...

1 views

கல்கத்தா காளி
பெங்கலூரிலுள்ள இந்திரா நகரின் ஒரு அழகான வீட்டுக்கு இந்துஜா மணப்பெண்ணாக காலடி எடுத்து வைக்கிறாள், அத்தான் சக்கரவர்த்தி சாப்ட்வேர் இன்ஜினியர், மாமியார் பூர்ணா சுந்தரி, மாமனார் அல்லி கோட்டி லிங்கம், இருவருமே பணம் பைத்தியம்.

திருமணம் நடந்து சில மாதங்கள் ஆயினும், மாமியா மாமனார் நைசாக இந்துஜா விடம் அம்மா பணம் வரணமே என்று கோட்டி லிங்கம் கேட்கிறார், அப்பா விடம் கேட்டு சொல்கிறேன் யென என்கிறாள் இந்துஜா. அப்பா தரவேண்டிய ஒரு பாகம் வரதட்சிணை எப்பொழுது கொடுப்பார் என்று தயக்கம், ஏற்கனவே இரு பங்கு கொடுத்து ஆயிற்று, வீட்டு மனைகள் வாங்கி உள்ளனர், என் மாமியார் களுக்கு ஏன் இவ்வளவு பணம் ஆசையோ, இருக்கும் சொத்துக்கள் போதுதா யென இந்துஜா நினைத்துக்கொண்டாள்.
இந்துஜா தனது தந்தையின் விவரத்தை தெரிந்து மௌனமாக இருக்க, ஏனெனில் அப்பா இருக்கும் வீடும் மனையும் விற்று தான் தர வேண்டிய ஒரு பாகம் வரதட்சிணை தரவேண்டும், ஆதலால் காலத்தை சாமர்த்தியமாக நகர்த்தி கொண்டு யிருந்தாள்.

இதனை தெரிந்து கொண்ட மாமனார் லிங்கம் இந்துஜா விடம் பேச்சுக்கள் முற்றியது, வரதட்சணை தர போவதில்லை யென்றும், எனது தாய் தந்தையின் இருக்கும் ஒரு சொத்து விற்க நான் விரும்பவில்லை இந்துஜா சொல்லி விட்டாள், லிங்கத்துக்கு கடும் கோபம் உடனே மகனை கூப்பிட்டு கேட்கிறார் லிங்கம்.

சக்கரவர்த்தி தன் தந்தை லிங்கம் யிடம், வரதட்சிணை கேட்பது நிறத்திவிடுங்கள் அப்பா யென, அப்பா விக்கு கட்டுகடங்காத கோபம் என்னடா பொன்னாட்டி வந்த வுடனே மாறிடே, சக்கரவர்த்தி மேலும் இந்துஜா தன் மேற்படிப்பு முடிந்தவுடன் பேராசிரியராக வேலைக்கு செல்வாள் அப்பொழுது வாங்கி கொள்ளுங்கள்.

லிங்கம் விடுதாக இல்லை, அடிக்கடி இந்துஜா விடம் தொந்தரவு நச்சரிப்பு ஏதோ ஒரு பாணியில் கீழு குறைவாக பேசுதல், இதற்கு கிடையில் நவராத்திரி பூசைகள் நெருங்கிக் கொண்டு யிருக்கிறது, மாமியார் மாமனார் தொந்தரவுகள் இந்துஜா பொறுத்துக்கொண்டு இருந்தாள்.

இந்துஜா நவராத்திரி பூசைகள் ஏற்பாட்டு க்கு தேவையான பொருட்கள் வாங்கி தாயர் நிலையில் வைத்து இருந்தாள். நவராத்திரி முதல் நாள் திரு சுவர்னா கவசலக்ருத துர்கா தேவி பூஜையுடன் நடைபெற அதில் இந்துஜா க்கு அம்மன் தேவி வந்து யிருப்பது போல் அனைவரும் அறிந்தனர்.

