...

2 views

அந்த ஓர் வாசகம்..!
அன்று காலை சூரிய வெளிச்சம் தட்டி எழுப்ப, உலகம் கண் விழித்தது. பல் துலக்க, முகம் துடைக்கத் தங்கள் வீட்டுக் கண்ணாடியை நெருங்கியவர் களுக்கு பயங்கர அதிர்ச்சி. ஒவ்வொருவர் நெற்றியிலும் பச்சை குத்தியதைப்போல் அந்த வாசகம் இருந்தது.

தாங்கள் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டி, பூனைக்குட்டிகளின் நெற்றியிலும் அது இருந்ததைக் கண்டு குழம்பினர். நகரங்களில் இப்படி என்றால், கிராமங்களில் பால் கறக்க, ஏர் உழ, மேய்ச்சலுக்கு எனத் தங்களது ஆடு, மாடுகளை நெருங்கியவர்களுக்கு தலை சுற்றியது. அந்தக் கால்நடைகளின் உடல்களிலும் அதே வாசகம்.

சாலையில் செல்பவர்களின் நெற்றியிலும் அவ்வாறு இருந்தது. பலரும் மருத்துவர்களிடம் ஓடினார்கள். ஆனால், மருத்துவர்களே தங்கள் நெற்றியில் இருப்பதை எந்த மருந்தைத் தேய்த்து அழிப்பது என்று புரியாமல் மண்டையை உருட்டிக்கொண்டு இருந்தார்கள்.

அவ்வளவு ஏன்? ஓயாமல் வானிலை ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளும், வானத்தில் பிரகாசிக்கும் சூரியன் மீதும் அப்படி எழுதி...