...

2 views

" வாழ்க்கையின் ரகசியம்"
வணக்கம்!, ஒருவன் கிராமத்துப் பெண்ணை திருமணம் செய்துகொண்டு, பட்டணத்திற்கு வருகிறான். தன் மனைவிக்கு எழுதப் படிக்கத் தெரியாத கிராமத்து வாசனை உடையலர். அவரை அக்கம் பக்கத்தினர் கண்களில் படாமல், காலை, மாலை என்று எழுதப் படிக்க கற்றுக் கொடுத்து, நடை, உடை அனைத்தையும் கற்றுக் கொடுத்து பட்டணத்து மங்கையாக மாற்றினான். அப்படி அவருக்கு கற்றுக் கொடுக்கும் போது, அவருக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது, எப்போது சந்தோஷமாக இருப்பார், எதற்கு கோபப்படுவார் என்று அனைத்தையும் தெரிந்து கொண்டான். அப்படியே ஆறு மாதங்கள் ஓடின, ஒரு எட்டு மாதங்கள் ஆனதும், தன் மனைவியை காணவில்லை கொஞ்ச தூரத்தில் உள்ள ஒரு மெக்கானிக் கோடு சென்றுவிட்டார் என்று தெரியவந்தது. அக்கம்பக்கத்தினர் கேட்டதற்கு, அவருடைய அம்மா வீட்டுக்கு சென்று உள்ளார் என்றும், தன் மனைவியின் அப்பா, அம்மா பேசும்போது அவர் வேலையாக இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டிருந்தான். ஒரு நான்கு மாதம் கழித்து காலையில் அவன் வேலைக்கு கிளம்பி வெளியே வரும் போது, அவனுடைய மனைவி அழுதுகொண்டே வந்தார், அவரை உள்ளே அழைத்துச் சென்று ஒன்றுமே கேட்காமல் குளிக்கச் சொன்னான். அவர் குளித்து விட்டு வருவதற்குள், கணவன் கடைக்கு போய் பூ மற்றும், அவருக்கு பிடித்த வஞ்சிரம் மீன் வாங்கி வந்தான். மனைவி குளித்து விட்டு வந்தவுடன், இந்த இந்த பூவை தலையில் வைத்துக்கொண்டு, இந்த மீனை தலையை குழம்பு வை, உடலை பொறிக்காதே உனக்கு பிடிக்காது,வறுத்துவிடு, நான் வேலைக்கு லீவு சொல்லி விட்டு வருகிறேன், என்று சொல்லி வெளியே போய்விட்டு வந்தாள். மனைவி சமையல் எல்லாம் முடிந்தவுடன், இருவரும் சாப்பிட்டனர். இதோ பாருடாமா, நீ உங்க அம்மா வீட்டிற்கு போய் உள்ளதாக தான் நானும், இங்குள்ளவர்களும் இருக்கிறோம் சரியா என்றான். கணவனின் காலில் விழுந்து அழுதாள் மனைவி. எல்லாவற்றையும் மறந்து விடு சரியா அதுமட்டுமில்லாமல் உன்னை பற்றி என்னைவிட யாருக்கு நன்றாக தெரியும் என்றான்!.. வாழ்க்கையில் தவறு செய்யாதவர்கள் என்று யாரும் கிடையாது. தவறே செய்யவில்லை என்றால் ஒன்று ஜடமாய், இருக்க வேண்டும் இல்லையேல், பொய் சொல்ல வேண்டும் அதுதான். மனைவி தவறு செய்தால், கணவன் இடமும். கணவன் தவறு செய்தால் மனைவி இடமும். பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றோரிடமும் சொல்ல வேண்டும். அப்படி செய்த தவறை சொல்லும்போது அவர்களை, மன்னிக்கக் கூடாது, தவறையை மறந்துவிட வேண்டும். ஒரு முறை தவறு செய்து திருந்திய மனது, தான் சாகும் வரை தவறே செய்யாது. தவறு செய்வது குற்றமல்ல, செய்த தவறை மறைப்பது தான் குற்றம். அது மேலும் பல குற்றங்களை உருவாக்கும்!! இவண்! ரா.அம்முகோபாலகிருஷ்னன்!