...

5 views

தளைந்தேன் உன்னில் எம்மயிலே
மயில் 2

மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறுமார்,சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ,ஏறு தொழூஉப் புகுத்தனர், இயைபுடன் ஒருங்கு

- முல்லைக்கலி, கலித்தொகை

மைந்தர்களை மாறு கொண்டு தாக்கித் தம் வலிமையை நிலைநாட்டக்கூடிய காளைகள் சிவபெருமானின் கணிச்சிப் படை போல் கொம்பு சீவப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கும் தொழுவத்தில் சேர்ந்தாற் போலப் புகுந்தனர்.  

*********************************************


மாதவன், தன் நண்பன் செழியனை  அழைத்து கொண்டு இருசக்கர வாகனத்தில்  மதுரையிலிருந்து அலங்காநல்லூருக்கு விரைந்தான்.

"ஏன் டா மாதவா, கார் இல்லேன்னா என்ன? ரெட் டேக்சி , ஒலான்னு,  இப்ப தான் நெறய டேக்சி இருக்கே போன் பண்ணதும் நிமிசத்துக்கு வந்து  நிக்குமே , இப்படி பைக்கிலே போகணும் என்னடா தலையெழுத்து உனக்கு?  முடியல மச்சான் முதுகுத்தண்டு சில்லுச் சில்லா உடையிற மாதிரி இருக்கு... ஊருக்கு போயி சேரதுகுள்ள  என் உசுரு போய் சேர்ந்திடும் போல. என்னடா ஆசை  உனக்கு பைக்ல ட்ராவல் பண்ண? " முன்னே அமர்ந்து ஓட்டும் மாதவனின் முதுகை அழுத்திப் பிடித்து, கிட்ட தட்ட அவன் மேல்  சாய்ந்து கொண்டே வந்தான் செழியன்.


"மூதேவி, முதுகு செத்தவனே! உன்ன போயி என் கூட கோர்த்து விட்டான் பாரு அவனை சொல்லனும், இந்த வயசில  இப்படி புலம்பிட்டு வர? ஒரு பையனா இருந்துட்டு பைக் ரைடுக்கு இந்த அலுத்து அலுத்துகிற, இலைதழை வாசனையோடு சேர்ந்து மண்வாசனை கலந்து வர காத்த சுவாசிக்கும் போது ஒரு புது தெம்பு கிடைக்கும், எதிரா வீசுர காத்தோடு வண்டியை ஹை ஸ்பீட்லே போனா, அப்படியே பறக்கிற ஃபீல் தான் டா..."  என்று அக்காற்றை நுகர்ந்து, மெய் சிலிர்ப்பை கண்டு கூறிக் கொண்டிருந்தவனை  இடையிட்டு,

"அப்படியே பறந்து, எதிர வர்றவனோட வண்டியில் மோதி சாவ வேண்டியது தான்..." என்றதும் பிரேக் போட்டு நிறுத்தியவன்,

"உன் வாயிலே நல்ல வார்த்தையே வராதா பன்னி...?" என்று அவன் புறம் திரும்பி கேட்க, " நல்ல வார்த்தை தானே  நல்லாவே வரும்... ஆனால இப்படி பைக்கில் ஹை ஸ்பீட்லே போனா நல்ல வார்த்தை எங்க டா வரும் நாற பயலே! பயமா இருக்குடா மெதுவா போ.  இப்பதான் என் வாழ்க்கை, கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வரது, அதுக்குள்ள அல்பாயிசுன்னு சொர்க்கத்துக்கு பைக்க விட்றாத டா... மெதுவா ஓட்டுடா! என் பொண்டாட்டி கூட போக வேண்டிய என்னை இவன் கூட கோர்த்து விட்ட அந்த மகாராசனும்,சிங்கிளா தான் டா பைக்ல சுத்துவான்..." என்று சாபமிட,


"அடப்பாவி! அந்தாளே இன்னமும் கல்யாணமாகலேன்னு கோவில் கோவிலா சுத்துறாரு டா, நீ வேற சாபத்தை விட்டு! கடைசி வரைக்கும் கன்னிச்சாமியாக்கிடாத பாவம் அந்த மனுசன் ...!" தனது குழுவிலுள்ள மேல் அதிகாரிக்காக பரிந்து பேசினான் மாதவன்.

