...

1 views

உன்னோடு நான் இருப்பேன்
அத்தியாயம்-12

விஜயா காலை உணவை சமைத்து கொண்டிருக்க... உணவின் வாசனையை பிடித்து கொண்டே உள்ளே நுழைந்தான் கௌதம்.

அம்மா சமையல் வாசம் தூக்குதே...என்று விஜயாவை அணைத்து கொள்ள அவன் திடீர் வரவேற்ப்பை எதிர் பார்க்காத விஜயா கண்களை விரித்தபடி "டேய் கௌதம் எப்படா வந்த என்றார் புன்னகையோடு

நேத்து நைட்டே வந்துட்டம்மா டிஸ்டர்ப் பண்ண வேணானுதான் ஹோட்டல்லயே தங்கிட்ட என்று சொல்ல

அவன் கண்ணத்தில் செல்லமாக ஒரு அடியை வைத்த விஜயா என்னடா டிஸ்டர்ப் அது இதுனுட்டு... இது உன் வீடு நீ எப்ப வேணாலும் வரலாம்.... ஆமா வீட்ல எல்லாரும் எப்படிடா இருக்காங்க?

எல்லாரும் நல்லா இருக்காங்கம்மா... சரி நம்ம கட்டை துரை எங்க? ஃபைனலா கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாரு...

அதை ஏன்டா கேக்குற அப்பன் மகனோட உலக போர்ல இப்பதான் சமாதான கொடிய ஏத்திருக்காங்க என்று விஜயா சலித்து கொண்டபடி கூற...

சத்தமாக சிரித்த கௌதம் ஏதோ ஒரு வழியா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டால்ல அதுவரைக்கும் சந்தோஷம்.... எல்லாம் மெதுவா சரி ஆகிறும்மா கவல படாதீங்க..

பெரும் மூச்சை இழுத்து விட்ட விஜயா"நானும் அந்த நம்பிக்கைலதான் இருக்க கௌதம் என்று சொல்ல... கௌதம் ஆதரவாக விஜயாவின் கரத்தை பற்றி தட்டி கொடுத்தான்...

ஐயோ நான் ஒருத்தி... வந்தவன நிக்க வெச்சுட்டு வளவளனு பேசிட்டு இருக்க... உக்காருடா நான் காஃபி எடுத்துட்டு வர

அதெல்லாம் வேணாம்மா... இப்பதான் குடிச்சுட்டு வந்த... வீணா கஷ்டபடாதீங்க... வேணும்னா டிஃபன் சீக்கிரமா முடிங்க நான் ஆதிய பாத்துட்டு ஒரு அட்டனன்ஸ போட்டுட்டு வர என்று சொல்ல...

சரிடா போ அவன் மேலதான் இருக்கான் என்று அனுப்பி வைத்தார்...

கௌதம் ஆதியின் உயிர் தோழன்... இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் இருவரும் ஒன்றாகவே தொழிலை தொடங்குவதாகதான் இருந்தது ஆனால் கௌதம்ன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தால் கடந்த ஐந்து வருடங்களாக கௌதம் தந்தையின் தொழிலை பார்த்தபடி பெங்களூரில் இருந்தான்... இப்போது தன் கனவு ப்ராஜெக்ட்டை தன் தோழனோடு ஆரம்பிக்கவே இங்கு வந்திருக்கிறான்...

ஆதியின் அறை கதவை தட்ட கதவு திறக்க பட்டது. கௌதமை கண்டதும் இன்ப அதிர்ச்சியில் கண்கள் விரித்த ஆதி"டேய் மச்சான் என்று கத்தியபடி கௌதமை கட்டி அணைத்து கொண்டான்...

கௌதமும் கட்டி கொண்டபடி எப்படிடா இருக்க? என்று கேட்க...

நல்லா இருக்கன்டா... என்று அவனை பார்த்தவன்"what a surprise மச்சான்... ஒரு கால் கூட பண்ணல ராஸ்கல் என்று அடி வயிற்றில் ஒரு குத்து குத்த...

ஆஆ என்று குணிந்தபடி தன் வயிற்றை பற்றி கொண்டவன்"டேய் வந்ததுமாம் வராததுமா ஆரம்பிக்காதடா நான் ரொம்ப பாவம் என்று முகத்தை குழந்தைபோல வைத்து கொண்டு சொல்ல...

அவன் தோழில் கை போட்டு கழுத்தை இருக்க பிடித்தவன்... ஆமா ஆமா ரொம்ப பாவம்... சரி லக்கேஜெல்லாம் எங்க? கொடு உள்ள வைக்கலாம்...

இல்ல மச்சீ... கல்யாண வீடு இன்னும் ரெண்டு நாள்ல கெஸ்ட் வர ஆரம்பிச்சுருவாங்க... அதுதான் நான் ஹோட்டல்லயே இருக்கலாம்னு ரூம் புக் பண்ணிட்டு வந்த

டேய் நீ என்ன லூசா? கெஸ்ட் வந்தாலும் வீட்ல இருக்குறவங்க இங்கதனடா இருக்க போறாங்க இது உன் வீடுடா இப்படி யாரோ மாதிரி ஹோட்டல்ல இருக்கன்ற... ஒழுங்கா இங்க வந்து இரு இல்ல வயித்துல விட்ட குத்து வாயில விட வேண்டியது வரும்... எந்த ஹோட்டல்ல இருக்க சொல்லு நான் கதிர அனுப்பி செக் அவுட் பண்ண சொல்ற...

நம்ம வெஸ்டன்தான் மச்சான் கௌதம் கூற... உடனே ஃபோனை எடுத்த ஆதி கதிரை அழைத்து கௌதம்ன் லக்கேஜை வீட்டிற்கு எடுத்து வருமாறு கூறியவன் கௌதமை அழைத்து கொண்டு கீழே சென்றான்.

விஷ்வா நாழிதலை படித்தபடி அமர்ந்திருக்க அப்பா என்று ஓடி வந்து அவர் காலில் விழுந்தான் கௌதம்.

ம்ம் போதும் போதும்... என்னடா உன் ஃப்ரெண்ட ரூம்க்கே போய் பாக்குற அப்பாவ பாக்கனுமானு இப்பதான் தோனுச்சா? என்று விஷ்வா நக்கலாக கேட்க

வந்ததும் உங்கள பத்திதான்ப்பா அம்மாகிட்ட கேட்ட... நீங்க தூங்கிட்டு இருக்கீங்கனு சொன்னாங்க அதுதான் டிஸ்டர்ப் பண்ண வேணாமேனு ஆதிய பாக்க போன என்று ஒரு உருட்டை உருட்ட...

அடப்பாவி இப்படி பொய் சொல்றானே என்று நினைத்த விஜயா கௌதமை செல்லமாக முறைத்து பார்க்க

போட்டு கொடுத்துறாதீங்கம்மா என்று கண்களாலே ஜாடை செய்தான் கௌதம்... லேசாக புன்னகைத்த விஜயா ஒன்றும் பேசாமல் உணவை பரிமாறி கொடுக்க ஆதியும் வந்து அமர்ந்தான்...

நீயும் உன் ஃப்ரெண்டும் சேந்து பிஸ்னஸ் பண்ண போறதா கேள்வி பட்ட... விஷ்வா கௌதமிடம் கேட்க...

ஆமாப்பா லேன்ட் வாங்கிருக்கோம்... வர்ர 21 ஆதியோட பிறந்தநாள் இருக்கு அதே நாள் ஒரு சின்ன பூஜையும் போட்டு ஆஃபிஸ் கட்ட ஆரம்பிக்கலாம்னு இருக்கோம்...