மூன்றாம் நாள் திரு காயத்ரி தேவி பூஜையில் இந்துஜா உட்கார்ந்து படியே தெய்வம் ஆடினார், மறுபடியும் 7ஆம் நாள் திரு மகாலட்சுமி தேவி பூஜையில் இந்துஜா சற்று நின்று படி தெய்வம் வந்து ஆடினார்,,மாமனார் கோட்டி லிங்கம் நெருங்கி வந்து " அம்மா மகாலட்சுமி" எனக்கு ஒரு வரம் கொடு தாயே, என்று வேண்டினார், என்னவென்று அம்மா எனக்கு பணம், மழை போல் கொட்டோ கொட்ட வேண்டும் யென வரம் கொடு தாயே, அதற்கு தெய்வம் இந்துஜா ஆமாம் பணமழை நிறைய கொட்டம், கொட்டி வீதி யெல்லாம் ஓடும், ஓடி ஆற்றில் கலந்து ஓடும், கலந்து கடலில் கலக்கும், ஓடி பேயி உனக்கு எவ்வளவு தேவையே அவ்வளவு எடுத்துக்கோ, அம்மா நல்ல வரம் அம்மா என்றார் லிங்கம்.

ஒன்பதாம் நாள் திரு மகிஷாசுரமர்த்தினி தேவி பூஜை வந்தது அன்று இந்துஜா தெய்வம் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது, லிங்கம் மிக நெருங்கி வந்தார், தெய்வம் இந்துஜா கையில் திரிசூலம் வைத்து ஆடினார், திரிசூலத்தை சுழற்றி சுழற்றினார், எதிரே யுள்ள மாமனார் லிங்கம் மீது சுழற்றினார், லிங்கம் உட்கார்ந்து படியே பின் நோக்கி சென்றார், அம்மா தாயே யாருயம்மா தாயே, நான் தான் கல்கத்தா காளி டா
அம்மா தாயே சொல்லு அம்மா என்று லிங்கம் சொல்ல,
நான் தான் கல்கத்தா காளி டா, உஜ்ஜைனி மகாகாளி டா, ஹைதராபாத் மகாங் காளி டா, சூளூர்பேட்டா செங் காளி டா, தமிழ்நாடு பத்தர காளி டா, கர்நாடக ருத்ர காளி டா,
அம்மா அம்மா என லிங்கம் சொல்ல மொத்த இந்தியா இருந்து வந்து இருக்கிய அம்மா வேண்டுமென்றால் அம்மா நீயே பாரத தேசத்தை ஆட்சி செய் அம்மா தேவையான பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா செய்ய சொல்லறேன், அம்மா என்ன வேண்டும் அம்மா தாயே என்றார் லிங்கம்.

தெய்வம் இந்துஜா உடனே ஆயுதம் வேண்டும் கொடுங்கள் சீக்கிரம் ஆயுதம் வேண்டும், லிங்கம் என்ன ஆயுதம் அம்மா, பெரிய பட்டா கத்தி வேண்டும், லிங்கம் பெரிய கத்தி எதுக்கு அம்மா தாயே, தலையை வெட்டி ரத்தம் குடிக்கனும் , யாரு தல அம்மா தாயே உன்னோடு தல தாடன், கொடுங்கள் ஆயதத்தை, அம்மா தாயே என் தலை என்ன தர்பூசணி காய வெட்டுவேன் சொல்லரயே தாயே அம்மா இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு அம்மா தாயே சாந்தி சாந்தி சாந்தி சாந்தி அம்மா தாயே சாந்தி, தெய்வம் இந்துஜா ஆடி கொண்டு இருந்தார். மெதுவாக லிங்கம் தப்பித்தோம் பிழைத்தோம் யென வெளியே வந்து விட்டார்.

லிங்கம் அம்மா போதுமாட சாமி சற்று நிம்மதி அடைந்து, சில நாட்கள் கழித்து மருமகள் இந்துஜா பக்கமே வருதே இல்லை, லிங்கம் எதைப்பற்றியதும் கேட்பதும் இல்லை,
இந்துஜா பெரும் நிம்மதி அடைந்தாள்.

- முற்றும்-






© G.V.KALASRIYANAND