பசிக்குது சோறு போடுமா.
சோறு போடுமா....!
மனிதன் சாப்பிட்ட மூக்காலங்கள்
தாத்தா: உயிர்வாழ // உழவு செய்ய.
அப்பா: பசிக்காக // படிப்பற்காக.
பேரன்: ருசிக்காகவும்//ரீசார்ஜ் செய்யவுமா?
அப்பொழுது , எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
நெற்கதிரை(நெல்+கதிர்) கதிரடிக்க வாசலில் கட்டு கட்டாக மலை போல் குவித்து வைத்து இருந்தார்கள். நான் அதன் மேல் ஏறி என் அழகான ஊரையும் ஏரிக்கரையும் எருமை மாடுகளையும் பார்த்து ரசித்ததும், கையில் குச்சியுடன் மேலே நின்று ஊருக்கே நான் ராஜா போல் ஆனந்தமாக நின்றது ஞாபகம். அப்பொழுது என் தாத்தா கதிரடிக்க, ஆயா அதை தூற்றி நெல்லைப் பிரித்தவுடன். அதை அனைத்தும் முத்து மணியைப்போல் பார்த்து பார்த்து மூட்டையில் அள்ளி எடுத்து வைத்தார்.
நான் : சிதரிய நெல்லை எடுத்து வந்து மூட்டையில் போட்டேன்.
தாத்தா : குச்சிய கீழ போடு , அதை நான் அள்ளிக்கிறன் நீ போய் விளையாடு .
நான் : ஏன் தாத்தா நான் எடுக்க கூடாதா?
தாத்தா : நீயும் உன் அப்பா மாதிரி நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போகனும். இதெல்லாம் என்னோடு போகட்டும்.
தொலைவில் புல்லட் சத்தம் கேட்டவுடன் தாத்தாவிடம் சொல்லிவிட்டு , ஒடிப்போய் அப்பாவைப் பார்த்தேன்.என் கையில்...