...

4 views

என்னை கொல்லாதே
மாலை மயங்கும் நேரம்....

தன் வீட்டினுள், தன் அறைக்குள் , மெதுவாக பூனை போல் அடி வைத்து , பம்மி பம்மி திருடன் போல் நுழைந்தான் மாரிஷ்.... அந்த அறையில் கண்ணுக்கு பழகிய இருட்டில் தடையின்றி நுழைந்தவனின் கண்களில் பால்கணியில் ஒரு உருவம் இருப்பது தெரியவே..... அவனது இதழ்கள் ஒரு பக்கமாக வளைந்தது... கண்களில் ஒரு வில்லத்தனம் தெரிந்தது.... மெதுவாக அந்த உருவத்தின் பின் போய் நின்றவன்... எதிர்பாரா நேரம் அதை பின்னின்று அணைக்க....

ஆ.... அம்மா..... என்ற ஒரு பெண்ணின் கூச்சல் சத்தம் காற்றில் எதிரொலித்தது...

அடியே... கத்தாதடி... அம்மாக்கு கேட்டுட போகுது.... என்று தட்டையான குரலில் தன் காதல் ராணியை எச்சரித்தான் மாரிஷ்.... அவள் பெயர் கீதா.... மாரிஷின் இதய ராணி.....

ஏன் இப்படி பயமுறுத்துறீங்க.... என்று சினுங்கியவளை தன் பக்கம் திருப்பியவன்.... அவள் இடையை தன்னோடு இறுக்கிக் கொண்டான்.... அவளது கைகள் இரண்டும் அவனது நெஞ்சின் மீது பதிந்திருக்க... அந்த இருட்டிலும் நிலவின் ஒளியால் தன்னவனின் மையல் கொண்ட கண்களை சரியாய் படித்தாள் கீதா.....

ஏன் பயப்படனும்.... என்ன தாண்டி யாருடி உன்ன நெருங்க முடியும்.... என்று குழைந்த குரலில் கீதாவின் இதயம் பாகாய் கரைந்தது.... தன்னை வார்த்தை ஜாலத்தை கொண்டே மாயம் செய்யும் வித்தையை இவன் எங்கு கற்றானோ தெரியவில்லையே என அவளது பாதி இதயம் புலம்ப... மறுபாதி இதயமோ அவன் பால் தன்னை இழந்து கொண்டிருந்தது...

ஐயோ... விடுங்க இது பால்கணி., என்று லேசாக கடிந்தவளின் காதில் லேசாக கிசுகிசுத்தான் மாரிஷ்.....

அப்போ உள்ளே போய் பண்ணினா ஒகேயா..... என்று கூறியவன்... கீதாவின் காது மடலை வலிக்காமல் கடிக்க... அவளுக்கோ உடல் முழுவதும் புல்லரித்தது.... கூடவே... அறையில் இருக்கும் அமைதியை தின்று தீர்க்கவே... அவளிடமிருந்து வந்தன சில சினுங்கல் சத்தங்கள்....

ஏங்க..... என்ன பண்ணுறீங்க....

என்று சினுங்கியவளின் இடையை மறைத்திருந்த சேலையை விலக்கியவன்.... அவளது வெற்றிடையில் தன் விரல்களால் கோலமிட்டவாறே.... அவள் காதில் ரகசியம் பேசினான்.....

இது வரை எதுவும் பண்ணுறதா ஐடியா இல்ல..... இப்படி சினுங்கி சினுங்கியே என்ன போதை ஏத்துற பாத்தியா..... சோ இனி மேல் தான் பண்ண போறேன்..... என்றவன் அவளது இடையில் கை கொடுத்து தூக்கி.... அறைக்குள் கொண்டு சென்றான்....

அவர்களது கதகளி ஆட்டத்தை காணவே காத்திருந்த கட்டிலும் அவர்களை வெட்கத்தோடு வரவேற்கவே..... அறையின் விளக்கு கூட தன் கண்களை மூடி அறையை இருட்டாக்கியது.... சில நிமிடங்களிலேயே அந்த அறையில் முனங்கல் சத்தங்களும், கண்ணாடி வளையல்களின் சத்தமும், கொலுசு சத்தமும் மாறி மாறி கேட்கத் தொடங்கியது.... இந்த சத்தங்கள் எல்லாம் அந்த அறையின் சுவர்கள் பல முறை கேட்டு பழகி விட்டது போல..... ஜன்னலில் போடப்பட்டிருந்த திரை காற்றில் லேசாக ஆடிக் கொண்டிருந்தது.... நிலவின் ஒளியும் அந்த அந்த ஜன்னலின் வழியாக உள்ளே நுழைய வெட்கப்பட்டு மேகத்தினுள் ஒளிந்து கொள்ள..... போர்வைக்குள் பதுங்கி இருந்த காதல் புலிகள் இரண்டு காதலால் தன் இனை மீது  மாறி மாறி பாய்ந்து கொண்டிருந்தது..... கட்டில் சண்டையினூடே அவனது கைப்பட்டு நைட் லேம்ப் கீழே விழுந்து உடைய....

தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த அவர்களது ஒரு வயது மகன்.... அழத் தொடங்கி விட....

அது வரை இருந்த உணர்ச்சிகள் எல்லாம் பொங்கிய  பாலில் தெளிக்கப்பட்ட தண்ணீர் போல் சட்டென அடங்கியது..... கட்டிலில் உணர்ச்சிகளின் பிடியில் சிக்குண்டிருக்கும் தன் மனையாளை இரைஞ்சும் பார்வை பார்த்தவன்... அவளது விழி அசைவில் அனுமதி கிடைத்ததும்... தன் மகனை ஓடி சென்று கையில் அள்ளி... அவனை தன் தோளில் போட்டு உறங்க வைத்தான் மாரிஷ்.....

சிறிது நேரத்திலேயே குழந்தை உறங்கி விட அவனை தொட்டிலில் கிடத்தி விட்டு நிமிர அவன் முன் மலந்த தாமரை போன்ற முகத்துடன் மாலையிடப்பட்ட  ஃபோட்டோவில் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் அவனது மனையாள் கீதா....

கட்டிலிலோ ஒரு வெற்றிடம்... யாரும் நிரப்ப முடியாத வெற்றிடம்.... மாரிஷின் கண்களிலோ கண்ணீர்.... என்றும் வற்றாத கண்ணீர்.....

நனவில் மட்டுமல்ல

கனவுலும் நினைவிலும் கற்பனையிலும்

உன்னோடு வாழ துடிக்கும்

காதல் கொண்ட இதயமடி

உன் நினைவால் வாடும் கவிஞன் நான் இருக்க

நினைவை மட்டும் தந்து

என் கனவை எல்லாம் கற்பனையாக்கி விடாதே

எத்தனை வலிகளையும் தாங்கும் என் இதயமடி

உன் பிரிவை மட்டும் தாங்காமல் முடியாமல்

உன்னை நோக்கி  இது என் முதலடி .....

அன்புடன்...

எபின் ரைடர்....
© Ebinrider