" இனிமே அவருக்கு கல்யாணம் ஆனா, என்ன ஆகலேன்னா என்ன டா? மனுசன் அறுபாதம் கல்யாணம் பண்ற ரேஞ்க்கு வந்துட்ருக்கார், இவருக்கு கல்யாணம் கேக்குதா?இதுல கல்யாணம் வேணும் கோவில் கோவிலா வேற சுத்தறாரா? இது அந்தக் கடவுளுக்கே அடுக்குமா?" என்று புலம்ப இருவரும் சிரித்துக் கொண்டே  அவ்வூரை அடைந்தனர்.

அலங்காநல்லூர், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தை சேர்ந்த சிற்றூர் என்றாலும், உலக புகழ்  பெற்ற  ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊர்களில் ஒன்று.  வண்ணமற்ற ஆடையில் வலவலத்து கொண்டே ஓடும் ஓடை ஒருபுறம், பச்சைபட்டு உடுத்திய நிலங்களும்  ஒரு புறமென அக்கிரமத்தின் செழிப்பை பறைசாற்றியது.

வளர்ந்த வீடுகளும் அச்சின்ன தெருக்களை அலங்கரித்து இருந்தன . கறவைமாடுகள் இல்லாத வீட்டைப்பார்க்கவே முடியவில்லை. ஊர் நடுவே உள்ள பெரிய மைதானத்தில் கோவில் நிறத்தில் பெயிண்ட் அடித்து இரண்டு பக்கமும் ராமமிட்டு கம்பீரமாக நின்றது வாடிவாசல் ...அதை காணும் ஒவ்வொரு தமிழரின் வீரம் மெய்க்குள் குதித்தெழ, மயிர்கால்கள் குத்திட்டு நிற்கும். வீரம் பொறந்த எம்மூர் மதுரையென்றும் மதுரைக்காரனென்றும் மார்த் தட்டி பெருமை பட்டுக்கச் செய்யும் எம்மூர் பெருமையும் ச(ஜ)ல்லிக்கட்டும்.

இருவரும், ஊர் தலைவரின் வீட்டை தேடி விழிக்க, அங்கே வந்து கொண்டிருந்த பெரியவரிடம் விசாரித்தனர்.

"ஐய்யா! இந்த ஊர் தலைவர் வீடு எங்கய்யா இருக்கு? "
அவரோ தன் கைகளை நீட்டி, "இப்படியே போயி, மேற்கால திரும்பி, அப்றம் கிழக்கு பக்கமா திரும்பி மறுப்படியும மேற்கால போனீங்கன்னா வடக்கு பக்கமா அவுக வீடு இருக்கும் தம்பி..." என்றவரை  இருவரும் கண்டு  "பே" வென முழித்தனர்.


" மேற்கு, கிழக்கு, எதுன்னு கண்டு பிடிக்க ஒருநாளாகிடுமே டா... இந்தகால ஜென்ரெஷன் கிட்ட கேளு மச்சி,  இந்த மேற்கு கிழக்கு நமக்கு செட்டாகாது..." என்று செழியன் புலம்ப,

"என்ன தம்பி, நின்னுட்டீங்க போலயா?" துண்டை உதறி விட்டு தோளில் போட்டு கொண்டு கேட்டார்.

"கொஞ்சம் புரியலங்கய்யா, தெளிவாக சொல்லுங்க" என்றதும் இரண்டு மூன்று மூரல் கொண்ட பொக்கை வாயை வைத்து சிரித்தவர், சரியாக புரியும் படியே வழியைச்சொன்னார். " இந்தக் காலத்து  பசங்களுக்கு மேற்கு எது? கிழக்கு எது கூட   தெரியல, கேட்டா படிச்ச மக்களாம், என்னத்த சொல்ல?" என புலம்பிக் கொண்டே சென்றார்.


