...

8 views

காதலில் வெல்வேனா...! (பகுதி 2)
பிறகு ஆண்டு விழா , அதில் நான் எதிலும் பங்கெடுக்கவில்லை.
அவள் பரதம் சிறப்பாய் ஆடுவாள். அப்பொழுது முதலில் இசை பின் பரதநாட்டியம். அன்று அவள் மோனோலிசா ஓவியம் போல் காட்சி அளித்தால். இது காதலா இல்லை அன்பா என்று சிறிதும் தெரியவில்லை.

கடைசியில்...

~ தொடக்கம்

கடைசியில் முலுஆண்டுத் தேர்வு வந்தது. அதுவும் முடிந்தது. ஆனால் , தேர்வின் கடைசினால் ஒரு சோகம். 10 நண்பர்கள் பள்ளி மாறினர். ஏனென்றால் , இந்தப் பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது. அதிலும் நாங்கள் தான் மூத்தவர்கள் (1st set). ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வேறொரு இடத்தில் பள்ளி கட்டப்பட்டு வருவதாய் கூறினர். அதைப்பற்றி பிறகு பார்ப்போம். அந்த 10 பேர் வெளிய போனாங்க. ஆனால் , அவர்கள் அனைவரையும் கலங்க வைத்துவிட்டனர். அனைவரும் ஒரு நாள் பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவிருந்தது. நான் செல்ல முடியாத சூழல். ஒரு மாதம் ஆனந்தமாய் எந்த வேலையும் இல்லாமல் சென்றது. திடீறென்று ஒரு தகவல் பள்ளியிலிருந்து. தேர்வு மதிப்பெண்களை நேரில் வந்து வாங்கிச் செல்லுங்கள் என்பதுதான் அந்த தகவல். எனக்கு வயிரு கலங்கியது.

"ஏன்டா ? சும்மாவே இருக்க மாட்டீங்களா. மனுசன் சந்தோசமா இருந்தா உங்களுக்கு பொருக்காதே...",போன்ற யோசனைகள் மனதில்.

அச்சம்பவத்தைத் தவிர்க்க வழிகள் இல்லை. பள்ளிக்கு நானும் என் அம்மாவும் சென்றோம். எனக்கும் என் வகுப்பு ஆசிரியைக்கும் எப்பொழுதும் மோதல் தான். நான் எடுத்த மதிப்பெண்ணையும் ஆசிரியை என்ன சொல்லப் போகிறார் என்பதை விட அதை எப்படிச் சொல்லப் போகிற்ர் என்ற பயமே அதிகமாய் இருந்தது. ஏனென்றால் , ஆசிரியர்கள் சொல்வதில்தான் மாணவர்களுக்கு நிம்மதி. அங்கு சென்றால் நிறைய பேர் வரிசயில் பள்ளி முதல்வரைப் பார்க்க நின்றுகொண்டிருந்தனர்.
எனக்கு பயம். "என்னதான் பன்னபோரானுங்களோ அப்டீனு",என் மனதில் ஒரு குமுறல். சரி என்ன ஆனாலும் பார்த்துகொள்ளலாம் என்று வகுப்புக்குள் சென்று ஆசிரியை முன் அமர்ந்தோம். அங்கு நான் எதிர்பார்த்து போல் எதுவும் நடக்கவில்லை. என்ன நடந்தது என்றால் , "வகுப்பு ஆசிரியர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும்", என்றார் ஆசிரியை தேவி.

1. தேவி ( class teacher ) - ஆங்கிலம்
"தம்பி ரொம்ப லேட்டா சாப்பிடுரான். ஹேன்ட்ரைட்டிங் கொஞ்சம்...