக்கு சொன்னார்கள்!
உங்களுக்கு விருப்பம் இருந்தால், எல்லா விவரங்களையும் சொல்கிறேன் என்றான் ஆதித்யா.
நீங்கள் அந்த வீட்டை விட்டுப் போன உடன், நம் குலதெய்வம் துர்க்கையம்மன் கோவிலுக்கு சென்றிருந்தோம் உங்களுக்குத் தான் தெரியுமே! நம்ம வீட்டில் என்ன நல்ல விஷயம் நடந்தாலும், கோவிலில் சென்று பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம் என்று! அதுபோல் குடும்பத்தோடு சென்றோம்!
அங்கு நேர்த்திக் கடன்களை எல்லாம் முடித்து விட்டு, தாத்தா தன் குடும்பத்தில் நடந்து விட்ட, தன் மகளின், தங்களுக்கு பிடிக்காமல் நடந்த, திருமணத்தைப் பற்றி சொல்ல, பூசாரிக்கு அருள் வந்து விட்டது.
அவர் உங்கள் பெண் இந்த வீட்டை விட்டுப் போனது நல்லது! அதுவும் உங்களுக்கு பிடிக்காத ஒருவரை, திருமணம் செய்து கொண்டு போனது மிகவும் நல்லது.
ஏனெனில் உங்களுடைய மூத்த மகனுக்கு(அதாவது என் அப்பாவுக்கு),30 வயது ஆகும் போது, அவளுக்கு கூட பிறந்த சகோதரிக்கு ஆபத்து! என்பது அவருடைய ஜாதகத்தில் இருக்கும் விஷயம்.
அவருக்கு 45 வயது, நடக்கும் வரை அவள் தன் கூடப்பிறந்த தங்கையை, பார்த்தால் அந்த குடும்பத்தில் இருக்கும் அவளுக்கும், அவளுடைய வாரிசுக்கும், பல பிரச்சனைகள் ஏற்படும். உயிருக்கு கூட ஆபத்து ஏற்படும். அதனால் அவளை ஒரு பதினைந்து வருடங்களுக்காவது, பார்க்காமல் இருந்தால் நல்லது. அதற்குப் பிறகு திசை மாறும்பொழுது, அவளாகவே தேடி வருவாள். அப்பொழுது உங்கள் உறவு நீடிக்கும் என்று கூறினார்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது! என்பதனால் தான், அப்பாவும் தாத்தாவும், உங்களை பார்க்க விடாமல் செய்தார்கள்.
உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்! என்று குலதெய்வம் கோவிலில், வருடாவருடம் உங்கள் பிறந்த நாளன்று அப்பா அன்னதானம் செய்து, அவர் விரதமிருந்து வேண்டி கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அத்துடன், ....
உங்களுடைய குடும்ப நண்பரான ராமையா மாமா மூலம், மாமாவுக்கு வேண்டிய பணத்தை, தேவையான போது கொடுத்து வருவது அப்பா தான்! நீங்கள் வேண்டுமானால் ராமையா மாமாவை கேட்டுப் பாருங்கள்! .
நீங்களே யோசியுங்கள், உங்களுக்கு கடை வைக்க ,மற்ற விவசாய செலவுக்கும் நீங்கள் கேட்கும் போதெல்லாம், ராமையா பணம் கொடுப்பதற்கு, அவர் அவ்வளவு வசதியானவரா? என்பதை நினைத்துப் பாருங்கள்! நான் பொய் சொல்வதாக உங்களுக்கு தோன்றினால், நீங்களே கேட்டுப் பாருங்கள் என்றான்.
அப்பாவும் சித்தப்பாவும் உங்களை என்றுமே வெறுத்ததில்லை! தாத்தா இறந்து போன போது கூட உங்களுக்கு சொல்ல வேண்டும்! என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்! ஆனால் அப்பாதான் தீர்மானமாக மறுத்துவிட்டார்! அவள் வந்தால் என்னை பார்க்கும் படி இருக்கும்! அதனால் அவளுக்கு ஏதாவது பிரச்சினை வந்தால், அதை தாங்குவதற்கு எனக்கு தைரியம் இல்லை என்று சொல்லிவிட்டார்.
பகையான அவள் ,பகையான வளாகவே இருந்துவிட்டுப் போகட்டும்! ஆனால் அவள் நல்ல முறையில் இருந்தால் போதும்! என்பதே அவர் எண்ணமாக இருந்தது. இப்போது வேண்டும் என்றால், நான் 'கான்ஃபரன்ஸ் கால்' போட்டு தருகிறேன்! நீங்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருங்கள்! அப்பா என்ன சொல்கிறார் என்று மட்டும் கேளுங்கள்! என்று சொல்லிவிட்டு, செல்போனை ஆன் பண்ணி, அத்தையின் எண்ணை தொடர்பில் வைத்து விட்டு அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, அப்பாவின் நம்பருக்கு போன் செய்தான் ஆதி.
சொல்லு ஆதி! ஜானுவின் கல்யாணம் நல்லபடியாக நடந்ததா? எங்களுக்குத்தான் வரமுடியாமல் போய்விட்டது! என்று சொல்லும் மகேந்திரனின் குரல் கேட்டது. நன்றாக நடந்தது அப்பா! ஒரு நல்ல விஷயம் ,அந்தக் கல்யாணத்தில் நான் நம்ப சித்திரா அத்தையை பார்த்தேன் என்றான் ஆதித்யா! அப்படியா அப்பா? சித்ராவை பார்த்தியா? நல்லா இருக்காளா அவ ?கோபி நல்லா இருக்காரா? அவளுக்கு ஒரே ஒரு மகள்! என்று நினைக்கிறேன்! அவளை பார்த்தியா? அவள் எப்படி இருக்கிறாள்?
