...

4 views

சிறுவன் கண்டறியும் யானையின் எடை-2
சபை முடிந்து வீட்டுக்கு திரும்பும் சிவகேசு மற்றும் நந்தபாலன், நந்த பாலனை பார்த்து உனக்கு என்ன பைத்தியமாய் பிடித்திருக்கு மகனே என்று தாய் தந்தை இருவரும் நீ எப்படி சபையில் உரத்து பேசுலாம், நீ சின்ன பையன் ஒன்றும் தெரியாது நான் மன்னிப்பு கேட்கிறேன் மகாராஜா விடம் என்று சிவகேசு சொல்ல,
நந்தபாலன் தனது தாயின் காதுயின் அருகே குசகுச என்று சொல்லி கொண்டு இருக்க, அதனை கேட்ட தாய் தமது மகனை நாளை சபை க்கு அழைத்துச் செல்லுங்கள் தாய் சொல்லுகிறாள்,
மறுநாள் தந்தை சிவகேசு மகனை அழைத்து சென்று சபையில் நந்தபாலனுக்கு தேவையான உபகரணங்கள் அளிக்குமாறு ராஜா உத்தரவு பிறப்பித்தார், அவைகள் யானை, படகு, இரு உதவி ஆட்கள் அழைத்து கொண்டு ஏரி யை நோக்கி பயணம் ஆகிறான்,
ஏரியை அடைந்ததும் நந்தபாலன் படகில் யானையை ஏற்றிக்கொண்டு ஏரியில் படகு சவாரி செய்ய உதவி ஆட்களுக்கு ஆணை இடுகிறார், படகு ஏரியின் நடு நீர் நிலைக்கு சென்றவுடன் படகு தண்ணீரில் மிதக்கும் படகின் வெளிப்புற அளவீடுகளை ஏழுதுகோலால் கோடு வரைந்து குறித்து கொள்ளுகிறான், பிறகு படகை கரைக்கு திரும்ப சொல்லுகிறான், பிறகு யானையை இறக்கி விட்டு மறுபடியும் படகில் அங்கே கட்டிட பணிக்காக செவ்வக வடிவில் செதுக்கப்பட்ட கருங்கற்களை ஏற்ற சொல்லுகிறான், ஏற்றிக்கொண்டு ஏரியில் பயணிக்கிறார், அவ்வாறு படகு நடு நீர் நிலை சென்றவுடன் ஏற்கனவே குறியீடு களை கவனித்து இன்னும் கற்களை ஏற்றிக் கொள்ள வேண்டும் என்று கரைக்கு திரும்பி மறுபடியும் யானையின் சரியான எடை வரும் வரை இவ்வாறு நந்தபாலன் செய்து யானையின் எடை இந்த கற்கள் தான் என்று நிரூபிக்கிறான்,
அங்கே அனைவரும் ஏற்று கொள்ளுக்கின்றனர், கற்களை சிறிது சிறிதாக எடை போட்டு கொள்ளுக்கின்றனர்.
பிறகு நந்தபாலனை மகாராஜா அழைத்து கௌரவிக்கிறார், மற்றும் நந்தபாலன் கல்வி, மேற் கல்வி அரசு ஏற்றுக் கொள்ள கிறது, அரசு சார்பில் அறிவு, அறிவியல், கணிதம், அரசியலில், அரசு நிருவாக சார்ந்த அனைத்து துறைகளின் சார்பாக முதன்மை ஆசானாக நியமிக்கப்படுகிறார் நந்தபாலன்....
- முற்றும்-
குறிப்பு :- கதை சம்பவங்கள் அறியப்பட்டவை....
© G.V.KALASRIYANAND