ம் சரி சரி... வர்ர 25ஆம் தேதி கல்யாணம் இருக்கு அம்மா கூடையே இருந்து கல்யாண வேலைய பாத்துக்கோ... அப்பறம் உன் ஃப்ரெண்ட ஆஃபிஸ் ஆஃபிஸ்னு அலையாம கல்யாண மாப்பிளை மாதிரி வீட்ல இருக்க சொல்லு... என்று கௌதமிடம் கூறுவது போல ஆதிக்கு சொல்லி கொண்டிருந்தார்

ஆனால் அவனோ இதற்கும் எனக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்பதுபோல அமர்ந்திருந்தான்... இருவரையும் மாறி மாறி பாரத்த கௌதம் விஜயாவை பார்த்து என்ன என்பது போல கண்களாலே கேட்க...

இருவருக்கும் இடையில் பேச்சு வாரத்தை இல்லை என்பது போல சைகை காட்டினார் விஜயா...

ஓ.. என்று தலை ஆட்டியவன்... ஒன்றும் சொல்லாமல் அமைதியாக உணவில் கவனம் செலுத்தினான்...

சிறிதுநேரம் அங்கே மௌனம் நிகழ"நீ எப்ப கல்யாணம் பண்ணிக்க போற கௌதம்? என்று கேட்டார் விஜயா

நல்ல பொண்ணு கிடைச்சதும் பண்ணிறலாம்மா என்று சிரித்து கொண்டே சொல்ல

இத்தனை வருஷமா பெங்களூர்ல கிடைக்கலயாடா?

கிடைக்காம இல்லம்மா... நம்ம பாக்குறது நம்மல பாக்க மாட்டிங்குது...
நம்மல பாக்குறத நாம பாக்க மாட்டிங்கிறோம்.. அப்பறம் எப்படி விளங்கும் கௌதம் அலுத்து கொண்டே சொல்ல...

என்னடா உளர்ர என்று அதட்டினார் விஜயா...

உளரல்லம்மா உண்மைய சொன்ன... எனக்காக ஒருத்தி வராமலா போயிருவா? அவள பாத்ததுமே கண்டு பிடிச்சுருவ... முதல்ல அவள தேடனும்,காதலிக்கனும் அப்பறம்தான் நீங்க சொல்ற கல்யாணமெல்லாம் அதுக்கு இன்னும் டைம் இருக்கும்மா...

ம்ம் அப்ப அறுவதாம் கல்யாணம்தான் என்று விஜயா சலித்து கொண்டே கூற...ஆதியும் விஷ்வாவும் வாய் விட்டே சிரித்தனர்... பாவமான முகத்தை வைத்து கொண்டு அம்மா நீங்களே இப்படி சொன்னா எப்படி என்று கௌதம் சினுங்க...

சரி சரி... உன் மனசுக்கும் அழகுக்கும் ஏத்த மாதிரி பொண்ணு சீக்கிரமாவே கிடைக்கட்டும் என்று விஜயா கூற...

தேங்க்யூம்மா என்று புன்னகைத்தவனின் தோழில் தட்டிய ஆதி... ஆசீர்வாதம் வாங்கினது போதும் ஆஃபிஸ்க்கு கிளம்பு... புது ஆஃபிஸோட டிசைன் அங்கதான் இருக்கு இப்ப கரெக்ஷன் பாத்தாதான் வேலை சரியா இருக்கும் என்று சொல்லி விட்டு எழுந்து சென்று விட கௌதமும் அவசரமாக டிஃபனை முடித்துவிட்டு ஆதியுடன் கிளம்பினான்

இருவரும் ஆஃபிஸில் நுழைய பணியாளர்கள் ஆதியை பார்த்து குட் மார்னிங் சார் என்றனர். அனைவருக்கும் சிறு புன்னகையோடு தலை அசைத்தபடி வந்தவனை வைத்த கண் வாங்காமல் சைட் அடித்து கொண்டிருந்தது ஒரு ஜீவன்...அது வேறு யாராக இருக்கும் ப்ரியாதான்.

அவனை பார்த்தபடியே இருந்தவளின் கண்ணில் கௌதமும் பட"அட இவர் கௌதம் ப்ரதர்தன??? இன்னும் ஆதியோட டச்லதான் இருக்காரா? கல்யாணத்துக்கு வந்துருப்பாறு போலவே என்று நினைத்தபடி அமர்ந்திருக்க... ஆதி அவளை தாண்டி செல்லும்போது அவசரமாக எழுந்தவள் குட் மார்னிங் சார் என்றாள்... அவன் காதில் வாங்காது திரும்பியும் பாராமல் சென்று விட்டான்...

ப்ரியாவை பார்த்த கௌதம்க்கு அவளை எங்கோ பார்த்தது போல இருக்க திரும்பி திரும்பி அவளையே பார்த்து கொண்டிருந்தான்...

என்ன இவர் இப்படி பாத்துட்டு போறாரு ஒருவேளை என்னை நியாபகம் வரலயோ? பாக்கலாம் எப்ப கண்டு பிடிக்கிறாருனு என்று நினைத்தவள் தன் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்...

உள்ளே ஆதி டிசைனைச் சார்ட்டை எடுத்து கௌதமிடம் காட்டி கொண்டிருக்க... கௌதம் பிரமித்துதான் போனான்... அவர்கள் கல்லூரியில் படிக்கும்போதே இந்த கட்டிடத்தை பற்றி பேசி இருந்தார்கள் அதையெல்லாம் மனதில் வைத்து கொண்டே ஆதி இதை வடிவமைத்து இருந்தான்...

கௌதம்க்கும் அது மிகவும் பிடித்து போக.. "சூப்பர் மச்சான் நம்ம ப்ளான் பண்ணுன மாதிரயே வந்துருக்கு ரொம்ப எக்ஸைட்டிங்கா இருக்குடா கௌதம் கூற

பில்டிங் வேலைய நீதான் பாத்துக்கனும் மச்சான் ஒரு மாசம் நான் எங்கயும் நகர முடியாது

டோன்ட் வரிடா நான் பாத்துக்குற என்றபடி இருவரும் பேசி கொண்டிருக்க...

சார் மே ஐ கமின் என்ற ப்ரியாவின் குரல் வந்தது... அவள் அழைப்பிலே யார் என்று உணர்ந்த ஆதி நிமிர்ந்தும் பாராமல் கைகளாலே சைகை செய்து அழைத்தான்...அன்று கோவிலில் ஏற்பட்ட வாக்கு வாதத்திற்கு பிறகு இருவரும் அவ்வளவாக பேசி கொள்வதில்லை இப்போதும் ஃபைலில் கையெழுத்து வாங்கவே ப்ரியாவும் வந்திருந்தாள்...

வந்து நின்றவளை யோசனையோடு கௌதம் பார்க்க...அவனை ஓர கண்ணால் பார்த்து கொண்டிருந்தான் ஆதி...கௌதம் ப்ரியாவை வைத்த கண் வாங்காமல் பார்ப்பது ஆதிக்கு ஏனோ பிடிக்கவில்லை... பொறாமையா? வேறு என்ன? தெரியவில்லை...

இங்கு கௌதமின் பாடு அதற்குமேல் இருந்தது... இவளை எங்கேயோ பார்த்திருக்கிறேன்... எங்கு என்றுதான் புரியவில்லை என்று மூளையை கசக்கி பிழிய ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை...சரி ஏதும் பேசி பார்க்கலாம் என்று நினைத்தவன்

அவளை பார்த்து ஹலோ என்க... அவளோ எங்கோ பார்த்தபடி நின்றிருந்தாள்... மீண்டும் "ஹலோ எக்ஸ் க்யூஸ் மி உங்களதான் என்று அழைக்க...

