...

8 views

தங்கமீன் என் செல்லமே...
தங்கமீனாக
இருப்பதால்
உன்னை
தொட்டியில்
வைத்தனறோ
அழகென்றால்
சிறைவாசம்
என்றுணர்த்த...




மைதிலி வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து வீட்டு பாடம் செய்து கொண்டு இருந்தாள் . அங்கு இருந்த மீன் தொட்டியில் சுற்றி சுற்றி வந்து கொண்டு இருந்த வண்ண மீன்களை அவள் பார்த்ததும்
இந்த வரிகள் தோன்றியது உடனே தன் நோட்டு புத்தகத்தில் எழுதினாள் அதை .


ஆம் மைதிலி ஏழாம் வகுப்பு படிக்கும் சிறு பெண் . உயர் மட்ட வசதி நிறைந்த குடும்பத்து குழந்தைகள் படிக்கும் பள்ளியில் தான் மைதிலியும் கல்வி கற்றாள் . ஆனால் அவளுக்கு இருக்கும் மனக்குறை


தாய் தந்தை இருவரும் வேலைக்கு செல்பவர்கள் . பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால் வீட்டில் வேலை பார்க்கும் வசந்தி பாட்டி தரும் காம்ப்ளான் மற்றும் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு வீட்டு பாடம் செய்வது தினம் அவளது வழக்கமான வேலை .


பள்ளி சீருடை மாற்றவும் சில நேரம் மறந்து விடுவாள் மைதி . அந்த மீன் தொட்டி தான் அவளது விளையாட்டு தோழிகள் .
பத்து நிமிடத்திற்கு ஒரு முறை அதனுடன் பேசுவாள் .


வீட்டின் வெளியே சென்று விளையாட அனுமதி இல்லை அவளுக்கு . பாடங்கள் முடிந்ததும் சிறிது நேரம் தோட்டத்தில் சைக்கிள்...