"காறித் துப்பாத குறையா, சொல்லி அசிங்கப்படுத்திட்டு போயிட்டார்... நீ வண்டியை எடு!" என்று நொந்துக் கொண்டான் செழியன். இருவரும் ஊர் தலைவர் வீட்டிற்கு வந்தனர்.


வெளியே வாசலில் நின்று அவ்வூர்காரர்களிடம் பேசி வழியனுப்பிக் கொண்டிருந்தார் கார்மேகக்கோனார்..


"ஐய்யா வணக்கம் ...! " என்று இருவரும் அவரைக் கண்டு வணக்கம் வைத்தனர்.
அவரும் வணக்கம் வைத்துவிட்டு, " தம்பி, நீங்க...? " என இருவரையும் பார்த்து கேட்டார்.


"நான் மாதவன், இவன் செழியன்.  ரெண்டு பெரும் மதுரை அரசு கால்நடை மருத்துவமனையிலருந்து வர்றோம். இங்க ஜல்லிக்கட்டுக்கு போக வேண்டிய காளைகள பரிசோதனை செஞ்சு சான்றிதழ் கொடுக்கற வேலையா எங்க ரெண்டு பேரையும் அனுப்பிச்சிருக்காங்கய்யா" என்றான் மரியாதையாக, 


"ஓ... கால்நடை டாக்டரா? உள்ள வாங்க தம்பி"  என இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்தார். " ரங்கா..." என்று தனது கணீர் குரலில் தன் மகனை அழைக்க, வேக எட்டில் கீழ இறங்கி வந்தான்" அப்பா..."

"தம்பிங்களுக்கு உட்கார நாற்காலி போட்டு, அந்தக் காத்தாடியையும் போட்டு விட்டு உட்காரவை, அம்மாகிட்ட சொல்லி காஃபி தண்ணீ ஏதாவது கொடுக்க சொல்லு. நான் இந்தா வந்தறேன்... இருங்க தம்பி, வந்தறேன்..." என்றவர் உள்ளே தன் அறைக்குச் சென்றார்.


ரங்கனும் அவர்கள் இருவரும் அமர, நாற்காலி போட்டவன், மின் விசிறியை இணைத்து விட்டு, தன் அன்னையை தேடிச் சென்றான்.. இருவரும் அந்த வீட்டையே சுற்றிப் பார்த்தனர். அந்தக் காலத்து வீடு,  சிமெண்ட் தரையுடன்  தேக்காலான சாளரங்களும் கதவுகளையும் கொண்டிருந்தது.. நடுவில் முற்றம். முற்றத்தை சுற்றி தூண்கள், வீட்டினுள்ளே சிறு மரத்தினாலான படிகள் அமைத்து மேல சில அறைகள் இருந்தன.

இருவருக்கும் எதிரே இருந்த தொலைகாட்சி பெட்டியை சுற்றி குடும்பத்தார்களின்  புகைப்படங்களே இருந்தன... எதையும் கவனிக்காது, தங்களின் கைப்பேசியில் முழ்கினார்கள் இருவரும்... முதலில் இருவருக்கும் தண்ணீர் கொடுத்த மீனாட்சி, உள்ளே அவர்களுக்கு காஃபி போடச் சென்றார்.


அழகனை கூட்டி வந்த மயிலினி, கருப்பனிடம் காளையின் கயிறை கொடுத்து பின் பக்கமாக சென்று கட்டச் சொன்னவள், முன்பக்கமாகச் சென்று கைகால்களை கழுவி, உள்ளே நுழைய வாயிலில் ஆண்கள் அணியும் இரு சோடி செருப்பைக் கண்டு உள்ளே எட்டிப்பார்த்தாள். இருவரது முகம் தெரியவில்லை, அமர்ந்திருப்பது மட்டுமே தெரிந்தது. ' யாரு இவங்க?' என  யோசித்து நின்றவள், அப்போது  பின்பக்க வழயாக வந்த தங்கையைக் கண்டு அழைத்தாள் மயிலினி,

