...

14 views

பெண்
பெண் என்பவள் யார்? பெண்ணுக்கு பெண் எதிரியா? எல்லாப்பெண்களும் ஒரே குணம் கொண்டவர்களா? இப்படி எத்தனையோ கேள்விகளை எழுப்பிக்கொண்டு இப்படைப்பை என்னால் தொடரமுடியும். ஆனால் வேண்டாம் பெண்ணியம் பற்றி நான் பேசினாலும் கூனி, கைகேயி போன்றவர்களும் பெண்கள் தானே.

நவீனத்துவம் கடந்து இன்று நாம் பின் நவீனத்துவத்தை எட்டிவிட்டோம். என்னதான் செய்வது கொரேனா வைரசினை போல ஐரோப்பிய கலாசாரமும் நம்முடன் இணைந்துவிட்டது. நோய் தொற்றியவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை செய்வது போல இவர்களை தனிமைப்படுத்த இயலாது. சுதந்திரம், சமத்துவம், பெண்ணியம் என நானும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன் பெண்களுக்காக ஆனால் பெண்களே நம்மை ஆண்கள் அடக்கி ஆள்வதற்கு அன்றும் இன்றும் வழி வெட்டிக்கொடுத்தவர்கள் நாமே. "ஆள் பாதி ஆடை பாதி" இப்பழமொழி எங்கிருந்து வந்தது. வழக்கில் காணப்டுகிறது அதனால்தான்.

மாற்றம் என்பது எத்தனையோ விடயங்களில் உண்டு ஆனால் ஒருசில பெண்கள் வெறுமனே தேடுவது ஆடையில் மட்டுமே. ஆங்கிலேயர்கள் மூலம் நாம் பெற்ற நன்மைகள் அனேகமானவை அவற்றை விடுத்து நம்மை நாமே காட்சி பொருளாக்குவதற்கான வழியினை...