...

25 views

காதல் கிறுக்கி
என்
மாமன்....

ஏ புள்ள
என்ன தா
ஆகிட்டு உனக்கு

இப்புடி
இளச்சு
போயிட்ட..!?!?

காணாதத
ஏதும்
கண்டியா

இல்ல
உசுருக்கு
ஏதும்
நோவுக்
கோளாறா
!?!?!?

என்னானு

நான் சொல்ல
எப்பூடி தான்
நான் தின்ன!?!

காத்திரு
கால வருமுனு
சொல்லிப்
போனாக

கண்ணெல்லாம்
நீ தா புள்ளனும்
பூக்க வச்சி

சிரிச்சி
ரசிச்சாக....

முகம் பார்த்து
பேசிப்பேசி
மூனு வருசம்
போயிட்டு....


அக்கம்
பக்கம்
யாரு
எது பேசினாலும்
அடைச்ச
கதவ நான்
திறக்கல.....

என்
பொழப்பு
எல்லாம்
தவிக்கும்
புலம்பலா
போச்சு போ...

கடிதாசி
போடலாமுனு
நான்
நினச்சா

அவுக
பேரு மட்டும்
தான்
எழுதி
தொலையுறேன்


என் குலசாமி
முகம்
பார்த்து
சேதி
சொல்லுறேன்...

நீ தான்
சாமி
எனக்கும்
என் உசுறுக்கும்
காவல்
என்று....

இந்தக்
காதல்
பசலை
எனைத்
தாக்க

கச்சை
கட்டிடும்
துண்டுத்
துணியும்
துவண்டு
போக

ஈரத் துணி
நான்
போட்டு
கிடக்குறேன்

பசிக்கு
அது போது முனு...

சரி விடு
புள்ள
நான் போறேன்
குடிசைக்கு

அரிக்கள்
விளக்கு
என்னை
எண்ணி
தவம் கிடக்கும்

என் மாமா
முகம் காண
துடி துடிக்கும்...

என் குடிசை
தேடி வரும்
மின் மினி பூச்சிக்கு
என் விரலோட
பிடி விளையாட்டு
ரேகை வேணும்....

நீர்த் தொட்டியில்
ஊசலாடும்
நிலவுக்கு
என் கருத்த கரு
விழியின் நீர் வேணும்

யாரேனும்
ஏதேனும்
உங் கிட்ட
கேட்டாகன்னா
சொல்லிப் புடு
நான் அவுகளோட
அந்த கிறுக்கின்னு....
#yqslaks
#நீயும்_நானும்
#ச_லக்ஷ்மி
© All Rights Reserved