திரும்பி பார்த்தபடி எஸ் என்றாள்...

நீங்க சென்னைல இருந்து வரீங்களா? என்று கௌதம் கேட்க...

ஓ.. இன்னுமா என்னை நியாபகம் வரல... இரு உன்னை என்று நினைத்தவள்"இல்ல சார் நான் ஊட்டில இருந்து வர... அதுவும் ட்ரெயின்ல... ஹைவேல ட்ராஃபிக் இருக்குமில்ல அதுதான்... காலையில வந்துட்டு சாய்ந்திரம் கிளம்பிருவ என்று ப்ரியா நக்கலான பதில் ஒன்றை அளிக்க

கௌதம் கப்சுப் ஆகி விட்டான்...

ஆதி வந்த சிரிப்பை வாய்க்குள்ளே அடக்கியவன்... "இது உனக்கு தேவைதான் இவக்கிட்ட போய் பேச பாக்குறியே... வாங்கினியா பல்பு என்று மனதிலே அவனை ஓட்டியவன்... ஃபைலை ப்ரியாவிடம் கொடுத்து விட்டு போக சொல்லி சைகை செய்தான்...

தேங்க யூ சார் என்று புன்னகைத்தபடி அவளும் செல்ல அப்போதும் கௌதமின் பார்வை அவளிடம் இருந்து விலகவில்லை

ஆதி டேபுளை தட்ட அந்த சத்ததில் தன்நிலை அடைந்து ஆதியை பார்க்க...

என்னடா என்றான் ஆதி...

யாரு மச்சான் இந்த பொண்ணு எங்கயோ பாத்த மாதிரி இருக்கு என்று கேட்க...

டேய் ஒரு பொண்ண பாத்துற கூடாது ஆரம்பிச்சுறுவியே... எவ்வளவு நாள்தான்டா இதே டைலாக்க சொல்லிட்டு திரியுவிங்க...ஆதி கடுப்பாக கேட்க

ஏய் மச்சான் நீ நினைக்கற மாதிரியெல்லாம் இல்லடா... நிஜமாவே அவள எங்கயோ பாத்த மாதிரி இருந்தது அதுதான் கேட்ட...மத்தபடி ஷி ஸ் நாட் மை டைப் என்று கௌதம் கூற

நாட் யுர் டைப்னா? ஆதி புரியாமல் கேட்க...

ஒரு மார்கமாக சிரித்தவன்... அது என்று ஏதோ சொல்ல வர

அதை தவறாக புரிந்து கொண்ட ஆதி... பொண்ணுங்கள பத்தி தப்பா பேசாத கௌதம் வாய ஒடச்சிருவ என்று அதட்ட

ஏய் ஆதி... ரிலாக்ஸ்டா... தங்கச்சி மாதிரினு சொல்ல வந்த என்க...

நீ தங்கச்சி ஆக்கலனு இங்க யாரும் அழல...ஒழுங்கா உன் வேலைய மட்டும் பாரு அது போதும் என்று ஆதி ஃபைலில் கவனம் செலுத்த

இவன் எதுக்கு தேவையில்லாம ஓவரா ரியாக்ட் பண்றான்?நான் அப்படி என்ன தப்பா சொல்லிட்ட என நினைக்க

ஆதிக்கும் இந்த எண்ணம் வராமல் இல்லை... நான் எதுக்கு தேவையில்லாம இப்ப கோவபட்ட என்ற கேள்வி அவன் மனதிலும்தான் தோன்றியது
(அது காதல்தான் என்று காலமே பதில் அளிக்கும்...)

ஆதி வேலையில் மூழ்கி இருக்க கௌதமே பேச்சை தொடர்ந்தான்..."அப்பறம் மச்சான் ரொம்ப வருஷம் கழிச்சி உன் பர்த்டேல நீயும் நானும் ஒன்னா இருக்கோம் சோ எதாச்சு ப்ளான் இருக்கா?

அதெல்லாம் ஒன்னும் இல்ல...

ஏன்டா? கௌதம் அலுத்து கொண்டே கேட்க...

உனக்கு தெரியாம கேக்குறியா? இல்ல என் வாயால கேக்க நினைக்கிறியா?

ஆதி சொன்ன விதத்திலே தெரிந்தது அவன் இன்னும் மஹாவை மறக்கவில்லை என்று

ஐந்து வருடத்திற்கு முன் பிறந்தநாள் அன்று மஹா என்னிடம் காதலை சொல்லிவிட்டாள் என்று ஆதி சந்தோஷத்தில் துள்ளி குதித்த காட்சியே கௌதமின் கண்ணில் வந்து போனது... ஒரு நிமிடம் ஆதியை பார்க்க அது இவன்தானா என்று கூட தோன்றியது... அப்போது இருந்த புன்னகை புத்துணர்ச்சி இவையெல்லாம் எங்கோ தொலைந்திருந்தது...

அப்பாவின் பிடிவாதத்தில் திருமணத்திற்குதான் சம்மதம் சொல்லி விட்டான் ஆனால் இந்த உறவில் இவன் சந்தோஷமாக இருப்பானா? இவனை நம்பி வரும் அந்த பெண்ணுக்கு எத்தனை ஆசைகள் இருக்கும் அதையெல்லாம் இவன் நிறைவேற்றுவானா? என்ற கவலை கௌதமிற்கு தொற்றி கொண்டது...

"ஆதி... நீ இன்னுமா மஹாவ நினச்சிட்டு இருக்க? கௌதம் கேட்க

வென்று புன்னகை ஒன்றை சிந்தியவன்"மறந்ததாதன கௌதம் நினைக்கிறதுக்கு... அவதான் என்னை விட்டுட்டு போனாளே தவிற அவளோட ஞாபகங்கள் என் மனசுல புதைச்சுட்டு போயிட்டா... அவள மறக்குறது ரொம்ப கஷ்டம்... அதுதான் மறந்த மாதிரி நடிச்சுட்டு இருக்க என்று ஆதி வலி கொண்டு கூற...

அதற்குமேல் கௌதமால் எதுவும் பேசவே முடியவில்லை... ஆதி காதல் வலியில் துடித்ததை கண் முன்னே பார்த்தவன் ஆயிற்றே... இதற்குமேல் பேசி அவன் மனதை புண்படுத்த கௌதம் விரும்பவில்லை... அதனாலே அமைதியாக இருந்து விட்டான்...

💕💕💕💕💕

திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரமே இருக்க ப்ரியா அலுவலகத்தில் இருந்து விடுமுறை எடுத்து கொண்டாள். ஆனால் ஆதியோ இது எவனோ திருமணம் போலதான் வலம் வந்தான்... இவர்களுக்கு ஒன்றாக இருக்க நேரம் கொடுத்தாள் பேசி நெருங்குவார்கள் என்று நினைத்த விஜயா இன்று புடவை எடுக்க ஆதியையும் அழைத்து செல்ல நினைத்தார். ஆனால் அவனிடம் சொல்லதான் பயமாக இருந்தது... இருந்தும் பேசி பார்க்கலாம் என்று நினைத்தவர் காஃபியை எடுத்து கொண்டு அறைக்கு சென்றார்.

அவர் கப்போடு உள்ளே நுழைந்ததை ஒரு மார்கமாக பார்த்த ஆதி... என்னம்மா இன்னிக்கு காஃபி ரூம்க்கே வந்துறுக்கு என்று நக்கலாக கேட்க...

