...

11 views

திருமண என்னும் வேடிங்
முகூர்த்த நேரம் முடிய போகுது சீக்கிரம் பெண்ண கூட்டிட்டு வாங்க.

ஏம்மா, சீக்கிரம் வாங்க எனக்கு இன்னும் இரண்டு கல்யாணம் இருக்கு அத ஸ்கைப் ல தான் பண்ணி வைக்கனும் போல என்று ஐயர் தன் வேலையில் கண்ணாயிரமாக இருந்தார்

ஹேம குண்டத்தில், ஹேம வளர்க பெண்ணையும், மாப்பிள்ளையும் அனைவரும் முன் நிற்க வைத்தனர்.

தாலி யார் எடுத்து கொடுக்க போறது இப்படி மூன்னாடி வாங்கோ.

சத்த இரு பா. இன்னும் president பொண்டாட்டி வரல.

ஏன்ங்க இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படி நிங்க வைப்பாங்க நிற்க முடியல என்ற மணப்பெண் கூற.

கொஞ்சம் பொறுத்துக்கோ. நம்ப நடக்காத நட யா. என்று தாஜ செய்தான் மணமகன்.


வெயில் ஏற ஏற கூட்டம் அங்கென்றும், இங்கொன்றுமாய் கலைந்தது.

விட்ட நம்ப கல்யாணத்துல நம்ப மட்டும் தான் இருப்போம் போல என்று மணப்பெண் சிரித்தாள்.

ஏய் சும்மா இரு நம்ப ஜனத்துலே நமக்கு தான் இப்படி ஊர் கூடி கல்யாணம் என்று மணமகன் அதட்டினான்.

டேய், போடா போயி president வீட்டுல போயி பார்த்துட்டு வா என்று ஊர் பெரியவர் சொல்ல ஒரு சில்லு வண்டு president வீட்டை நோக்கி ஓடியது.

கோயில் வாசலில் ஸ்பீக்கர் கட்டி ஓரே பாட்டு கச்சேரி பெருசு முதல் சிறுசு வரை ஓரே ஆட்டம்.

நம்ப ஊர்லே அவங்களுக்கு தான் இப்படி ஒரு கல்யாணம் நடக்குது போ குடுத்து வச்ச ஜோடி டீ என்று ஊர் மக்கள் பேசி கொண்டனர்.

மங்கள்யம் தந்துனனேன என்று ஐயர் மங்கள நாணயங்களை சொல்ல என்னய்யா ஃபோன் ஆ பார்த்து ஒளருற என்று ஒருவன் கேட்க

என்ன பண்றது எனக்கு டைம் ஆச்சு அது தான் ஸ்கைப் லே ஒரு கல்யாணத்தை முடிச்சிட்டேன். நாளைக்கு ஒரு aboard கல்யாணம் வேறு இருக்கு. உனக்கு எல்லாம் சொன்ன புரியாது...

ஆனா ஐயரே நீ ரெம்ப hi tech ஆ மாறிட்ட.

President அம்மா வந்துட்டாங்க என்று ஓரு வண்டு சொல்ல.

அது புருசன் தான் president என்னமோ இந்த அம்மாவே president கணக்க scene போடுதுடீ.

நமக்கு என்ன கூப்புட்டாங்க வந்தோம் அவ்வளவு தான் வாயா மூடிட்டு நில்லுங்க என்று ஊர் பெண்களின் வாய் நமநமத்தது.

ஐயர் வாய்யா அம்மா வந்துட்டாங்க.

மாப்பிள்ளையும் அக்னி குண்டத்த சுத்தி வந்து மாலையா மாத்திகோங்க.

யோவ், இன்னும் தாலியே கட்டல அதுக்குள்ள சுத்தி வர சொல்லற.

ஏய் இங்க ப்பா. என் ஃபீஸ் அ paytm பண்ணிடுங்கோ. வச்சிடுறோன். Happy married life da மாப்புள்ள.

அம்மா, தாலி எடுத்து கொடுங்க.

என்னது நானா. என்னமோ நோய் எல்லாம் வருது கழுதைக்கும் மனுஷனுக்கும் கல்யாணம் பண்ணி வச்ச மழை வர மாறி நோய் வராது னு சொன்னிங்களே னு வந்தேன்.டேய் ஐயர் தானா தாலி கட்ட போறாரு ஏன் இரண்டு கழுதைய புடிச்சிட்டு வந்திங்க ஒன்ன ஓட்டி விடுடா.

அய்யோ... எங்கள பிரிங்காதீங்க நான் இந்த ஐயர கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.
அய்யோ அத்தான்....அந்த மனுஷங்க கழுதைய இருத்த கூட காதல்ல சேத்து வைக்க மாட்டாங்க போல.

ஐயரே என்ன பார்வ தாலி ய கட்டுங்க.

டேய் நான் தான் அவ புருசன்... நிறுத்துங்க... நிறுத்துங்க... என்று அலறி ஆண் கழுதையின் குரல் வெளியில் கேட்காததால் அக்கூட்டம் கழுதையின் திருமண வைபவத்தை ஆவலுடன் எட்டிப் பார்த்தனர்.

மங்கள வாத்தியங்கள் முழங்க, எல்லாரும் அச்சத்தை தூவ மங்கள நாணங்கள் ஒத கழுதையின் கழுத்தில் திருமங்கலயத்தை கட்டினார் ஐயர்.

டேய் நான் கட்ட வேண்டிய தாலி டா அது.
நீங்க எல்லாம் கரோனா வந்து தான்டா சாவிங்க. கழுதைக்கு கூட கட்டாய கல்யாணம் பண்றாங்க நல்ல வேலை மனுசன் ஆ பெறக்கல. ஆறு அறிவு இருந்தும் மிருகமா இருக்குறதுக்கு அஞ்சு அறிவு இருக்குற கழுதைய இருக்கலாம்

போனால் போகட்டும் போடா என்று ஸ்பீக்கர் அலறியது...

      
        #வரிகளுடன்_நான்