"கனவுகளுடன் கருகிய பயிர்"
"" வணக்கம்! சென்னையில் பிரபல மகளிர் கல்லூரி விடுதியில் ஒரு மாணவி தன்னை தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். காவல்துறை உயர் அதிகாரிகள் வந்து பார்த்தனர். கையில் பெரிய பேப்பர் மடித்து வைத்து இருந்தார். அதை எடுத்து பிரித்து பார்த்தனர். அதில் உயர்திரு காவல்துறை அதிகாரிகளுக்கும். தமிழக அரசுக்கும், வணக்கம் என் பெயர் பவித்ரா நான் ஒரு ஏழை விவசாயின் ஒரே மகள். நான் நன்றாக படித்து உயர்ந்த பதவியில் இருக்க வேண்டும் என்று என்னுடைய பெற்றோரின் விருப்பம். என் குடும்பத்தின் வறுமையை தெரிந்து நான் நன்றாக படித்தேன். நான் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன். என்னிடம் என் பெற்றோர்கள் மேற்கொண்டு என்ன படிக்கப் போகிறாய் என்றார்கள். நான் மருத்துவம் படிக்க போகிறேன் ஏன் என்றால் என்னுடைய கிராமத்தில் மருத்துவ வசதி இல்லை. டவுனுக்கு சென்று மருத்துவம் பார்க்க வசதி இல்லாததால் நிறைய பேர் இறந்தனர். ஆகையால் எங்கள் கிராமம் போன்று இன்னும் எவ்வளவு கிராமங்கள் மருத்துவ வசதி இல்லாமல் இருக்கின்றது. எவ்வளவு பேர் இறக்கின்றனர். அதுபோன்று மருத்துவ வசதி இல்லாத கிராமங்களுக்கு சென்று இலவசமாக மருத்துவம் பார்க்க ஆசைப்பட்டேன். நான் நல்ல மார்க் எடுத்த படியால் சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. விடுதி மற்றும் கல்லூரி கட்டணம் அனைத்தும் காலர்ஷிப் இல் இலவசமாக கிடைத்தது என்னுடைய பெற்றோர்கள் சந்தோஷப்பட்டனர். நானும் நிறைய கனவுகளுடன் சென்னைக்கு படிக்க வந்தேன், சில மாதங்கள் சென்றன, என்னுடைய படிக்கும் சக மாணவிகள் யாரும் என்னிடம் சரியாக பேசுவது இல்லை. என்னைக் கண்டால் ஏதோ...