என்று விசாரித்தார்.
அதற்குள் அம்மாவின் குரலும், சித்தப்பா , சித்தியின் குரலும் கேட்டது. சித்ராவ பாத்தியா அப்பா? நல்லா இருக்காளா? என்று அனைவரும் மாற்றி மாற்றி விசாரிக்க ,திரும்ப அவளை பார்க்க வேண்டும் என்று இருக்கிறது! பகையாளியாகவே நினைத்துக் கொண்டு இருக்கிறாள் அவள் .
அவள் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான், மனதை கல்லாக்கி கொண்டு, அவளிடம் பகையாக இருப்பது போல நடித்து கொண்டு இருக்கிறோம்.
15 வருடம் கழித்து அவளை பார்க்கலாம்! என்று, சொன்னதால், பார்க்க போகவேண்டும்! என்று தோன்றினாலும், இவ்வளவு நாள் இல்லாமல், என்ன திடீர் பாசம்! என்று அவள் கேட்டு விடுவாளோ? என்று பயமாக இருக்கிறது என்றார்.
அதற்கு மேல் சித்ராவால் அமைதியாக இருக்க முடியவில்லை! அண்ணா எப்படி இருக்கீங்க அண்ணா? நல்லா இருக்கீங்களா? அண்ணி எப்படி இருக்கீங்க? எல்லாரும் நல்லா இருக்கீங்களா ?உங்கள பத்தி எல்லாம் சரியா புரிஞ்சுக்காம நானும் தப்பு தப்பா நினைச்சிட்டேன் , எல்லாத்தையும் எல்லாரையும் ,புரிஞ்சுக்கிறதுக்கு நேரமும் காலமும் வரணும் இல்லையா ?
அது இப்ப ஆதி மூலமாக எனக்கு கிடைச்சிருக்கு! நான் அவனைப் பார்த்தது ஒரு நல்ல நேரம் என்று தான் நினைக்கிறேன்.
திரும்ப நம் குடும்பம் ஒன்றாக சேர்வதற்கான ஒரு வாய்ப்பாக அது அமைந்தது எனக்கு மகிழ்ச்சியே! விரைவிலேயே நான் உங்களை பார்க்க வருகிறேன்! அண்ணா வீட்டுக்கு நான் வரலாம் இல்லையா என்றாள்?
என்னம்மா இப்படி சொல்லிட்ட? நீங்க எப்ப வருவேனு காத்துக்கிட்டு இருக்கோம் நாங்க! மாப்பிள்ளை கிட்ட குடு !என்று சொல்ல , கோபியும் வாங்கி பேசினார்! உன் மருமக பேசுவா! என்று சந்தியாவிடம் ஃபோனை நீட்ட, ஹலோ மாமா! நல்லா இருக்கீங்களா ?என்றாள் சந்தியா.
பிறந்ததிலிருந்து உன் முகத்தை கூட பார்த்ததில்லை! எவ்வளவு பாசமா மாமானு கூப்பிடுற ஒரு , உங்களையெல்லாம் பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கும்மா! என்று ஆதியின் அப்பா சொல்ல, அந்த இடமே சில்...🌧️🌧️ என்ற ஒரு பாச மழையில் நனைந்து கொண்டு இருந்தது.
மகிழ்ச்சியுடன் போனை வைத்த ஆதி இப்ப மகிழ்ச்சியா அத்தை? உங்க அண்ணன் கூட எல்லாம் பேசி விட்டீர்களா? என்றான். இப்ப தான ஆரம்மிச்சிருக்கோம்! இனிமேல் தான் எல்லாத்தையும் பேசணும் என்றாள் அத்தை.
இவ்வளவு தான் அத்தை வாழ்க்கையின் ரகசியமே! எல்லா பிரச்சனைகளும் பெரிய விஷயமே இல்ல! உட்கார்ந்து பேசினால் எந்த பிரச்சனைகளைத் தீர்த்து விடலாம். காலம் தாழ்த்தாமல் , பொறுமையாக அமர்ந்து பேசினால், தீர்க்க முடியாத பிரச்சினைகளே இல்லை
என்ன அதற்கு நேரம் ,காலம் அமைய வேண்டும்! என்றான்.
சரியா சொன்ன டா... மருமகனே என்றார் கோபி . அந்தப் பக்கமாக வந்த ஜனா, என்னடா ஆதி! உன்னை ரொம்ப நேரமா காணோமே! என்று தேட , அவன் சந்தியா மனதோடு காணாமல் போயிட்டான்.
நீதான் கண்டு பிடிக்கணும் என்று சிரித்தார்கள் ஜனாவின் அம்மா!
ஒரு கல்யாணத்துல தான், இன்னொரு கல்யாணமும் நிச்சயமாகும் என்று சொல்வாங்க! நம்ப ஜானு கல்யாணத்துல, ஆதியோட கல்யாணம் நிச்சயம் ஆகி ஆயிருக்கு .
அடேய்....ஆதி கல்யாணத்துலயாவது என் கல்யாணம் நிச்சயம் ஆகுமாடா? என்றான் ஜனா பரிதாபமாக.
அது இந்த ஜென்மத்தில் கிடையாதுடா! என்று ஆதி வார, டேய் உன்னை எல்லாம்! என்று அவனை துரத்தி துரத்தி அடிக்க ஆரம்பித்தான் ஜனா.
ஆதியில் தோன்றிய நிலவாவள் ஆதிக்கு சொந்தமாகியது ..இனி யாவும் இன்பகரமாகவே..
நிறைவு.
© piyu