...

9 views

தே.....
அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி அது!!
அன்றுதான் பள்ளியில் ஆசிரியையாக சேர்கிறாள் தேவிகா..
Zoology பாடத்தை முதன்மையாக கொண்டு MSc முடித்தவள்..

12-C வகுப்பு!!
தேவிகா உள்ளே நுழைந்தவுடன் மாணவர்களிடையே ஓர் சலசலப்பு..

"டேய் மச்சான் புது டீச்சர் மஜாவா இருக்கு டா"
"ஆமாடா செம பிகரு"
"இனிமே ஜாலிதான்"

காதில் கேட்டாலும் கண்டுகொள்ளாமல் பாடங்களை நடத்த ஆரம்பித்தாள் தேவிகா..

தினமும் இது தொடர்ந்தது..
சில மாணவர்கள் அவள் காதுகளில் விழ வேண்டும் என்பதற்காகவே சத்தமாக பேச ஆரம்பித்தனர்..

அன்று "Reproduction" பற்றிய பாடம் எடுக்க ஆரம்பித்தாள்..
இம்முறை மாணவர்களிடையே மேலும் அதிகமான சலசலப்பு..

"மச்சி, என்னடா கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம கிளாஸ் எடுக்குது இந்த டீச்சர்" இது கணேஷ்...

"ஒருவேள எக்ஸ்பீரியன்ஸ்(Exepriance) நிறைய இருக்கும் போல" நவீன் பதிலளிக்க மாணவர்கள் அனைவரும் சத்தமாக சிரித்தனர்...

தேவிகா பொறுமை இழந்தவளாய் "எதுக்கு சிரிச்சுட்டு இருக்கீங்க?" என்று கோபமாய் கேட்க...

"டீச்சர் நீங்க இந்த பாடம் சூப்பரா எடுக்குறீங்க, ஒருவேள எக்ஸ்பீரியன்ஸ் இருக்குமோனு நவீன் சொல்றான்" ஒருவன் போட்டுக்கொடுத்து விட...
அழுகையும் கோபமும் ஒன்று சேர பிரம்பினால் சரமாரியாக நவீனை அடித்துவிட்டு அழுது கொண்டே வெளியே ஓடிவிட்டாள்..

இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துவிட்டு மறுபடி பள்ளிக்கு திரும்பினாள்..

சில மாணவர்கள் அவளைப் பார்த்து சிரித்துவிட்டுப் போக சிலர் பரிதாபமாக பார்த்தனர்..

என்னவென்று புரியாமல் ஒரு மாணவனை அழைத்து விசாரிக்க அவன் பள்ளியின் இடப்பக்க வளாகத்திற்கு அழைத்து சென்றான்..
அங்கு சுவற்றில் தேவிகா முகம் புகைப்படமாகவும் கீழே அசிங்கமாய் வரையப்பட்டும் இருந்தது... பக்கத்தில் "தேவிகா ஒரு தே....யா" என்றும் எழுதப்பட்டு இருந்தது..

நவீன்தான் இதனை செய்திருப்பான் என்பதை உணர்கிறாள் தேவிகா..

கோபம் கொள்ளாமல் அவனைத் தேடிச் செல்கிறாள்...

வகுப்பறைக்குள் நுழைந்ததும் நவீனும் அவன் நண்பர்களும் சிரிக்க ஆரம்பித்தனர்...

தேவிகா கண்டுகொள்ளாமல் போர்டில் ஏதோ எழுத ஆரம்பித்தாள்..

"நவீனின் அம்மா ஒரு தே...."
இவ்வாறு அவள் போர்டில் எழுதி முடித்ததும் வகுப்பில் இருந்த மாணவர்கள் அனைவரும் சிரித்தனர்...
கண்களில் கோபம் கொப்பளிக்க தேவிகாவை அடிப்பதற்காக ஓடினான் நவீன்..

ஓங்கிய அவன் கைகளை தட்டிவிட்டாள் தேவிகா...
"அதெப்படி உன் அம்மாவ ஏதாவது சொன்னா மட்டும் கோபம் வருமோ?? உன்னோட அம்மா மாதிரி நானும் ஒரு பொண்ணுதான !! அது ஏன் உன் மூளைக்குள்ள உரைக்கல??
என்ன மட்டும் இல்ல, யார தே.. னு சொன்னாலும் சிரிக்க ஒரு கூட்டம் இருக்கும்..இப்போ உன்ன பார்த்து சிரிச்சாங்கல்ல அந்த மாதிரி"

நவீன் அமைதியாய் நிற்க தேவிகா தொடர்ந்தாள்..

"போர்டுல நான் 'நவீன் அம்மா ஒரு தே..' னு எழுதுனப்போ யாருக்குமே அது 'தேவதை'யா கூட இருக்கலாம்னு தோணலல.... அந்தளவுக்கு உங்க எல்லார் மனசுலயும் வன்மம் புகுந்திருக்கு.. இளமைங்கிறது சந்தோஷமா இருக்கத்தான..ஆனா அடுத்தவங்கள காயப்படுத்தி அசிங்கப்படுத்தி சந்தோஷப்படுறதுக்கு இல்ல.. கெட்ட வார்த்தை யார் வேணா பேசலாம்.. அத பேசாம கட்டுப்படுத்துறதுதான் இப்போ பெரிய விஷயம்... புரிஞ்சிப்பீங்கனு நம்புறேன்"

முடித்தவள் போர்டில் உள்ளதை "நவீனின் அம்மா ஒரு தேவதை" என்று மாற்றி விட்டு வெளியே சென்றாள்..

அடுத்த நாள்..
அந்த சுவர் சுத்தமாகியிருந்தது...
"அந்த மாணவர்களின் மனதும்" ❤️
© KReations