ஐயோ இவன் என்ன இப்பவே ஒருமாதிரி பேசுறான் என்று நினைத்தவர்... கௌதம் பெட் காஃபிதான் குடிப்பான் அவனுக்கு எடுத்துட்டு வரும்போது அப்படியே உனக்கு எடுத்துட்டு வந்த ஆதி என்று சொல்லி மழுப்பியவர் ஒரு கப்பை எடுத்து அவனிடம் நீட்டி விட்டு கௌதம் எங்க? என்றார்

பால்கனில ஃபோன் பேசிட்டு இருக்கான், என்று ஆதி சொல்ல... காஃபியை எடுத்து கொண்டு பால்கனிக்கு சென்று அவனிடம் கப்பை நீட்டினார்... ஃபோனை வைத்து விட்டு குட் மார்னிங்ம்மா என்றபடி கப்பை வாங்கியவன்... விஜயாவின் முகத்தில் ஏதோ மாற்றத்தை உணர "என்னம்மா என்னாச்சு? ஏன் ஒருமாதிரி இருக்கீங்க கௌதம் கேட்க

ஆதியை காட்டியபடி உன் ப்ரெண்ட கொஞ்சம் பாரேன்... இன்னும் ஒருவாரத்துல கல்யாணத்தை வெச்சுக்கிட்டு ஆஃபிஸ்க்கு கிளம்பிட்டு இருக்கான்....எல்லாரும் இன்னிக்கு ஷாப்பிங்க்கு போலாம்னு இருக்கோம் இவனும் வந்தா நல்லா இருக்கும் நான் சொன்னா கத்துவான் நீயே எதாச்சு பேசி பாரேன்... என்று விஜயா கண்களால் கெஞ்சியபடி கூற

ம்ம்... இன்றைய நாளை திட்டு வாங்கியபடி துவங்கு என்று சொல்லாமல் சொல்கிறீர்கள் அப்படிதானே என்று கௌதம் கேட்க

விஜயா சிரித்தபடி " அம்மாக்காக இது கூட செய்ய மாட்டியாப்பா என்று அவன் உறங்கி இருந்த சென்டிமென்டை எழுப்பி விட

அம்மா இந்த கௌதமோட சென்டி மென்ட டச் பண்ணிட்டிங்க... இனி என் உயிர் தோழனோட அடிதடியே நடந்தாலும் பரவால்ல உங்களுக்காக நான் இதை செய்யிற... அவன ஷாப்பிங்க்கு கூட்டிட்டு போறோம் இல்ல தூக்கிட்டு போறோம் என்று சபதம் எடுத்து கொண்டவன்... ஆதியை நோக்கி விரைய விஜயாவும் அவன் பின்னே சென்றார்

அலுவலகம் செல்ல அடியெடுத்து வைத்த ஆதியை கை நீட்டி தடுத்தான் கௌதம்.

அவனை புரியாமல் பார்த்த ஆதி... என்ன? என்க...

எங்க கிளம்பிட்ட?...

பாத்தா தெரியல ஆஃபிஸ்க்கு....

அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம் போய்க்கலாம்... இன்னிக்கு எல்லாரும் ஷாப்பிங்க்கு போறாங்க.... நீயும் வர என்று கௌதம் ஸ்ட்ரிட்டாக கூற

அவனை ஏகத்திற்கும் முறைத்து விட்டு விஜயாவை பார்த்தவன்... காஃபி ரூமுக்கு கொண்டு வரும்போதே நினச்ச ஏதோ இருக்குனு...உங்களால சொல்ல முடியாம இவன தூது அனுப்புறீங்களா? என்று ஆதி நக்கலாக கேட்க

கௌதமும் விஜயாவும் ஒருவர் ஒருவரை பார்த்தபடி நின்றிருந்தனர்... ஆதி அமைதியாக நகர பார்க்க...

பட்டென அவன் கரம் பற்றிய கௌதம் "ஷாப்பிங்தன ஆதி போயிட்டு வரலாமே... என்று சொல்லிக்கூட முடிக்கவில்லை பல்லை கடித்த ஆதி "என்ன விளையாடுறியா? அவன் அவனுக்கு தலைக்கு மேல வேலை இருக்கு... அதுதான் கல்யாணம் பண்ணிக்கிறனு ஒத்துக்கிட்டல்ல அப்பறம் எதுக்கு இங்க வா அங்க வானு உன் உயிர வாங்குறீங்க... ஒருத்தன நிம்மதியாதான் இருக்க விடுங்களே என்று ஆதி கத்த ஆரம்பிக்க...

அதில் கொஞ்சம் கோபமான விஜயா ஆதியை திட்ட ஆரம்பித்திருந்தார்..."என்னடா விட்டா ரொம்பதான் பேசிட்டு இருக்க?... கல்யாணம் உனக்குதன? என்னமோ எவனுக்கோ நடக்குறமாதிரி பண்ற... ரொம்ப ஓவரா ஆடதடா எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு... ஒரு ஷாப்பிங்க்கு கூப்டதுக்கு இவ்வளவு சீன் போடுற என்று விஜயாவும் கத்த...

இருவரின் இடையில் மாட்டிய கௌதம் யாருக்காக பேசுவது என்று விழித்து கொண்டிருந்தான்...

அம்மா ரிலாக்ஸ் ஏன் டென்ஷன் ஆவுறீங்க? அவனுக்கு எதாச்சு வேலை இருக்கும் என தன் நண்பனுக்கே சப்போர்ட்டை செய்து விட அவனை கோபத்துடன் பார்த்த விஜயா

என்னடா நீ அவனுக்கு சப்போர்ட்டா?... இவன் இல்லனா எங்களுக்கு போக தெரியாதோ? ஏதோ ஆசையா கூப்டா ரொம்பதான் பண்றான்... இவல்லா ஒரு ஆளு இவனுக்கு நீ ஃப்ரெண்ட்... இத வெளிய சொல்லிறாதடா யாரும் நம்ப மாட்டாங்க... இதுல வேற ஷாப்பிங்கு கூட்டிட்டு போறோம் இல்ல தூக்கிட்டு போறோம்னு வெட்டி டைலாக் வேற ஹும்... என்று முகத்தை சுழித்தவர் அறையில் இருந்து வெளியேறவிட...

ஆதி கௌதமை விழுங்குவது போல முறைத்தபடி நின்றிருந்தான்...

நான் சிவனேனு ஃபோன்லதன பேசிட்டு இருந்த தேவையில்லாம என்னை உசுப்பேத்தி விட்டுட்டு இப்படி இவன்கிட்ட மாட்டி விட்டுட்டு போயிட்டிங்களேம்மா என்று மனதிலே புலம்பியவன்...முகத்தில் ஏதும் காட்டாது கம்பீரமாகவே இருந்தான்.

ஆதி முறைத்த படியே இருக்க..."என்னடா... இப்ப எதுக்கு முறைச்சுட்டு நிக்கிற? அம்மா வாய் விட்டே திட்டிட்டுனாங்க... நீ என்ன மைன்ட் வாய்ஸ்ல திட்டிட்டு இருக்கியா? நாங்க ஷாப்பிங்க்கு போறோம் நீயும் வரியானு கேட்டோம்... அவ்வளவுதான்... உனக்கு இஷ்டம் இல்ல வரமாட்டனு சொல்லிட்ட... தட்ஸ் ஆல்... இங்க நின்னு என்னை முறைக்குற அளவுக்கு இது ஒன்னும் அவ்வளவு பெரிய விஷயம் கிடையாது... போ போய் ஆஃபிஸ் வேலைய ஒழுங்கா பாரு என்று சொல்லி விட்டு... விட்டால் போதும் என்று அவசரமாக பாத்ரூமுக்குள் சென்று விட்டான்...