" ஏய் மணி, உள்ள யார்றீ வந்திருக்கா?செருப்பெல்லாம் கெடக்கு..." என்றவளிடம் வம்பு வழக்க எண்ணிய மணிமேகலையோ,

"அதுவா மயிலு, உன்னைய பொண்ணு பார்க்க வந்திருக்காக, அதுவும் மாப்பிள்ளையும் மாப்பிள்ளையோட ஃபிரண்டு மட்டும் தான் வந்திருக்காக, பெரியம்மா, என்னைய அனுப்பி உன்னைய கூட்டியார சொல்லுச்சி,  அலையணுமே- ண்டு நெனச்சேன் நல்லவேள நீயே வந்துட்ட, பெரியம்மா திட்றகுள்ள இந்த வழியா ஓடு உள்ள..."அவளை வேகப்படுத்த, அவளும் உண்மை என்று நம்பி, பின்பக்க வழியாகச் சென்றாள். அதைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் மணி.


சமையலடுக்கில் நுழைந்தவள்,
அங்கே மீனாட்சி அருகே சென்றாள் இருவருக்கும்  காஃபி கலந்து கொண்டிருந்தார் அவர்..." அம்மா... அம்மா..." என்று நுழைந்தவளை பேச விடாது, அவளது கையில் தட்டை  திணித்து "போய் இத வந்தவங்களுக்கு கொடு...!" என்றார். "அம்மா, நானா...?" 

"நீ தான் போய் கொடுறீ" என்றவர் அடுப்பில் வேலையைப் பார்க்க, அவளும் தயங்கிக் கொண்டே இருவரும் அமர்ந்திருக்கும்  நடுக்கூடத்தில் வந்தாள்.

இருவரும் போனில் லயித்திருந்தனர், ' "இதுல யார் மாப்பிள்ளை- ண்டு தெரியல, சரி நம்ம வேலைய பார்ப்போம்' தொண்டையை செறுமிக் கொண்டு, "மக்கூம் ... ம்க்கூம்... காபி எடுத்துக்கோங்க..." என்றாள் அடக்கமாக, இருவரும் அப்போது தான் நிமிர்ந்தனர்.


முதலில் அமர்ந்த செழியன் எடுத்துக் கொள்ள, அடுத்தமர்ந்திருந்த மாதவனோ, மயிலினியின் மான் விழியை நோக்கியவன் அசைவற்று அவளையே பார்த்திருந்தான்... அவனது பார்வை உச்சிலிருந்து பாதம்வரை  ஜிவ்வென்று ஓர் உணர்வு ஊடுருவ, தன்னை மெல்ல மீட்டெடுத்தவள், மீண்டும் அவனை பார்க்க, அவனோ பார்வையை மாற்றாது அவளை உள்ளுக்குள் புகுத்திக் கொண்டிருந்தான்.

' என்ன விழுங்கற மாதிரி பார்க்கறான், ஒருவேள இவந்தேன் என்னைய பார்க்க வந்த மாப்பிள்ளையோ, அதுக்குன்னு இப்படியா பார்க்கணும்...' எண்ணிக் கொண்டே நிற்க,
அவனை இடித்த செழியன், " எடுடா..." என்றதும் விழியை அகற்றி காஃபி டம்ளரை எடுத்துக் கொண்டான்.

"கூச்ச படாம நம்ம வீடா நெனச்சு குடிங்க தம்பி...! " உள்ளே உடைமாற்றி வந்தார் கார்மேகம். அவர் வந்ததும் அங்கிருந்து சென்று விட்டாள் மயிலினி.


"தம்பி,  நீங்க ரெண்டு பேரும் மட்டும் தானா ? இன்னும் ஆள் வருவாங்களா?"


"இன்னும் ஆள் வருவாங்கய்யா, எங்களை அனுப்பி பார்க்க சொன்னாங்க, அதாங்கய்யா நாங்க முன்னாடியே வந்தோம்..." காஃபியை ஒரு மிடறு குடித்தவாறு பதிலளித்தான் மாதவன்.

