வெள்ளை புறா ஒன்று...
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண் புறாவே...
fm சூரியனில் "மணி சர்மா மற்றும் ராஹூல் நம்பியார் "பாடிக் கொண்டு இருந்தார்கள் .
தன் ஸ்டேஷ்னரி ஷாப்பை திறந்து வைத்து கொண்டு பள்ளிக்கு செல்லும் மாணவிகளுக்கு தேவையான பென் பென்சில் , பேப்பர் நோட்டு புத்தகம் என்று கொடுத்துக் கொண்டு இருந்தான்
சத்யா..
தினமும் வரும் அவள் இன்னும் வரவில்லையே என்று எதிர்பார்த்து கொண்டிருந்தான் .
ரியா பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தினமும் சத்யாவின் கடையை தாண்டித் தான் செல்ல வேண்டும் பள்ளிக்கு அவள்.
ரியாவின் கபடமற்ற பார்வையும் பேச்சும் சத்யாவை மிகவும் கவர்ந்தது .
அழகான பெண் அவளை தன்னவளாக மாற்றி கொள்ள நினைத்தான் .
என்று அவள் வரும் சமயமாக சில பல பாடல்கள் மூலம் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினான் சத்யா.
ஆனால் ரியாவிற்கு அவனின் எந்த முயற்சியும் புரியவில்லை . அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று இருப்பவள் .
அன்றும் அவள் வரவுக்காக பார்த்தபடி இருந்தான் சத்யா .
சற்று நேரதாமதத்தில் ஓட்டமும் நடையுமாக வந்தாள் என் .எஸ் .எஸ் வெண்நிற யூனிஃபார்ம் உடையில் வெள்ளை புறாவாக வந்தாள் ரியா .
சத்யா கடைக்கு வந்ததும் அண்ணா இன்று இந்த பகுதியில் எங்கள் குழுவில் தூய்மை செய்வதற்கு வருவோம் எங்கள் குழுவுக்கு A+ மதிப்பீடு கொடுத்து விடுங்கள் அண்ணா என்று சோல்லி விட்டு ஒரு நாற்பது பக்க நோட் வாங்கினாள் .
உன் பெயர் ரியா தானே என்றான் சத்யா ஆமா.. என்று தலையாட்டினாள் அவள் . ஒரு கண்டிஷன் பெயரில் நான் A+ தருகிறேன் என்றான் .
என்ன என்பது போல் பார்த்தாள் அவனை . நீ அண்ணா என்று மட்டும் அழைக்காதே என்னை என்றான் .
அவளும் சரி சத்யா என்று சொல்லி சென்று விட்டாள் .
ரியா தன் பெயரை உச்சரித்ததே குதுகலமானான் சத்யா , அவளுக்கு எப்படி என் பெயர் தெரிந்தது 🤔🤔
சரி பாத்துக்கலாம்... மைன்ட் வாய்ஸ்
இன்று எப்படியாவது தன் எண்ணத்தை சொல்ல நினைத்தான் அவளிடம்.
பள்ளி மாணவிகள் ஒரு ஏழு பேர் கொண்ட குழுவில் ரியாவும் வந்தாள்.
அந்த வீதியின் குப்பை குளங்களை அகற்றி தூய்மை செய்து இரண்டு மூன்று மர கன்றுகளை சாலை ஓரத்தில் நட்டு விட்டு வந்தனர் மாணவிகள்.
அங்கிருந்த இரண்டு வீட்டு உறுப்பினரிடம் கையெழுத்து மதிப்பீடு வாங்கிய பின் சத்யாவிடம் வந்தார்கள் ரியாவும் அவள் தோழி நிர்மலாவும் .
சத்யா நோட்டில் கையெழுத்து இடுவதற்கு முன் ரியாவிடம் நான் கொஞ்சம் தனியா பேசணும் என்றான் .
தாராளமாக பேசுங்க நீங்க கையெழுத்து போட்டு தந்துவிட்டால் நாங்க போய்டுவோம் .
பிறகு தனியா எவ்வளவு நேரமானாலும் பேசுங்க என்றாள் ரியா . உடன் வந்திருந்த தோழி நிர்மலா சத்தம் வராமல் சிரித்தாள் .
சத்யா அசடு வழிந்தவாரே இல்லை உன் கூட பேசவேண்டும் என்றான் .
ம்ம்.... சொல்லுங்க எங்களுக்கு நேரம் ஆகிறது என்றாள் ரியா .
அது வந்து வந்து ... என்று தயங்கினான்
சரி நீங்கள் நிதானமாக யோசித்து பிறகு சொல்லுங்கள் நாங்கள் வருகிறோம் என்று கிளம்ப நினைத்தனர் தோழிகள் இருவரும் .
ரியா.. ஐ லவ் யூ என்று சொல்லிவிட்டான் பதட்டம் முகத்தில் தெரிந்தது அவனிடம் .
இதை கேட்ட ரியாவுக்கு
கோபம் வந்தாலும் நிதானமாக சத்யாவை பார்த்தாள் .
உங்களுக்கு வேற ஆளே கிடைக்கவில்லையா சத்யா ஒரு பள்ளிக்கு செல்லும் சின்ன பெண்ணிடம் இப்படி சொல்வதற்கு என்றாள்.
எனக்கென்று சில கனவுகள் இருக்கிறது அதுமட்டும் இல்லாமல் என் பெற்றோர் எனக்காக எத்தனை யோசித்து செய்கிறார்கள் தெரியுமா ? ரொம்ப சாதாரனமா சொல்லிட்டீங்க .
இதெல்லாம் இனி பேசாதீர்கள் என்றும்
உங்களுக்கு என்ன வயதாகிறது இன்னும் எத்தனையோ சாதிக்க முடியும் உங்களால் . இந்த கடை குடும்பம் என்று வாழ்க்கையை முடித்துக் கொள்ள போகிறீர்களா . ஏன் தான் இப்படி இருக்கிங்களோ !...
இளய சமூதாயத்தின் வளர்ச்சி தான் நாட்டின் வளம் அவர்கள் முன்னேற்றம் தான் நாளைய சமூதாயத்தை நல்ல வழியில் கொண்டு செல்லும் இது நம்ம கலாம் ஐயா சொன்னது.
நீங்களும் இதை புரிந்து கொண்டால் மகிழ்ச்சி கொள்வேன் என்று தன் தீர்மானமான முடிவையும் சொல்லி சென்றுவிட்டாள் ரியா .
ஆ..... இந்த பெண்ணிற்கா ஒன்றும் தெரியாது என்று நினைத்தோம் . எவ்வளவு அமைதியாக எத்தனை பெரிய விளக்கத்தை சொல்லி சென்றுவிட்டாள் .
இனி தானும் விட்ட கல்லூரி படிப்பை முடித்து நல்ல நிலமைக்கு வரவேண்டும் என்று நினைத்தான் சத்யா .
ரியாவின் பேச்சு இறைவன் அளித்த தூதாகவே நினைத்தான் .
மனதில் எழும் சலனங்களை இப்படி சில புறாக்களின் வழி செய்தி கிடைக்கும் என்று நினைத்து அன்றிலிருந்து தன் வருங்காலத்தை செம்மைப்படுத்த முனைந்தான் சத்யா ...
வெள்ளை புறா மீண்டும் கை சேரும் என்ற நம்பிக்கையில் . 🕊️💞🕊️
© All piyu