...

3 views

என் ஆருயிரே
அலங்காரம் முதன்மை பெற்று அதில் உள்ளவர்கள் சிறு சிறுபூச்சிகள் போலவே தெரிய அவளின் முதன் முதலில் சாரீ யை கட்டிக்கொண்டு இல்லை இல்லை சுத்திக்கொண்டு இதோ இதோ என அவிழ்ந்திடும் நிலையில் பூஜா கையில் பொக்கே வோடு உள்ளே சென்றாள்
அங்கு அனைவரின் வேற்றுகிரக பார்வையில் இவளோ பே னு முழித்த படி யாரு ணு தெரிலை நம்மை பார்த்துட்டு கைய அசைக்கிறாங்க இருந்தாலும் கை ஆட்டிக்கொண்டே பூஜாவும் போக வேகமாக எட்டு வைத்து நடக்க எதிரே வருபவர் யாரென தெரியாது மோதி கிழே விழுந்தாள் அப்போது அவளை நோக்கி நீண்ட மாநிறத்திற்கு கூடுதல் கலரில் உள்ளங்கையின் அழுத்தம் கூறியது மெல்ல எழுந்தவள் எல்லோரும் பார்த்துவிட்டார்கள் என்று அவனை நிமிர்ந்து பார்க்காமலே நன்றி சார் என்று ஓட அவளின் அரிதான செய்கை கண்டவனின் மனமோ டாலி இன்னும் அப்படித்தான் இருக்க என்று பின்னோடு சென்றான் அங்கு அவள் பொக்கே கொடுப்பதற்காக வரிசையில் நின்றவள் எதர்ச்சையாக திரும்பிடும் தருணம் அகன்ற, பயந்த கண்கள் அவளை நோக்கி நடந்தவனின் சாதாரண நடையை எடுத்துக்கொண்டன. அவள் நெற்றியில் குளிர்ந்த வியர்வை மணிகள் வழிந்தன. அது அவனாக இருக்க முடியாது, இல்லையா?
அது அவன்தான்! மெல்லிய உதடுகளில் அந்தச் சிரிப்பு வேறொருவருடையதாக இருக்க முடியாத அளவுக்குக் கொடுமையானது.
ஆனால் அது எப்படி இருக்க முடியும்? அவள் அவனை பல வருடங்களுக்கு முன்பே கொன்று விட்டாள்...! என குற்றஉணர்வில் தவிக்க வேகமாக பரிசை தந்துவிட்டு வாசல் நோக்கி நடந்தாளோ ஓடினாளோ தெரியாது வேகமாக ஆட்டோ என்று கை காட்ட அருகில் வந்த வாகனத்தை நீங்க போங்க நான் பார்த்துகொள்கிறேன் என்று பூஜாவை ஊடுருவும் கண்களின் பார்வையை தாங்காது தலை குனிந்தாள் டாலி ப்ளீஸ் கொஞ்சம் பேசணும் மறுபடியும் ஏதோ சொல்ல வாயெடுக்க போன பூஜாவின் எண்ணைத்தை அறிந்கொண்டவன் போலவே எனக்கு ஏற்கனவே நிச்சயம் ஆகிட்டு next week married அப்படி னு தானே சொல்லவரா வாய்க்குளே நாக்கு முட்டி கூற அவளோ சாசர் போன்ற விழியை இன்னும் பெரிதாக்க அதன் ஆழம் உள் இழுப்பது போல் இருக்க தலையை உதறிவிட்டு போதும்டா இந்த கண்ணை மறக்க வேண்டும் தானே எனக்கு நானே மெஷின் மாறி வேலை பார்த்தும் பிரயோஜனம் இல்லை எனக்கு நாளை திருமணம் அதான் உனக்கு இன்விடேஷன் கொடுக்கலாம் னு வந்தா ஓடுறா பூஜாவோ ஷாக் ஆகி அப்படியே நின்றவள் தள்ளாடிய தேகத்தை பிடித்து நிறுத்தியவனின் வாசம் அருகாமையில் எனும்போது இவன் எனக்கு சொந்தஇல்லை இவனின் மூச்சு காற்றும் தொட்டுவிடாது தூரம் செல்லவோ என்று மனதின் கவிதை என்ற பெயரில் உளறி வைத்தது பிறகு வேறு ஒருவருக்கு உரியவனின் கையில் இருப்பது கசந்தது உதறிவிட எண்ணிய மனதுக்கு உடலோ கொஞ்சம் கூட நகரவில்லை அவனிடம் ஒட்டிக்கொண்டு நின்றது வெட்கம் பிடுங்கி தின்ன அழுத்தம் கொண்டு அவனை தள்ளிட அவனோ மிருதுவான அவனின் கைகள் இரும்பு பிடியில் நகராது தோள் பட்டையில் தூக்கி போட்டுகொண்டு போனான் வேதாளம் போல் நானும் அவனோ விக்ரமாதித்தன் ஆகினான் அப்போது மூடிய இமைகள் பிறகு யாரோ கன்னம் தட்டுவது போல் உள்ளது யாரென மெல்ல கண்களை திறக்க அவனோ என்னைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான் முழிச்சிட்டியா ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா என்று பேசிக்கொண்டு அவளை எழுந்து அமர வைத்து விட்டு சூடான பானம் கொடுக்க குடித்த பிறகே முழு தெம்பு வர விக்ரம் நான் போகவேண்டும் இதற்குமேல் நீ.. நீ எனக்கு இவ்வாறு செய்வதை பார்த்தால் அவங்க திட்ட போறாங்க என்று கூற யாரு திட்டுவாங்க அதான் உன்னை உன் better half சொல்லி முடிக்கவே வார்த்தைகள் தேடி...ஒவ்வொன்றாய் கூறி முடித்தாள்
அவனோ ஓஹோ சரி அவங்க யார் னு சொல்லவா ஆஹ் வேண்டாம் என்று தலை சிலுப்பியவள் அப்போ நேம் என்ன னு கேட்கமாட்டாயா என்று அவளை பார்க்க அவளின் மனமோ இன்னும் நொந்து போக தலையை இடவலமாக ஆட்ட நிமிர்ந்தால் கண்ணீர் வெளிப்பட்டுவிடும் என்று வெறுபக்கம் பார்க்க அவங்க பேரு டாலி என்றதும் வெடுக்கென்று நிமிர இரு கைகளை நீட்டி வா என்று தலையசைப்பில் ஒரு நிமிஷம் கூட தாமதமின்றி அவனிடம் தஞ்சம் புகுந்தாள் அவனோ அவளை தன்னுள் இறுக்கி அணைத்த படியே தியாகம் பன்றியா ஏன்...டி டாலி இப்படி இருக்க நல்லவங்க யாரு கெட்டவங்க யாரு னு தெரியாமல் அவளுக்கு விட்டு தரேன் இவளுக்கு உதவி செய்யுறேன் என்று என்னையும் என் மனசையும் உடைக்காதடி டாலி என்ற வார்த்தைகள் ஆழம் ஆதங்கமும் பிசிர் தட்டியது குரலில் அவளோ சட்டையை நனைத்தப் படி அவனின் வலிகளை கண்ணீர் கொண்டு கழுவுகிறாள்
இருவரின் வாழ்வும் இணை பிரியாது நீளட்டும் நீண்ட வருடங்களின் விடுபட்ட அன்புகளை சேமிக்கட்டும்
விடைபெறுவோம் 😍
வணக்கம் 🌼🙏
அநபாயன் 🤍
© Ash(ஈசன் )