...

11 views

சோழத்து நாயகன்
அம்மா அம்மா மா மா மா . என்ன பாப்பா. சும்மா நச நச னு பண்ணுற அதுக்கு தான் உன்ன எங்கையும் கூட்டிட்டு வரதுயில்ல. என்ன மா நீ. நீ தானா
சொன்னா பாட்டி வீட்டுக்கு போறப்பா பெரிய கோவிலுக்கு கூட்டிட்டு போறேனு. இப்ப தானா வந்த இருக்கோம். நாளைக்கு போகலாம்.. பிளஸ் மா.. பாட்டி சொல்லு பாட்டி.. கூட்டிட்டு போமா... சரி கிளம்பு.
   ப்பா எவ்வளவு பெரிய கோவில்.. வா மா சீக்கிரம் உள்ள போகலாம்.. இரு பிரியா.... ஹே ஏன் பின்னாடி போற என் height கு கோவில் full ah தெரில மா.... ப்பா.. அவ்வளவு height.. யாரு மா கட்டினா இந்த கோவில.. யாரு கட்டினா னு தெரியமா தான் போகனும் போகனும் னு குதிச்சியா..
இராஜராஜன் சோழன் கட்டினர்.. அவர் எப்படி இருப்பாரு. எங்க இருப்பாரு இப்ப. அவரு செத்து எத்தன வருசம் ஆச்சே யாருக்கு தெரியும். பேசமா வா.. இல்லான வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவேன்..
         குழந்தாய் என்னை அழைத்தாயா?
அவளின் சின்ன கண்களை அகால விரித்து அந்த ஆறடி உருவத்தை உற்று நோக்கினாள்.. நீங்க யாரு... 23 ஆம் புலிகேசி மாறி இருக்கீங்க.. புலிகேசியா,யார் அவர்.. அவர தெரியாத. புலிகேசி உங்கள மாறி பெரிய கத்தி, வாள் உங்கள மாறி செயின் எல்லாம் போட்டு இருப்பாரு ஆனா மீசை u மாறி வலைஞ்சு இருக்கும்..
  நீ யாரை சொல்கிறாய் என்று தெரியவில்லை குழந்தாய்.
      நான் இக்கோவிலை கட்ட முன்மொழிந்தவன். அருண்மொழிவர்மன்
என்கிற இராஜராஜசோழன்.
நீங்க பேய் தானா அப்ப.....