"சரிங்க தம்பி...!" இவர்கள் பேசிக்கொண்டு இருக்க, மாடியிலிருந்து கீழே இறங்கினார் பச்சையம்மாள்


தன் மகனோடு அமர்ந்திருக்கும் இருவரை பார்த்து  யாரென்று புருவம் சுருக்கியவர், பதில் தெரியாமல்  தன் மகனிடமே கேட்டார்." மேகா, உன் மவள பொண்ணு பார்க்க வந்திருக்காகளா?  யாரு இதுல மாப்பிள? உன் பொண்ணு, அவ  காளை அடக்கிறவன தானே கட்டணுமு- ண்டு சொன்னா மாப்பிள பார்க்க ஒத்துக்கிட்டாளா? " பச்சையம்மாள் இழுத்து இழுத்து கேட்க,  செழியன் மாதவனை பார்க்க, அவனோ உள்ளே சென்ற மயிலினியை தேடிக் கொண்டிருந்தான்...


"ஆத்தா! இவக  பொண்ணு பார்க்க வரல,  ஜல்லிக்கட்டுக்கு வர மாட்டை எல்லாம் சரியாக இருக்காண்டு பார்த்து சான்றிதழ் கொடுக்க வந்த டாக்டருங்க..." அவர் காதில்  விழுமாறு கத்திச் சொல்ல,


"ஒ... மாட்டு டாக்டரா?" என மீண்டுமிழுக்க, காஃபிக்குடித்து கொண்டிருந்த இருவருக்கும் ஒரு சேர, புரையேறியது.


"பாத்து தம்பிகளா அவசரமில்லாம குடிங்க...." என்றார். "சரிங்கய்யா...." என இருவரும் நெஞ்சை  நீவி விட்டுக் கொண்டு குடித்து முடித்தனர்.

'சண்டாளா சிறுக்கி! ஒரு நிமிசம் என்னைய பதற வச்சிட்டாளே, அடியே மணி உன்னை ஆட்டித் தீக்றேன் ...' என்று கறுவியவள், பின் பக்க வாசலிருந்து முன்னே அவளை தேடி வர, அவளோ  கடலையை வாயில் தூக்கி போட்டு அமர்த்தலாக அமர்ந்திருந்தாள்.

அவளது  முடியை கொத்தாக பற்றி,  முதுகில் நான்கு அடி போட்டு வெளுத்து கொண்டிருந்தாள்

"ஆஆஆ.... மயிலு சும்மா விளாட்டுக்குத்தேன் சொன்னேன், சாரி சாரி மயிலு... ஆஆ... வலிக்குது மயிலு..."  கத்திக் கொண்டிருந்தாள் மணிமேகலை..


"மயிலு, என்னடா அங்க சத்தம்?" உள்ளிருந்து கார்மேகம் குரல் கொடுக்க, "ஒன்னுல்ல பா,  நானும் அவளும் விளாடிட்டு இருக்கோம்..." என்று பதில் தந்தாள்  மணிமேகலையின் வாயை அடைத்தவாறு.


மாதவனின் மொத்த கவனமும் அங்கே திரும்பியது செழியனோ, "ஐயா , மொத்தம் இங்க எத்தனை மாடுங்கயா இருக்கும்?"


"தொராயிரமா சொல்ல முடியாது தம்பி... சுத்தி இருக்க ஊர்காரவங்களும்  மாட்டை கூட்டியாருவாங்க, எப்படி நூறு,  இருநூறு மாட்டுக்கு மேல் இருக்கும் தம்பி. அதுல நம்ம காளை ஒன்னு இருக்கு, பேரு அழகேந்திரன். இதுவரைக்கும் ஒத்த பயலுகள கிட்ட நெருங்க விட்டதில்ல. என் மவ மயிலு கையாள வளருது... எங்க வீட்டு செல்ல பிள்ள பாசக்கார பய..." என்று பெருமையாக பேசினார்...


