...

7 views

மாங்கல்ய பாக்கியம் அருளிய நாய்
மாங்கல்ய பாக்கியம் அருளிய நாய்.


எனக்கு மாங்கல்ய பாக்கியம் அருளிய நாயை பற்றி அறிய, இந்த கதையை இறுதி வரை படியுங்கள்.
 



மாங்கல்ய பாக்கியம் அருளிய நாய்.


எனக்கு மாங்கல்ய பாக்கியம் அருளிய நாயை பற்றி அறிய, இந்த கதையை இறுதி வரை படியுங்கள்.
 


                                 கவுண்டமணி சார் சொன்ன  "கல்ல கண்டா நாய காணோம். நாய கண்டா கல்ல காணோம்" டயலாக் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். அது மாதிரி எனக்கு நாயை பிடிக்காது. நாய்க்கும் என்னை பிடிக்காது. நான் சொன்னது தெருவில் ஓடி பிடித்து, கடித்து விளையாடும் நாய்களை. எங்கள் வீட்டில் வளர்ந்த நாய்களை எனக்கு  நன்றாக பிடிக்கும்.

                எனக்கு மாங்கல்ய பாக்கியம் அருளியதும் ஒரு நாய் தான். அதை இந்த கதையின் இறுதியில் சொல்கிறேன்.
               
                     சென்னையில் தங்கி இசை பயின்ற காலம் அது. பம்பாய் மாநகரத்தில் ஒரு இசை போட்டியில் கலந்து கொள்ள நானும் எனது மச்சானும் ரயிலில் புறப்பட்டோம். புனே நகரத்தில் ஒரு நாள் தங்கிவிட்டு செல்ல தீர்மானித்தோம்.
              புனேவில் "கோண்ட்வா" எனும் இடத்தில் எனது மச்சானின் நண்பன் வசிக்கும் பெரிய அப்பார்ட்மென்ட்.  நண்பன் வரவேற்பான் என்று நினைத்தோம். ஆனால் வரவேற்றது ஐயா ஜிம்மி. ஜிம்மி சார் தான் அங்குள்ள நாய் இனத்தை சார்ந்த  காவலாளி போல. சென்ற உடனேயே என்னையும் மச்சானையும் அப்பார்ட்மென்டை சுற்றி ஐந்து ரவுண்டு ஓடவிட்டது. ஜிம்மி கம்மியாக ஓட விட்டது அன்று தான் என்று அங்கு வசிப்பவர்கள் சொன்னார்கள்.
                     கொஞ்சம் விட்டிருந்தால்  மொத்தமாக பிடுங்கியிருக்கும், சதையை.

               அன்று இரவு அங்கிருந்து பம்பாய் செல்ல தயாரானோம். ரெண்டு ரவுண்ட் ஓட விட்டு ஜிம்மி சார் எங்களை உற்சாகப் படுத்தி வழியனுப்பி வைத்தார். ஜிம்மி சார் இதுக்கு முன்னாடி பி.டி வாத்தியாராக இருந்திருப்பாரோ?

           பம்பாய் சென்று போட்டியில் தோற்று மீண்டும் அடுத்த நாள் இரவில் களைப்பாக பூனே வந்தோம். ரயில் நிலையத்தில் ஒரு ஆட்டோ பிடித்தோம். "கோண்ட்வா" போகவேண்டும் என கூறினோம். "கோண்ட்வா" மற்றும் "கோண்ட்வா கூர்க்" என இரண்டு இடங்கள் உள்ளன. உங்களுக்கு எங்கு செல்ல வேண்டும் என ஆட்டோ டிரைவர் கேட்டார்.   எங்களுக்கு சரியாக தெரியவில்லை. அன்று பூனே நகரம் முழுவதும் சுற்றிக் காட்டிய பெருமை அந்த ஆட்டோ ஓட்டுனரையே சாரும். முகவரியை எழுதி வைக்காதது எங்கள் தவறு தான்.   சுமார் இரண்டு மணிநேர பயணத்துக்கு பிறகு நண்பனின் வீடு வந்து சேர்ந்தோம். ஜிம்மியை பற்றிய பயம் இருந்தது. நாம் எதிர்பார்த்தது போலவே அப்பார்ட்மென்ட் கேட் அருகே நின்றிருந்தார் மிஸ்டர் ஜிம்மி.  கூடவே இரண்டு மனிதர்களும். அதனால் எங்கள் சதை தப்பியது.

              நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம்...ஒரு நாள் எனக்கு காய்ச்சல். சாயங்காலம் ஆறு மணி வாக்கில் பக்கத்தில் உள்ள மருத்துவரிடம் மருந்து வாங்க என் தந்தை அழைத்துச் சென்றார்.

மருந்து வாங்கிவிட்டு திரும்பி வரும் வழியில்
எனது காதில் "லொள்" என்ற சத்தம் கேட்டது. வேறு ஒன்றையும் நான் உணரவில்லை. தொடை பகுதியில் இருந்து ரத்தம் வந்தது.

        திரும்பவும் என் தந்தை அதே மருத்துவரிடம் தூக்கிச் சென்றார். அங்கு சென்று பார்த்த போது கடிக்க கூடாத இடத்தில் நாய் கடிக்கவில்லை. நல்ல வேளை, ஒரு சென்டி மீட்டர் மேலே கடித்திருந்தால் இன்று எனக்கு திருமண பாக்கியமே இருந்திருக்காது. பாவம் பார்த்து எனக்கு மாங்கல்ய பாக்கியம் அருள தான் ஒரு சென்டி மீட்டர் கீழே கடித்துள்ளது என நினைக்கிறேன்.

      அப்ப அந்த நாய் தான் எனக்கு மாங்கல்ய பாக்கியம் அருளிய நாய். சரி தானே?

- அப்துல் ஹலீம்
                                


© Dr. Abdul Halim