...

8 views

குணங்கள்.
ராணியும் ஜாளினியும் நல்ல தோழிகள். ஒரு நாள் ஜாளினியிடம் ஒரு மாணவி சண்டை போட்டு, ஒருசில கடினமான வார்த்தைகளை பேசினாள்! இதை பார்த்த ராணி உடனே அந்த மாணவிடம் பதிலுக்கு பதில் பேசினாள். ஜாளினி ராணியை தடுத்து சமாதானம் படுத்தினாள். ஆனால் ராணிக்கு ஜாளினியின் மீது கோபம். "அந்த மாணவி உன்னை அப்படி திட்டினாள் ஆனால் நீ என்னை சமாதானம் படுத்துகிறாய்." என்று சொன்னாள். உடனே ஜாளினி "ஹாஹாஹாஹாஹாஹா" என்று சிரித்தாள். சிரித்து விட்டு சொன்னாள் "என் அப்பா என்னிடம் அடிகடி ஒரு விஷயம் சொல்லுவார் அதை உன்னிடமும் சொல்லுகிறேன். சரியா?" உடனே ராணி சிரித்த முகத்துடன் "ம்ம்ம் சரி அதை நானும் கேட்கிறேன்" என்று சொன்னாள். "நம்மிடம் இரு விலங்கு போன்ற குணங்களுடன் எப்போழுதும் சண்டை நடந்து கொண்டிருக்கும். ஒன்று நல்ல பண்புகள், அன்பு, நீடிய பொறுமை, மனிதத்தன்மை, உண்மை, நேர்மை போன்ற குணங்கள். மற்றொன்று பொய், பொராமை, கோபம், சலிப்பு, வெறுப்பு, தற்பெருமை போன்ற குணங்கள்" என்று சொல்லுவார் என்றாள். "அப்படியா? இதில் எந்த விலங்கு ஜெயிக்கும்?" என்று கேட்டாள் ராணி. "ம்ம்ம் நானும் இப்படி தான் என் அப்பாவிடம் கேட்டேன்" அப்பா சொன்னார் 'நீ எதற்கு உற்ச்சாகமும், ஊக்கமும், உணவும் கொடுக்கிறாயோ அதுவே ஜெயிக்கும்" என்றார், அதனால்தான் நான் உன்னை சமாதானம் படுத்தினேன். நாம் எல்லோருக்கும் நல்லதையே நினைப்போம், செய்வோம். நிச்சயமாக நல்லதே நடக்கும். " என்றாள் ஜாளினி. உடனே ராணி தன் தோழியை கட்டி அனைத்து மன்னிப்பு கேட்டு நானும் இதை கடைப்பிடிக்கிறேன் என்றாள். இருவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

© Dana Hephzibah