...

7 views

பிறந்த நாளும் பரிசுகளும்

இன்றைய இளைய தலைமுறையின்
உளவியல் மாற்றங்கள்....

பள்ளிப் பருவத்தில் ஓடி ஆடி
விளையாடி தோழிகளும் தோழர்களும்
தெருவிலும் மைதானம் போன்ற
இடங்களிலும் விளையாடி
வருவது வழக்கம். நண்பர்கள் வீட்டுக்கு சென்று விருந்து உண்டு வருவதும் வழக்கம்.

ஆனால் இன்றைய தலைமுறையினர்
வெளியே கடைகளுக்கு சென்று
சாப்பிடுவதும், நவநாகரீக உலகில்
உலா வரும் பீஸா போன்ற துரித
உணவுகள் உண்பதை வாடிக்கையாக
கொண்டு இருப்பது
பழக்கமாகி வருகிறது.


நமது தொன்று தொட்ட வழக்கங்கள்
முற்றிலும் மாறி நாகரீகம் என்ற
பெயரில் அன்றாட உணவு பழக்க வழக்கங்கள் ஆரோக்யமான
உணவுகள் அருகில் இருப்பதை
தவிர்த்து விட்டு துரித உணவுகள்
உண்பதற்கு தொலைதூரம் சென்று
உண்டு வருவது வழக்கமாகி
விட்டது.

நட்புகளுக்கு பிறந்த நாள் என்றால்
பள்ளி முடிந்து வந்த பின் அவர்கள்
வீட்டிற்கு பெற்றோர்களுடன் சென்று
வாழ்த்தி விட்டு சிறிய பரிசு பொருள்
வழங்கி வருவோம்.

ஆனால் இன்று பிறந்த நாள் கொண்டாட்டங்கள் பண்டிகை விழா
போல் பலமடங்கு செலவுகளுடன்
பரிசு பொருள் வழங்கி வகைவகையான
சாப்பாடு, வந்தவர்களுக்கு
பரிசு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

பள்ளிப் பருவத்தில் பன்னிரெண்டாம்
வகுப்பு படிக்கும் மாணவ செல்வங்களும்
படிப்பதற்கான நேரத்தை உதறி விட்டு
பிறந்த நாள் கொண்டாட்டங்களில்
பங்கேற்று தங்கள் கவனத்தை
அதில் செலுத்தி தங்கள் நேரம்
விரயமாகி கொண்டிருப்பதை
உணராமல் ஏதோ நட்புகளின்
பிறந்த நாள் பரிசு வாங்க பெற்றோர்களை அவர்கள் தகுதிக்கு
மீறி பொருளாதார நெருக்கடியில்
அவர்களை மன உளைச்சல் ஆக்கி
கொண்டிருக்கின்றனர்.

வீட்டில் பெற்றோர்களின் நிலையை
புரிந்து கொள்ள முற்படுவதில்லை
அவர்கள் மனம்..
அவர்களின் உளவியல் என்பது
தான் நினைத்ததை நிறைவேற்ற
வேண்டும் என்பதிலே தான் மனம்
பயணிக்கிறது..

ஒரு கட்டத்தில் பெற்றோர்கள்
கல்விக்கு செலவு அதிகம் ஆகிறது
பிறந்த நாள் கொண்டாட்டம் எதற்கு
என்று கேட்டால் வீட்டை விட்டு
வெளியே செல்கிறேன் என்று
நடு இரவில் வாசலை கடக்க முயற்சிப்பது சரியான முடிவா??

அதன் பின்விளைவுகள் என்ன
என்று யோசிக்காமல் இவர்களின்
நேரத்தை இப்படி வீணாக்கி
கொள்கின்றனர் இன்றைய
தலைமுறையினர்.

கொஞ்சம் சிந்தித்து பார்க்க
வேண்டிய விஷயம், எப்போது
எதாவது ஒரு கஷ்டம் உங்களுக்கு
நேர்ந்தால் உடனே உங்களுக்கு
உதவிக்கு வருவது உங்கள்
பெற்றோர்கள் தான் என்பதை
நினைவில் கொள்ள வேண்டும்.

உடன் இருக்கும் நட்புகள் யாரும்
உங்களுடன் தொடர்ந்து பயணிக்க
முடியாது. வாழ்க்கை என்னும்
பயணத்தில் எப்போதும் உடன்
வருவது அப்பா அம்மா தான்.
அவர்களுக்கு மன உளைச்சல்
தருவதால் உங்கள் எதிர்காலம்
என்னவாகும் என்பதை
ஒரு நிமிடம் யோசனை செய்து
முடிவு எடுங்கள்.

இன்றைய தலைமுறையினருக்கு
அறிவுரை சொன்னாலும் பிடிக்காது
அறிவுரை சொன்னால் சொன்னவர்களை
தவிர்த்து விடுவார்கள் என்பதை
அறிந்தும் சிலவற்றை எடுத்து
சொல்லாமல் இருக்க முடியவில்லை.
அவர்கள் நன்மைக்கு தான் எல்லாம்
என்று எடுத்து கொண்டால் நல்லது,

உளவியலில் மாற்றத்தை உள்ளத்தில்
தெளிய வைத்து பின் முடிவை
எடுத்தால் வளம் பெறலாம்.💐
© KaviSnehidan