...

13 views

பகுத்தறிவும் வேண்டும்
ஒரு காலத்துல நிறைய புத்தகங்களை படிச்சு பெரிய கல்வி நிறுவனத்தில் படிச்ச ஒரு பெரிய அறிஞர் ஒரு படகுல ஒரு ஊருக்கு போய்ட்டு வந்தாரு. திரும்பி வரப்ப ஒரு படகு காரனிடம் பேசிக்கொண்டே வந்தார். அந்த நேரம் பார்த்து அந்த படகுக்காரன் படிக்காத ஒரு மனுஷனா இருந்தா. அந்த சமயத்துல அந்த அறிஞர் ரிக் வேதத்தில் இருந்து ஒரு கேள்வியை கேட்கிறார். அந்த படகு காரனுக்கு படிப்பறிவு இல்லை ஸ்கூல் பக்கம் போனதில்லை. உடனே எனக்கு தெரியாது அறிஞரே. அப்படின்னு சொல்லிட்டு சொல்றாரு. உடனே நீ வாழ்க்கையில் பாதி காலத்தை வீணாக செலவு அழிச்சிட்ட இப்படி சொல்றாரு.

கொஞ்ச நேரம் கழித்து, அதே அறிஞர் படகு ஓட்டறவன பாத்து உனக்கு மிகப்பெரிய நதி எதுன்னு தெரியுமா? இந்த உலகத்துல?. அப்படின்னு ஒரு கேள்வியை கேட்டார். உடனே அந்த படகோட்டி எனக்கு தெரியாது அறிஞரே... எனக்கு இந்த ஆத்தங்கரை மட்டும் தான் தெரியும் .அப்படின்னு சிரிச்சுக்கிட்டே சொன்னாரு. உடனே அந்த அறிஞர் நீ வாழ்நாளில் கால் வாசி
வீணாவே செலவிட்டு இருக்கேன்னு சொன்னாரு.

கொஞ்ச நேரம் சென்று அந்த ஆத்துல கொஞ்சம் கொந்தளிப்பும் அலைகளும் அதிகமா வந்துச்சு. உடனே அந்த படகோட்டி அறிஞரே உங்களுக்கு நீச்சல் தெரியுமா? அப்படின்னு கேட்டார். அதற்கு அந்த அறிஞர் எனக்கு நீச்சல் தெரியாதே .அப்படின்னு சொல்றாரு. இதைக் கேட்டு அந்த படகுக்காரன் நீங்க வாழ்நாள் முழுவதும் வீணாக்கிட்டீங்க அறிஞரே.... அப்படின்னு சொல்றான்.

இந்த கதையோட முக்கிய கருத்து என்னவென்றால் புத்தகப் புழுவா மட்டும் இருக்கக்கூடாது. பகுத்தறிவு, பொது அறிவு, நடைமுறைக்கு ஏத்த மாதிரி செயல்படக்கூடிய சாதுரியமும் நம்ம வாழ்க்கையில நம்ம கத்து வச்சுக்கணும்.