செழியன் கேட்டு கொண்டிருந்தாலும் பக்கத்திலிருக்கும் தன் நண்பனின் கவனம் எங்கோ செல்வதை கவனித்தவனுக்கு, உள்ளார பீதி கிளம்பியது. ' இதற்கு மேலும் இங்க இருந்தோம், இவன் எண்ணத்தை தெரிஞ்சிட்டு, நம்ம எலும்பை எண்ணிடுவாங்க. முதல்ல இங்க இருந்து கிளம்பனும்...'  என எண்ணிக் கொண்டவன், "ஐயா! நாங்க எங்கய்யா தங்கனும்?" 


"பக்கத்தில வீடு இருக்கு தம்பி, அங்கயே தங்கிங்கோ, மூணுவேளயும் சாப்பாடு நம்ம வீட்டுல இருந்து வரும்... காலையில்  அரசு பையன் வந்து உங்களுக்கு ஒத்தாசையா இருப்பான்.. நம்ம பையந்தேன்.  உங்களுக்கு என்ன ஒதவினாலும்  தயங்காம கேளுங்க தம்பி... செய்ய நாங்க இருக்கோம் ரங்கா..." மீண்டும் தன் மகனை அழைக்க, கீழிறங்கி வந்தவனிடம்,

"தம்பிகள, நம்ம பக்கத்துல வீட்டுக்கு கூடிட்டு போ... கொஞ்சம் என்ன வேணும் கேட்டு ஒத்தாசையா இரு..." என்றவர் அவர்களிடம் திரும்பி, " என் புள்ள தான் தம்பி, இவன் கூட போங்க, தேவை இருந்தா சொல்லுங்க, இவன் செய்வான்..." என்றார். 


  "சரிங்கய்யா அப்போ நாங்க வர்றோம்..." என்று செழியன் அவர் முன் வணங்கி விட்டு, மாதவனை இழுத்துக் கொண்டு வெளியே வர, அங்கே மயிலினியோ குழந்தைகளுடன் பேசி விளையாடிக் கொண்டிருந்தாள்...' ஐயோ, உயிரோடு ஊர் போய் சேர முடியாது போலயே!' என்றெண்ணி பயந்தான் செழியன்.


அந்த இருவர் அங்கு இல்லாதது போல அமர்ந்திருந்தாள். இவன் தான் செருப்பை மாட்டும் சாக்கில் அவளை ஒரக்கண்ணால் பார்த்த படியே இருந்தான்.


அவனது முழங்கையை பற்றி, " அட, எங்க வந்து என்ன வேலைடா பார்க்கற? நீ பார்க்கற  மட்டும் ஊர்காரங்க  பார்த்தா, மாட்டுக்கு தீவினமா போட்டிருவாங்க... வாடா" என்றிழுத்து சென்றான்.


அவர்கள் சென்ற பின், மணிமேகலை மயிலினியை இடித்தவள், "அக்கா, ஆளு செமயா இருக்கார்ல... மாடு பார்க்க வந்ததுக்கு பதிலா ஒன்ன பார்க்க வந்தா, நல்லாருக்கும்ல. இந்நேரம் ஒனக்கு கண்ணாலம் முடிவாயிருக்கும்..." என்று அவள் பாட்டு பேசிக் கொண்டிருக்க,


"அடியே, எம்முட்டு அழகா இருந்தாலும், என் அழகன அடக்கணும். அப்ப தான்  எனக்கு கண்ணாலம்... அது யாரா இருந்தாலும் சரி" என்றவளை ஒரு மாதிரி பார்த்தவள், " அப்போ இந்த ஜென்மத்தில ஒனக்கு கல்யாணம் நடக்காது...  எனக்குலாம் இப்படி ஒரு வாய்ப்பு வந்தா, ஒரு மாசத்துல கண்ணாலம், மூணு மாசத்துல மசக்கை வாழ்ந்து புடுவேணாக்கும் நீதேன் காளை அடக்கணும், கைய பிடிக்கணும்- ண்டு திரியிற... போக்கா" என்று சலித்து கொண்டவளின் காதை திருகியவள், "மொளைக்கவே இல்ல, பேச்சை பாரு..." என்று கடிந்தாள்.