கடிகாரத்தை பார்த்த ஆதி நேரம் ஆனதை உணர்ந்து அவனும் அலுவலகம் விரைந்தான்...

💕💕💕💕💕

அத்தியாயம் -13

விஜயாவும் கௌதமும் டிஃபனை உண்று கொண்டிருக்க..."கௌதம் நான் மாமா வீட்டுக்கு போய் அத்தையையும் அருந்ததியயும் அழைச்சுட்டு ஷாப்பிங் மாலுக்கு போற நீ மைலாப்பூர் போய் ப்ரியாவ கூட்டிட்டு வா என்று கூற

அம்மா நானா என்று தயங்கினான்

ஆமான்டா நீதான்... ஆதிய அனுப்பலாம்னுதான் பாத்த அவன்தான் ஆஃபிஸ்க்கு போயிட்டானே... நீயே போயிறு...

சரிம்மா நானே அழச்சுட்டு வர என்றவன் உணவை முடித்து விட்டு கிளம்பி இருந்தான்...

விஜயா கொடுத்த அட்ரஸில் வந்து காரை நிறித்தியவன் வெளியே இறங்கி பார்க்க... நீராவின் வீடும் ப்ரியாவின் வீடும் ஒரே நிறத்திலும் பார்க்கவும் ஒரே மாதியாகவும் இருந்தது..."ப்ளூ கலர் வீடுனு சொன்னாங்க ரெண்டுமே ப்ளூவாதான் இருக்கு என்று குழம்பி நின்றவன்... சரி போவோம் இது இல்லனா அது... அது இல்லனா இது என்றபடி வீட்டை நோக்கி சென்றவன் கதவை தட்ட கையெடுக்க போக அதற்கு முன்னே கதவு திறந்து ஒரு பெண்ணிடம் தலையை முட்டி கொண்டான்.... அது வேறு யாரும் இல்லை நீராதான்.

ப்ரீத்தி தலையில் எண்ணை வைத்து கொள்ள மாட்டேன் என்று ஓட... நீரா அவளை பிடிக்க பின்னாலே ஓடினாள்.

ப்ரீத்தி கதவை திறக்கவும்... நீரா அவளை பிண்ணே ஓடவும்... கௌதம் கதவில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

இருவரும் நெற்றியை பிடித்தவாறு நின்றிருக்க"சாரிங்க தெரியாம இடிச்சுட்ட என்றான் கௌதம்

ஐயோ நீங்க எதுக்கு சாரி சொல்றீங்க? உங்கமேல எந்த தப்பு கிடையாது நான்தான் பாத்து வந்துருக்கனும் என்றாள் நீரா...

இங்க ப்ரியாவோட வீடு??? கௌதம் இழுக்க

பக்கத்து வீடுதாங்க...

ஓ... சாரிங்க... முன்ன பின்ன வந்தது இல்ல... ப்ளூ கலர் வீடுனு சொன்னாங்க...ரெண்டுமே ஒரே மாதிரி இருந்தது அதுதான்....

பரவால்லங்க இதுக்கு எதுக்கு சாரியெல்லாம் சொல்லிட்டு என்றவள் வாசலில் இருக்கும் தன் மகளை "ப்ரீத்தி"என்று அழைத்தாள்.

கௌதம் அப்போதுதான் ப்ரித்தியை கவனித்தான்...

என்னம்மா? என்று அவளும் ஓடி வந்து நிற்க

அங்கள ப்ரியாவோட விட்டுக்கு கூட்டிட்டு போங்க என்று சொல்ல...

ஓகேம்மா என்று புன்னகைத்தவள் கௌதமின் கரத்தை பற்றியபடி வாங்க அங்கிள் நானும் அங்கதான் போற என்று இழுத்து கொண்டு அழைத்து சென்றாள்.

வீடு திறந்து இருந்தது... பாட்டி என்று அழைப்பு கொடுக்க...இதோ வந்துட்ட என்ற ஜானகியின் பதில் வந்தது...

அறையில் இருந்து வெளியேறுய ஜானகி... கூப்டியா தங்கம் என்றபடி வந்து கொண்டிருக்க... கௌதமை பார்த்ததும் குழப்பமானவர் "தம்பி நீங்க? என்க

ஆன்டி வணக்கம்... என் பேர் கௌதம்... விஜிம்மா அனுப்பி வெச்சாங்க என்றதும் " வணக்கம் தம்பி உக்காருங்க என்றார்

பரவால்ல ஆன்டி டைம் ஆகிடுச்சு... ப்ரியா ரெடி ஆகி இருந்தாங்கனா அழைச்சு விடுங்க கிளம்பனும் என்று சொல்ல...

சரி தம்பி நான் கூப்டுற முதல்ல நீங்க உக்காருங்க என்க... கௌதமும் அமர்ந்தான்... பின்பு ப்ரியாவினை அறை கதவை ஜானகி தட்ட "அம்மா இன்னும் 15மினிட்ஸ் என்ற ப்ரியாவின் குரல் வர

சீக்கிரம் ப்ரியா டைம் ஆச்சு என்று அதட்டியவர்... நேராக கிச்சனுக்கு நுழைந்து விட்டார்

கௌதமும் ப்ரீத்தயும் ஹாலில் அமர்ந்திருக்க..."ப்ரீத்தி எந்த க்ளாஸ் படிக்குறீங்க? என்று கேட்டான் கௌதம்

யூ.கே.ஜி... ஆமா உங்களுக்கு எப்படி என் பேர் ப்ரீத்தினு தெரியும்?

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க அம்மாதான் கூப்டாங்களே என்று கூற

ஸ்ஸ்... என்று தன் தலையில் அடித்து கொண்டவள் அட ஆமால்ல மறந்தே போயிட்ட என்க

லேசாக சிரித்தவன்... தன் வலது கரத்தை அவள் முன்னே நீட்டியபடி அஐம் கௌதம் என்க...

அவள் அவனையே பார்த்து கொண்டிருக்க...

கௌதம் ஃப்ரெண்ட்ஸ் என்க....

அவளும் சிரித்தபடி ஃப்ரெண்ட்ஸ் என்று கரம் கோர்த்து கொண்டாள்

ஜானகி காஃபியும் அதிரசமும் எடுத்து வந்து கௌதமிடம் நீட்டினார்

ஐயோ ஆன்டி இதெல்லாம் வேணா... இப்பதான் சாப்டுட்டு வந்த...

கொஞ்சமாச்சு சாப்டுங்க தம்பி... முதல் முறையா வீட்டிக்கு வந்துருக்கீங்க சும்மா போனா எப்படி என்று ஜானகி சொல்ல...

ஐ அதிரசம்... பாட்டி எனக்கு என்று ப்ரீத்தி கேட்க... என் செல்லகுட்டிக்கு இல்லாமயா இதோ எடுத்திட்டு வரன்டா என்று ஜானகி செல்ல பார்க்க

ஆன்டி எதுக்கு கஷ்ட படுறீங்க? நானும் ப்ரீத்தியும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம் இதையே ஷேர் பண்ணி சாப்டுக்கிறோமே என்று அதிரசத்தை எடுத்து ப்ரீத்தியின் முன்பு நீட்ட அவளும் தேங்க்யூ அங்கள் என்று புன்னகையோடு வாங்கி கொண்டாள்..

