...

1 views

16-18) வஞ்சம் தீர்க்க வருகிறாள். (Last episode)

( 16 ) வஞ்சம் தீர்க்க வருகிறாள் .

நிலா நிகழ்வை மாற்றுவதற்கு முன் :

[ நிலாவே சொல்லிருப்பா . ஆனா , அறையும் கொறையுமா சொல்லிட்டா ]

கண்மணியும் ஆதியும் காதலித்ததை கண்மணியின் தாய் கண்டுபிடித்து விடுவார் . கண்மணி எவ்வளவோ கெஞ்சியும் அவர் , அவர்களின் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை . அதனால் , எங்கே தன் தாயும் தந்தையும் ஒப்புக்கொள்ள மாட்டார்களோ என்ற அச்சத்தில் இருவரும் வேறு ஒரு ஊருக்கு சென்று விடுவார்கள் . அப்படியே மூன்று வருங்கள் கடந்தது . அந்த மூன்று வருடத்தில் ,
அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து இருந்தது . அந்த குழந்தைக்கு " வெற்றி செல்வன் " என்று பெயரிட்டனர் இருவரும் . அப்போது தான் இங்கு ஈஷ்வரிக்கு மாப்பிள்ளை பார்த்து இருந்தனர் . அந்தை மாப்பிள்ளை யாரென்றால் , கண்மணியும் , ஆதியும் வசிக்கும் ஊர்த்தலைவரின் மகன் . அவனுக்கு ஈஷ்வரியை கொடுக்கலாம் என்று அவர்கள் முடிவெடுத்து இருந்தனர் .
அப்படி அவர்களை பார்க்க அந்த ஊருக்கு வரும் போது தான் கண்மணியையும் ஆதியையும் அவர்கள் பார்த்து விடுவார்கள் .  அவர்கள் இருவரையும் , அந்த ஊரின் தலைவரின் முன்னிலையில் கொன்றும் விடுவார்கள் . [ அவர்களின் மகனை காப்பாற்றி விட்டு , இருவரும் இறந்து விடுவார்கள் . ]


இப்டி குட்டியா இருந்தத , பெருசாக்கிட்டா , இந்த நிலா . அப்டி என்ன பன்னா , பாக்கலாம்.....


நிலா மாற்றியதற்கு பின் .

நல்லிரவு ஒரு மணி :


ஆதி கண்மணியின்  வீட்டிற்கு பின்னால் காத்துக் கொண்டிருக்கிறான் . அப்போது தான் கண்மணி ஓடி வந்தாள் . " என்ன டி , இவ்ளோ லேட் ஆ வர . " ஆதி .

" சாரிங்க . அம்மா இப்போ தான் தூங்குனாங்க . " கண்மணி .


" சரி வா போலாம் . " ஆதி . இருவரும் வேறு ஒரு ஊருக்கு செல்கிறார்கள் . அதுவும் அவனின் பைக்கிலேயே . கண்மணி அவனின் தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் . இருவரும் பக்கத்து ஊருக்கு தான் சென்றிருக்கின்றனர் .

அந்த ஊரின் தலைவர் பெயர் " மகேந்திரன் "  அவருக்கு இரண்டு மகன்கள் . மூத்தவன் " விஷ்வாமித்ரன் " இளையவன் " விஜய ராகவன் " . மூத்தவனுக்கு திருமணம் முடிந்து விட்டது . அவனின் மணைவ " சங்கமித்திரை " மூத்தவனும் , இளையவனும் நேர் எதிர் துருவங்கள் . மூத்தவன் அமைதியானவன் . இளையவனோ , எதற்கெடுத்தாலும் அதிரடி தான் . அது போக , நல்லவனா என்று கேட்டால் , அதுவும் இல்லை . கேடு கெட்ட பொறுக்கி .  பெண்களின் மீது , அவனின்  தவறான பார்வை போகும் .  இது வரை , எவ்வளவோ பெண்களின் வாழ்க்கையை கெடுத்துருக்கிறான் . பார்ப்போம் . இவர்களின் வாழ்க்கையில் , இவன் எப்படி விளையாடுகிறான் என்று .

