...

10 views

சிவகுமார்
இவர் மதுரையில் உள்ள புகழ்பெற்ற டவுன் ஹால் ரோடு காலேஜ் ஹவுஸில் கே.பி.கோன் என்ற பாரம்பரிய மிக்க பெயரில் இயங்கி வரும் கடையை நடத்தி வருபவர். தினமும் நூற்றுக்கணக்கான மக்களை சந்திக்க கூடிய இடத்தில் கடை. இவர் கடையில் இல்லாத வார மாத இதழ்களே இல்லை. தீபம் மங்கையர் மலர் அமுதசுரபி துக்ளக் என வாங்க ஒரு கூட்டம். நக்கீரன் ஜுவி ரிப்போர்ட்டர் என ஒரு கூட்டம். பேங்கிங், டிஎன்பிஎஸ்சி, இப்படி குமுதம் விகடன் இப்படி பலவித மனிதர்களை சந்திப்பவர். டூர் ஆப்பரேட்டர். இந்தியாவில் உள்ள பெரிய டூர் நிறுவனங்கள் அனைத்தும் தென்னிந்திய டூருக்கு இவரை பயன்படுத்துவர். பாரீன் சிகரெட்டு வாங்க பெரிய பெரிய அதிகாரிகள் அரசியல்வாதிகள் இவர் கடைக்கு வருவதுண்டு. இப்படி 20-20 மேட்ச் மாதிரி பரபரப்பா இருக்கிற நபரை கொரோனா வீட்டு சிறையில் வைத்து விட்டது.