...

14 views

அவள் எடுத்த முடிவு
அத்தியாயம் -06
பதை பதைப்பு
ஓடிச் சென்று அவனை வாரி எடுத்து மடியில் வைத்துக்கொண்டாள். அடிபட்ட அதிர்ச்சியிலிருந்தான் குமார். அவனை எழுப்ப முயன்றவள் அருகிலிருப்போரை ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ண சொல்ல யாரும் போன் செய்யவில்லை... மாறாக வேடிக்கைதான் பார்த்தார்கள். சற்று தள்ளி நின்று வீடியோ எடுத்துக்கொண்டிருந்தவனும் அவளது கண்களில் பட்டான். வந்ததே கோபம் செல்விக்கு.
"ஹெல்ப் க்குக் கூப்பிட்டா யாரும் வராம வேடிக்கை பாக்குறதுமில்லாம வீடியோ வேற எடுக்குறீங்களா... முதல்ல வீடியோ எடுக்குறத நிப்பாட்டுறீங்களா... இல்ல.. போன பிடிங்கி உடைக்கட்டுமா... மனிதபிமானமில்லாத நீங்க மனுஷங்க தானா...?" என்று பட படவென்று பொரிந்து தள்ளிவிட்டு,
"கலா ஆம்புலன்ஸ்க்கு call பண்ணு"என்றதும்
"ஏற்கனவே call பண்ணிட்டேன்... வந்துரும் "என்று கலா சொல்லி முடிப்பதற்கும் ஆம்புலன்ஸ் வருவதற்கும் சரியாக இருந்தது. குமாருடன் செல்வியும் ஏறிக்கொள்ள ஸைரனை அலற விட்டபடி ஆஸ்பத்திரி நோக்கிப் பறந்தது அந்த ஆம்புலன்ஸ்.
"டாக்டர்! அவருக்கு எப்படி இருக்கு இப்போ" என்று செல்வி கைகளைப் பிசைந்தவாறே கேட்க, "பெரிசா ஒண்ணுமில்ல மேம், சின்னதா கால்ல ஒரு பிராக்ச்சர். அவ்ளோ தான். அதுவும் ஹேர்லைன் பிராக்ச்சர் தான். சோ... டோன்ட் ஒர்ரி. ஒரு ரெண்டு வாரத்துல எல்லாம் சரியாயிடும். இப்போ POP கட்டு போட்டுருக்கேன். ரெண்டு வாரம் நடக்காம பாத்துக்கோங்க. அது போதும். ஹேர்லைன் பிராக்ச்சர் தாங்கிறதால இன்னைக்கு ஈவினிங்கே அவர வீட்டுக்குக் கூட்டுப் போலாம். ரெண்டு வாரம் கழிச்சு வாங்க. கட்டு பிரிச்சிடலாம். மத்தபடி பயப்பட ஒண்ணுமில்ல"என்று கூறிவிட்டு குமார் பக்கம் திரும்பிய டாக்டர்,
"சார்... ஒண்ணுமில்ல... ரெண்டு வாரம் ரெஸ்ட் எடுங்க. அவ்ளோதான். சரியா போயிரும்"என்று ஆறுதல் வார்த்தை கூறிவிட்டு பக்கத்து அறைக்குச் சென்றார்.

-தொடரும்

@tamilthoorika
#tamilththoorikaa
#தமிழ்த்தூரிகா2023
#அவள்எடுத்தமுடிவு
#பதைப்பதைப்பு
#06jan152

© தமிழ்த்தூரிகா