...

8 views

☝️ஒன் லாஸ்டு டைம்☝️
கல்லூரியின் கடைசி நாள். ஒருவரை கூட விட்டு விட கூடாது. இன்னும் ஒருமுறையாவது எனக்கு தெரிந்த நபரை எல்லாம் பார்த்து விட வேண்டும். அவசரத்தில் ஒரு பேனா கூட எடுத்து வர வில்லை. கொடுப்பதற்கு எதுவும் பரிசு தான் வாங்கவில்லை, கையெழுத்தும் வாங்க முடியாமல் போய் விடுமோ ? வரிசையாக அழைப்பு மணி வந்து கொண்டிருந்தது. எங்க இருக்க, சீக்கிரம் வா....வந்துட்டே இருக்கேன். கேண்டீனுக்குள் வழக்கத்தை விட அதிக நெரிசல். இருப்பினும் கடைகள் யாவும் வெறிச்சோடியே இருந்தன. அதுசேரி, யாரும் இங்கு சாப்பிட வரவில்லையே. என்னுடன் பழகியவர்கள், விலகியவர்கள் எல்லோரையும் அழைத்திருந்தேன். வந்தவர்கள் எல்லோரும் நிழற்படங்களும், தற்படயி எடுப்பதிலுமே குறியாக இருந்தனர். யாரும் வாய்விட்டு பேச கூட இல்லை. என்னை பார்த்தும் பார்க்காதது போல் சிலர். இருவர் இருவராக சேர்ந்தபடி புகைப்படம் எடுத்து கொண்டே வந்தனர். நானும் என் போஃனை வெளியில்...