...

2 views

கண்ணோடு மணியானாய்
காதலை கொடுப்பவரை விட அதை பெருகிறவர் தான் நமக்கு அதிர்ஷ்டசாலியாக தெரிவார்... அதன் படி பார்த்தால் இங்கு காதல் கொடுப்பவரும் காதலை பெருபவரும் இருவருமே அதிர்ஷ்டம் உடையவர்கள் தான்.


சேர்ந்தால் மட்டுமா காதல்... மனதில் நின்றவளை/ நின்றவனை நினைப்பதே காதல் தான்...

காதலை கண்முன் உருவமாக நினைத்து காதலியை மனதில் உயிராக வைத்து வாழும் ஒருவனின் காதல் கதை...

மனதில் நிரம்பி வழியும் காதலை வலியாய் அனுபவிக்கும் ஒருவனின் காதல் கதை...

காதலியும் அவனே காதலனும் அவனே.. உயிராய் நினைத்தவள் உயிருடன் கலந்து இருக்க, அவளை வெளிக் கொண்டு வர முடியாமல் தவிக்கும் ஒருவனின் காதல் கதை..

காதல் , காதல் , காதல் மட்டுமே வாழும் இந்த காதல் கதை...

💞💞💞💞💞

காதலை மட்டுமே மையமாக வைத்து எழுதும் ஒரு காதல் கதை... என்னால் முடிந்த மட்டும் காதலை கொண்டு நிரப்புகிறேன் இந்த கதையை...

💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

அத்தியாயம் 1 :

மலை உச்சியில் அமைந்துள்ள சின்ன ஒட்டு வீடு ஒன்றில், அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் அனைத்தும் இருந்தது...
அந்த வீட்டின் முன்னே ஒரு சாய்வு நாற்காலி போடப்பட்டு இருந்தது. அந்த நாற்காலியில் அமர்ந்து ஆடிக்கொண்டே இருந்தான் அவன்.. எதிலும் நாட்டம் இல்லாமல் எங்கோ எதையோ வெறித்தவாறே அமர்ந்திருந்தான்..
பசி இல்லை, தூக்கமில்லை, உணர்விருந்தும் உணர முடியவில்லை...

எதற்கு இந்த உயிர் எனக்கு என்று தோன்றினாலும், தற்கொலை முடிவை அவன் நினைத்து கூட பார்க்க மாட்டேன்.. காரணம் ? கதையே அது தான்....

யாருக்காக வாழ வேண்டும்... வாழ வேண்டும் அவளுக்காக... வாழ்வதை தவிர வேறு வழி அவனுக்கு அவள் கொடுக்கவில்லை...

அவளும் அவனுடன் இருக்கிறாள்.. ஆனால் அவன் முன்னே அவள்...