வீட்டைத் திறந்து விட்டவன்,  இருவரையும் உள்ளே அழைத்தான். இருவரும் வீட்டை பார்த்தவாறே உள்ளே வந்தனர்... ஓட்டுவீடு என்றாலும் சீதளத்கோடு இருந்தது. இரண்டு கட்டில் , ஒரு மேசை, தண்ணீர் குடம், பின்னே  குளியலறையென அவர்களுக்கு ஏற்றவாறு இருந்தது.


"என்ன வேணும்ன்னாலும் கூப்பிடுங்கணே நான் வாறேன்..." என்று அங்கிருந்து சென்றான் ரங்கா... அவன் சென்றதும் கதவை சாத்தியவன், கட்டிலில் அமர்ந்த மாதவனின் முன் அமர்ந்து, "மச்சி..." அவனை அழைக்க, அவனோ இதழில் முகிழ்நகையை சூட்டி அமர்ந்திருந்தான்.

"மச்சி மச்சி.... டேய்" அவனை உலுக்க, "ஆங்... ஆங்... என்ன மச்சி?" என்று முழித்தவனை கண்டு, நக்கலாக,"என்ன மச்சி கண்டதும் காதலா?" என்றதும்
வெட்கம் கொண்டவன், " மச்சி,  நான் எதிர்ப்பார்த்த மாதிரியே அவ இருக்காடா? தாவணி போட்டு, காதுல சின்ன ஜிமிக்கி, மஞ்சள் பூசி கிராமத்து வாசனையில பக்கா ஒரு குடும்ப
பொண்ணா இருக்கா டா, எனக்கு எப்படி பொண்ணு வேணுமோ அப்படியே இருக்கா மச்சி..." என்று எங்கோ பார்த்து கூற,


"சரித்தான், மச்சி நீ எதிர்பார்கற மாதிரி அவ இருக்கா சரி. ஆனால் அவ எதிர்பார்கற மாதிரி  நீ இல்லயே மச்சி ..." என்றவனை புரியாமல் பார்க்க,

"அவ, வளர்கற காளைய அடக்கறவன தான் கட்டிப்பாளாம்?, அந்தக் கிளவி சொன்னது காதுல விழுகல" என்றதும் அவனை அதிர்ச்சியோடு பார்த்தவன், "என்னடா சொல்ற நிஜமாவா?"


" நிஜமாடா, காளை அடக்கறவன் தான் அவ கணவனாம்... நாம காளைக்கு சிகிச்சை பார்க்கறவங்க, கண்டிப்பா இது ஒத்துப்போகாது. இந்த எண்ணத்தை மூட்ட கட்டிட்டு, வந்த வேலையை பார்த்துட்டு ஊர் பக்கம் போய் சேருவோம் மச்சி..." என்று எழுந்து கொள்ள, அவனோ அதே இடத்தில் எதையோ இழந்தது போல அமர்ந்திருந்தான்.


"ஏணே! நீயுந்தேன் அந்த மயிலு புள்ளைய கட்டணும் கட்டணும் கங்கணம் கட்டிட்டி அலையிற, அந்தப் புள்ள, உன்னை மதிக்கவே மாட்கிடுதே...! " என்று அவனுக்கு கீழ் அமர்ந்து ஊத்திக் கொடுத்தான், அவனது கூட்டாளி பச்சகிளி! மகேந்திரனோ அதை  குடித்தவாறு,


"இதுக்கெல்லாம் காரணம், அந்த அழகு தான் அவனை ஓச்சா, தன்னால வந்து அவ என்னைய கட்டிப்பாடா! இந்த முறை அந்த கறுத்தபிசாச, வாடிவாசல மிதிக்க விட்டாத்தானே, அந்தக் காளை அடக்கறவன கட்டிப்பா?  அந்த மாட்ட, அடிமாட்டுக்கு அனுப்பி வைக்கல,  நான் மகேந்திரன் இல்லடா..." என்று சபதம் கொண்டான்...


© All Rights Reserved