ஜானகியும் அங்கேயே அமர்ந்தபடி...நீங்க மாப்பிளையோட ஃப்ரெண்டா தம்பி என்று கேட்க

ஆமா ஆன்டி நாங்க காலேஜ் ஃப்ரெண்ட்

ஓ...தம்பியோட வீடு எங்க?

பெங்களூர் ஆன்டி

பெங்களூரா? ரொம்ப நல்லாவே தமிழ் பேசுறீங்களே..

ஐயோ ஆன்டி நான் தூய தமிழ... பொறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னைதான்... அப்பாவோட பிஸ்னஸ்காக அங்கயே செட்டில் ஆகிட்டோம்...

ஓ... அப்படிங்களா? என்றபடி இருவரும் பேசி கொண்டு இருக்க

அம்மா இந்த புடவை நிக்கவே மாட்டிங்குது நான் வேணும்னா சுடிதார் போட்டுக்கவா? என்றபடி ப்ரியா அறையிலிருந்து வெளியேற அவளை கண்டதும் கௌதம்ன் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து போனது...

இவதான் ப்ரியாவா? இவளதன நேத்து ஆஃபிஸ்ல பாத்தோம்... ஆதியும் இவளும் சரியா பேசிக்க கூட இல்லையே? ஐயோ ஆதி கல்யாணம் பண்ணிக்கபோற பொண்ணுன்னு தெரியாம ஏதேதோ பேசிட்டனே என்று மனதுக்குள்ளே தன்னை தானே திட்டி கொண்டிருந்தான்

கௌதமை அங்கே பார்த்ததும் சிறு புன்னகை சிந்திய ப்ரியா... ஹலோ என்க...

அவனும் லேசாக தலை அசைத்தவன் கிளம்பலாமா? என்று கேட்க

ம் என்றாள்...

ஜானகியை பார்த்தவன் ஆன்டி நீங்க வரல?

இல்ல தம்பி ஊர்ல இருந்து சொந்தகாரங்க வராங்க... அவங்க வரும்போது வீடு பூட்டி இருந்தா நல்லா இருக்காது அதுதான்

சரி ஆன்டி அப்ப நாங்க கிளம்புறோம் என்று விடை பெற்று விட்டு வெளியேற...

ப்ரீத்தியை அள்ளி கொண்ட ப்ரியா அவள் கண்ணத்தில் முத்தமிட்டபடி ஷாப்பிங்கு போகலாமா? என்று கேட்க

ம்ம் ஜாலி என்று துள்ளி குதித்தாள்...

ஓ... ப்ரீத்தியும் எங்க கூட வரீங்களா? என்று கௌதம் கேட்க...

ஆமா... ப்ரியா என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்... ஷாப்பிங்கு ஹெல்ப் பண்ண வேண்டா என்று ப்ரீத்தி சொல்ல...

ம்ம் கண்டிப்பா பண்ணியே ஆகனும்... வாங்க போகலாம் என்று கௌதம் முன்னே நடக்க ப்ரியாவும் ப்ரீத்தியும் அவனை தொடர்ந்தார்கள்.

மூவரும் வாசலுக்கு வர நீரா அக்கா என்று அழைத்தாள் ப்ரியா...

கதவை திறந்து நீரா வெளியே வர

ரெடி ஆகிட்டிங்களா? கிளய்பலாமா? என்று ப்ரியா கேட்க...

இல்ல ப்ரியா... நான் வரல அதுதான் ப்ரீத்தி வராலே அவள கூட்டிட்டு போ என்று நீரா கெஞ்சலாக கூற

காலையில அவ்வளவு சொல்லியும் நீங்க கேக்கலல்ல என்றாள் கோபமாக

அது இல்ல ப்ரியா... நல்ல காரியம் நடக்கும்போது நான் வேண்டாமே... பாக்குறவங்க ஏதும் தப்பா பேச போறாங்க... நீரா தயங்கியபடி கூற

சரி... இப்படி ஊர் பேசும்னு ஒதுங்கியே நில்லுங்க என்றவள் ப்ரீத்தியை அழைத்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

கௌதம் அங்கேயே நின்று நீராவையே பார்த்தபடி இருந்தான்...அவனுக்கு ஏனோ அவளை பார்க்க பரிதாபமாக இருந்தது... "போக வேண்டியவர்கள் போய் விடுவார்கள் வாழ்பவருக்கு எவ்வளவு கஷ்டம் என்று நினைத்தபடியே அவளை பார்த்து கொண்டிருக்க... அவனை பார்த்து மெலிதாக புன்னகைத்தாள் நீரா அந்த புன்னகையில்தான் எத்தனை வலி... பதிலுக்கு அவனும் ஒரு புன்னகைக்க.... அவள் ஒன்றும் பேசாது வீட்டில் நுழைந்து விட்டாள்...அவனும் காரில் ஏறி அமர்ந்தவன் காரை கிளப்பினான்

ப்ரியா உனக்கு அம்மா மேல கோபமா? ப்ரீத்தி கேட்க...

இல்லடா என்றாள் அவள்...

அப்பறம் எதுக்கு நீ அம்மாவ திட்டுன?

அந்த சின்ன பெண்ணுக்கு என்ன சொல்லி புரிய வைப்பாள் அவளும்...

அம்மா மேல எனக்கு கோபம் இல்லடா... சும்மா கோப படுற மாதிரி நடிச்ச... நீரா உன்னை மாதிரி குட் கேர்ள் இல்ல அதனாலதான்... ஷாப்பிங் போகலாம்னு சொன்னதும் நீ ரெடி ஆகிட்டு வந்துட்ட.. ஆனா நீரா சொன்ன பேச்சு கேட்டாம அடம் பிடிச்சாங்க அதுதான் திட்டுன என்று ப்ரியா சொல்ல...

ஓஓஓஓ... என்று ப்ரீத்தி இழுக்க

P என்றாள் ப்ரியா

அவள் Q என்க

இவள் R என்றாள்...

S T U V W X Y Z என்று ப்ரீத்தி அவசரமாக சொல்ல

அதெல்லாம் நான் சொல்லனும் என்று ப்ரியா பொய்யாக அழுக... ப்ரீத்தி அஸ்க்கு புஸ்க்கு என்னு கிண்டலடிக்க என்று இருவரின் குதூகலத்தை கண்டு கௌதம் சிரித்து கொண்டிருந்தான்.

கௌதம்க்கு ப்ரியாவின் பழகும் விதமும் புன்னகை முகமும் மிகவும் பிடித்திருந்தது... ப்ரியா என்னமோ நல்ல பொண்ணுதான் எல்லார் கிட்டையும் அன்பா பழகுறா நல்லபடியா நடந்துக்குறா... ஆதியையும் ஒருநாள் மாத்திருவா என்ற நம்பிக்கை உண்டானது...

ஆனால் இவளை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்ற எண்ணமே அவனை வாட்ட சரி கேட்டு விடலாம் என்று நினைத்தவன்

ப்ரியா என்று அழைத்தான்

அவளும் ம் என்க...

இஃப் யூ டோன்ட் மைன்ட் உங்கள ஒன்னு கேட்கலாமா?

ம்ம் கேளுங்க

ஆக்ச்சுவலா... நான் உங்கள உங்கயோ பாத்துருக்க ஆனா எங்கனுதான் நியாபகம் வர மாட்டிங்குது.... நீங்க எப்பயாச்சு பெங்களூர் வந்துருக்கீங்களா? இல்ல நம்ம ரெண்டு பேரும் இதுக்கு முன்னாடி மீட் பண்ணிருக்கமா? என்று கௌதம் சீர்யஸாக கேட்க....

ப்ரியா சிரித்தாள்...