ஆதியும்  , கண்மணியும் , ஆதியின் நண்பன் பார்த்த வீட்டில் குடியேறினார்கள் . அது ஒரு குடிசை தான் . இருந்தாலும் இருவரின் மனமும் நிறைந்து இருந்தது .

" என்ன டி , பொண்டாட்டி . கல்யாணம் பண்ணிக்கலாமா . " ஆதி .


" ஓஓஓஓஓ . பண்ணிக்கலாமே . " கண்மணி .

அங்கிருந்த ஒரு கோவிலில் இருவரின் திருமணமும் எளிமையாக நடந்தேறியது .


அவர்களின் வீட்டில் :

" ஓய் பேபி . " ஆதி .

" என்னங்க . " கண்மணி .

" செல்லமே , நீ என்னிக்கு ரொம்பபபபப அழகா இருக்க டி . " ஆதி .

" நீங்களும் . "  கண்மணி .

" ஓஓஓஓஓ . " என்று ஓஓ  போட்டவன் , அவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தான் .

" என்ன ஓஓஓஓ . " கண்மணி .

" பேபிஇஇஇஇ . " ஆதி .

" என்ன பேபி . " கண்மணி .

" பார்ரா..... " ஆதி .

" என்னங்க... " கண்மணி .

" மேடம் பேபினு சொல்றிங்க . " ஆதி .


" நா எப்போ சொன்னேன் . " கண்மணி .

" மக்கு கண்மணி . நீ தான இப்போ , " என்ன பேபி " னு கேட்ட . " ஆதி .

" அது . என்ன பேபி னா , என்ன ஓஓஓ னு கேட்டேன்ல . அந்த மாதிரி தான் கேட்டேன் . " கண்மணி .


" போ பேசாத , என் கிட்ட . " ஆதி .


" என்னங்க . "ஆதி .

" ஒரு தடவையாவது , நீ என்ன பேபினு கூப்ட்ருக்கியா . " ஆதி .

" அப்டிலாம் கூப்ட கூடாது . வேணும்னா மாமானு கூப்டவா . " கண்மணி .


" மாமா னா . கூப்டு . செம்ம கிக்கா இருக்கும்   . " ஆதி .

" ம்ம்ம்ம் . "கண்மணி .

" அப்பறம் , நா உன்ன என்னனு கூப்புட்ரது . " ஆதி .

" கண்மணினு கூப்டுங்க . " கண்மணி .

" போடி . " ஆதி .

" அப்போ..... கண்ணம்மா னு கூப்டுங்க . " கண்மணி .

இதை கேட்டதும் இவளை அவன் ஒரு புருவத்தை உயர்த்தி பார்த்தான் . " என்னங்க . " கண்மணி .

" ஒன்னுல்ல " என்ற ஆதி , அவளை அனைத்துக் கொண்டே படுத்து விட்டான் .


அப்படியே மூன்று வருடங்கள் சென்றன .

இப்போது அவர்களுக்கு ஒரு மகன் . அவனுக்கு " வெற்றி செல்வன் " என்று பெயரிட்டனர் .

" டேய் வெற்றி . அப்பாவ மாதிரியே , குறும்பு டா உனக்கு . " என்று தன் செல்ல மகனை திட்டினாள் கண்மணி .

" என்ன டி . என்னோட பையன திட்டுரியா . " ஆதி .

" போங்கங்க . இவன் ரொம்ப சேட்ட பண்றான் . " கண்மணி .

" கண்மணி , கொழந்தைங்கனா அப்டி தான் இருப்பாங்க . " என்ற ஆதி அவனின் மகனை தூக்கிக் கொண்டான் .


" ஓய்ய்ய் . " ஆதி .

" என்னங்க . " கண்மணி .

" நான் போய் வீட்டுக்கு தேவையானது எல்லாம் வாங்கிட்டு வந்தர்ரேன் . " என்ற ஆதி , மளிகை வாங்க...