ஆமா நேத்துதான் ஆஃபிஸ்ல மீட் பண்ணுனோம்னு தயவசெஞ்சு மொக்கை போட்டுறாதீங்க.... கௌதம் சொல்ல

என்ன ப்ரதர் அதுக்குள்ள மறந்துட்டீங்களா? என்று ப்ரியா ப்ரியா கேட்க ஒன்றும் புரியாமல் முழித்தான் கௌதம்

இன்னுமா நியாபகம் வரல... ஹலோ ப்ரதர் உங்க ஃப்ரெண்ட் ஆதி எங்க? என்றதும் அவளை அதிர்ச்சியாக பார்த்தவன்.... ஏய் ப்ரியா நீயா? பாய்ஸ் ஹாஸ்டல்க்கு வந்த கேடிதன நீ... ஃபேர்வல் அன்னிக்கு நீதன ஆதிய கேட்ட என்க

அப்பாடா இப்பவாச்சு நியாபகம் வந்ததே

எத்தனை வருஷம் கழிச்சு பாக்குறோம்.... ஆமா நேத்து ஆஃபிஸ்ல ஏன் என்க்கூட பேசல?

காலேஜ்ல சீனியர்னு ரொம்பதான் பந்தா பண்ணுவீங்க அதனாலதான் பேசவே ஒருமாதிரி இருந்தது

அட நீ வேற... உன்னை எங்க பாத்தனு யோசிக்க யோசிக்க தலையே வெடிச்சுரும்போல இருந்துச்சு...

எதுக்கு அவ்வளவு யோசிச்சிங்க கேட்டா நானே சொல்லிருப்பேனே ப்ரியா நக்கலாக கூற

கேக்க வந்தவனுக்கு பல்ப கொடுத்துட்டு இதுல நக்கல் வேறயா? நீ கொஞ்சம் கூட மாறல ப்ரியா....ஆமா ஃபேரவல் அன்னிக்கு எதுக்காக ஆதிய தேடுன... கௌதம் ஆர்வமாக கேட்க

அதெல்லாம் உங்க கிட்ட சொல்ல முடியாது... ப்ரதர் ஆதிகிட்ட சொல்ற அவரயே கேட்டுக்கோங்க

ஓ..அப்ப நீ இன்னும் அவனுக்கு ப்ரபோஸ் பண்ணலயா? என்று கேட்க

அவனை அதிர்ச்சியாக பார்த்தவள்... உங்களுக்கு எப்படி தெரியும் நான் அன்னிக்கு அவர ப்ரபோஸ் பண்ணதான் தேடுனனு?

அதுவா...அன்னிக்கு உன் கையில ரோஜாப்பூவ பாத்த அதுதான் சும்மா கெஸ் பண்ணுன...

ம்ம் ப்ரதரோட மெமரி பவர் சூப்பர்தான்... இன்னுமா நியாபகம் வெச்சுருக்கீங்க... என்றபடி இருவரும் பேசி கொண்டே இருக்க ஷாப்பிங் மாலும் வந்தது...

ப்ரியா கௌதம் ப்ரீத்தி மூவரும் இறங்க அங்கே விஜயா,அவரின் அண்ணி மைதிலி மற்றும் மைதிலியின் மகள் அருந்ததி இருந்தனர்.

ப்ரீத்தியின் அருகில் வந்த விஜயா அவள் கண்ணத்தை கிள்ளியபடி... இவங்க யாரு ப்ரியா என்று கேட்க

அன்னிக்கு நம்ம வீட்டுக்க வந்தாங்களே நீரா அக்கா அவங்களோட பொண்ணு ப்ரித்தி அத்தை என்று அறிமுக படுத்தினாள்...

ஓ... அப்படியா என்று ப்ரீத்தியை வாங்கி கொண்டவர் கண்ணத்தில் முத்தம் ஒன்றை வைத்து விட்டு... மைதிலி அருந்ததி இருவரையும் அறிமுக படுத்தி வைத்தார்.

மைதிலிக்கு ஆதி தன் மகளை மணந்து கொள்ளவில்லை என்ற வருத்தம் மனதில் இருக்க... ப்ரியாவிடம் பேசவில்லை லேசாக சிரித்தார் மட்டும்...

ஆனால் நம் ப்ரியா அப்படி இல்லையே... "அத்தை என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க என்றபடி பட்டென காலில் விழுந்து விட்டாள்... மைதிலியின் மனம் இளகிவிட என்ன சொல்வது என்றே புரியவில்லை "ஐயோ என்னம்மா பண்ற எழுந்திரி என்று சொல்ல...

முதல்ல என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க அத்தை என்றாள் புன்னகையோடு... அவரும் வேறு வழியின்றி "நல்லா இரும்மா... முதல்ல நீ எழுந்திரி என்று தோழை தொட்டு எழுப்ப ப்ரியாவும் எழுந்தாள்.

அருந்ததியிடம் கரம் நீட்டியபடி ஹலோ என்று தன்னை அறிமுகம் படுத்தி கொள்ள... அவளும் கரம் பற்றி தன்னை அறிமுகம் படுத்தி கொண்டாள்.

விஜியின் காதோரமாக தலை சாய்த்த கௌதம் " அம்மா உங்க மருமகதான் மைதிலி மாமிய ஒரே அடியா கிளீன் போல்ட் ஆக்கிட்டாங்களே என்று கூற

டேய் அவ என் மருமகடா அவளுக்கு யார எப்படி கவுக்கனும்னு நல்லாவே தெரியும் என்று பெருமையாக சொல்ல

அது என்ஜமோ உண்மைதான் என்பதை வாய் விட்டே சொல்லியவன்... ஆதியையும் சீக்கிரமாவே கவுத்துருவா போலவே என்று மனதிலும் நினைத்தபடி விஜயாவின் தோழில் கையை போட்டவன்... வாங்கம்மா போலாம் என்று இருவரும் உள்ளே நுழைய மற்றவர்களும் அவர்களையே பின் தொடர்ந்தார்கள்...

உள்ளே நுழைந்ததும் பெண்கள் எல்லோரும் புடவை நகை என ஷாப்பிங்கை ஆரம்பிக்க மாலை ஆகியும் முடிந்த பாடுதான் இல்லை...பெண்களின் ஷாப்பிங்கை பற்றி சொல்லவா வேண்டும் அதிலும் கல்யாண ஷாப்பிங் வேறு...

பாவம் ப்ரீத்திக்கும் கௌதம்க்கும்தான் போர் அடித்து விட்டது... அவர்கள் இருவரும் மேல் மாடியில் இருக்கும் விளையாட்டு அரங்கத்திற்கு சென்று நேரத்தை கழித்தனர்... ஒரு வழியாக ஷாப்பிங்கை முடித்து விட்டு வெளியேற மாலை சென்று இருள் சூழ்ந்திருந்தது...

விஜயா ,மைதிலி,அருந்ததி மூவரையும் கதிர் அழைத்து செல்ல... ப்ரியாவையும் ப்ரீத்தியையும் கௌதம் அழைத்து சென்றான்... ப்ரீத்தியும் கழைப்பில் உறங்கி விட ப்ரியா அவளை மடியிலே அமர்த்தி கொண்டாள்...

கௌதம் காரை ஓட்டியபடியே ப்ரியாவிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்... "சோ ப்ரியா...உனக்கு ஆதிய காலேஜ்ல இருந்தே தெரியும் அப்படிதன...

ம்ம் என்ற பதில் வந்தது அவளிடம் இருந்து

அப்போ உனக்கு மஹாவ பத்தியும் தெரியும்?

சில நிமிட மௌனத்திற்கு பிறகு ம்ம் என்றாள்...

சரி... நீ அவன காதலிக்கிற விஷயம் அவனுக்கு தெரியுமா?

இல்லண்ணா தெரியாது...

ஏன்? எப்பயாசு ஒருநாள் அவனுக்கு தெரிஞ்சுதன ஆகனும்...

தெரிஞ்சுதான் ஆகனும் அண்ணா ஆனா இது சரியான நேரம் இல்லயோனு தோனுது... இப்ப அவர் இருக்குற மனநிலையில நான் அவர காதலிக்கிறனு தெரிஞ்சாலும் என்மேல பரிதாப படுவாரே தவிர என்மேல அவருக்கு காதல் வராது... அப்படி அவரு பறிதாப பட்டு என்னை ஏத்துகிறத விட வெறுக்குறதே மேல்

என்னம்மா பேசுற...இது விளையாட்டு கிடையாதும்மா... உன் வாழ்க்கை... கல்யாணத்துக்கு அப்பறமும் அவன் உன்னை ஏத்துக்கலனா உன் வாழ்க்கை நரகமாகிரும் ப்ரியா... என்று கௌதம் சீர்யஸாக கூற

வென்று புன்னகை ஒன்றை சிந்தியவள்... ஒருநாள் இல்ல ஒருநாள் அவர் என்னை காதலிக்கிறேனு சொல்லதான் போறாரு அண்ணா... என் காதல்மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு... என்று தன் காதலின் ஆழத்தை கர்வம் கொண்டு ப்ரியா சொல்ல...

அதை கண்ட கௌதமின் மனம் பிரம்பித்துதான் போனது...அவளை பார்த்து புன்னகைத்தவன்...

ப்ரியா.... என் நண்பனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையுனும்னு கடவுள்கிட்ட வேண்டாத நாள் கிடையாது... அதை உன் மூலமா நிறவேத்திட்டாரு... ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா...எனக்கு ஷ்ரேயானு ஒரு தங்கச்சி இருக்கா... ஆனால் இன்னைல இருந்த ப்ரியானு இன்னோரு தங்கச்சியும் கிடச்சுட்டா...இனி என் நண்பனோட வாழ்க்கை நல்லா இருக்கும்ற நம்பிக்கை வந்துறுச்சு....என்று சொல்ல

ப்ரியாவின் கண்கள் கலங்கிதான் போனது

இப்படி காதல மனசுலே வெச்சுட்டு இருந்தா எப்படி... அவனுக்கு எப்ப ப்ரபோஸ் பண்ண போற?

ம்க்கூம் உங்க ஃப்ரெண்ட் என்க்கூட பேசுற லட்சணத்துக்கு இந்த ப்ரபோஸ் ஒன்னுதான் குறச்சல்... என்னை பாத்தாளே எட்டடி தள்ளி நிக்கிறாரு இதுல எப்ப லவ்வ சொல்லுறது? எப்ப சம்மதம் வாங்குறது? ரொம்ப கஷ்டம் அண்ணா என்று ப்ரியா நொந்தபடி சொல்ல

ப்ரியா என் ஃப்ரெண்ட் வெளியதான் முரடன்... கோபக்கார எல்லாமே ஆனா அவன் மனசுக்கு ரொம்ப நல்லவன்... நம்மள மாதிரி எல்லார் கிட்டையும் மனசு விட்டி பேச மாட்டான்தான் ஆனால் அவனுக்கு ஒரு தடவை உன்னை பிடிச்சுருச்சுனு வெச்சுக்கயே அதுக்கு அப்பறம் நீயே போகனும்னு சொன்னாலும் உன்னை போக விடமாட்டான் அந்த மாதிரி கேரக்டர் அவன்...

இந்த கொஞ்ச வருஷமா அவன் அவனா இல்லம்மா... நீதான் அவன பழைய ஆதியா மாத்தனும்... மாத்துவ எனக்கு நம்பிக்கை இருக்கு ப்ரியா... ஆனால் இப்படி உன் காதல மனசுலயே பூட்டி வெச்சா எப்படிம்மா? நீதான் அவனுக்கு சொல்லனும் சொல்லி புரிய வைக்கனும் என்று கௌதம் கூற

யாரு அண்ணா மாட்டேனு சொல்றா? எத்தனையோ தடவை ட்ரை பண்ணுன எல்லாம் வேஸ்டா போச்சு... கல்யாணம் நிச்சியம் ஆனதுக்கு அப்பறம் ஆதி என்க்கிட்ட பேசுறதே நிறுத்திட்டாரு அப்பறம் எப்படி என்றபடி ப்ரியா தயங்க...

காரை நிறுத்தியவன்... அங்கே இருந்த ட்ராவை திறந்து அதில் இருந்த சின்ன ரெகார்டரை எடுத்து நீட்டியபடி " நீ நேரடியா பேசுனாதன கேட்க மாட்டான்... இதுல உன் மனசுல இருக்குறத சொல்லி கொடு கண்டிப்பா கேப்பான்...

அட நீங்க வேறண்ணா அவருக்கு பாட்டுனாலே புடிக்காது இதுல நான் பேசி கொடுத்த ரெகார்டரவா கேக்க போறாரு என்று ப்ரியா சலித்து கொண்டே கூற

சத்தமாக சிரித்த கௌதம்... என்னது அவனுக்கு பாட்டு பிடிக்காதா? ஆமா யார் சொன்னா உனக்கு இதெல்லாம்...

யார் சொல்லனும்.... ரெண்டு நாள் முன்னாடிதான் போர் அடிக்குதேனு கார்ல பாட்ட போட்ட... எனக்கு பாட்டுனா பிடிக்காது... இது என் கார்... என் இஷ்டம்னு ஓரே கத்து...

அப்படியெல்லாம் இல்ல ப்ரியா...அவன் ஏதோ கோபத்துல சொல்லிருப்பான்... ஆக்ச்சுலா அவனுக்கு பாட்டு பிடிக்கிறது மட்டும் இல்ல...ரொம்ப சந்தோஷம் ஆயிட்டான்னா பாடவும் செய்வான்... எல்லார் முன்னாடியும் இல்ல அவனோட க்ளோஸா இருக்குறவங்க கிட்ட மட்டும்தான்...
என்று அவளிடம் கையில் இருந்த ரெகார்டரை நீட்டியபடி... இந்தா ப்ரியா... இதுல உன் மனசுல இருக்குறத சொல்லி கொடு... யாருக்கு தெரியும் இந்த தடவை வர்க் அவுட் ஆகுதானு பாப்போம் என்று கௌதம் கூற

ப்ரியாவும் புன்னகையோடு அதை வாங்கி பார்த்தபடி இருந்தாள்.. காரை விட்டு இறங்கிய கௌதம் மறுபுறம் சென்று ப்ரீத்தியை வாங்கி கொண்டவன்... "இத பாத்துட்டே இருக்க கூடாது ப்ரியா என்றபடி அதில் இருந்த ப்ளே பட்டனை அழுத்தி "பேசு" என்று கதவை அடைத்து விட்டு சென்றான்...

ப்ரியாதான் என்ன சொல்வது என்று புரியாமல் ரெகார்டரை மீண்டும் வெறித்து பார்த்தபடி இருந்தவள் ஒரு வழியாக தன்னை தயிரிய படுத்தி தன் மனதில் இருக்கும் காதலை சொல்ல தொடங்கினாள்.....

💕💕💕💕💕

உன்னோடு நான் இருப்பேன்❤️




















© Sona Biswakarma's has invited you to join Writco — Read, Write, Discover & Share