...

14 views

பொக்கிஷமான நட்பு -4
"சரி அம்மா அப்பா கிட்ட காட்டுனீயா?" என்று கேட்டாள் பிரியா "ம்ம்ம் காட்டுனே பிரியா, அவுங்க தா இந்த ஐடியாவ கொடுத்ததே" என்றாள் திவ்யா. உடனே பிரியா "வாவ் சூப்பர் டீ" என்று சொல்லி "சேரி வா அம்மா கிட்ட காட்டுவோம்" என்று சொல்லி பிரியா திவ்யாவை வெளியே அழைத்துக் கொண்டு போனாள். "அம்மா அம்மா சீக்கிரோ இங்க வாங்களே" என்றாள் "இதுக்கு வேற வேல இல்ல சும்ம சும்ம என்ன கூப்டு அப்புரம் எங்கியாவது போறது" என்று முனுமுனுத்து கொண்டு பாத்திரத்தை கழுவி கொண்டு இருந்தார் திருமதி செல்வி. "அம்மா... அம்மா" என்று குரல் கொடுத்து கொண்டே இருவரும் சமையலறைக்கு சென்றார்கள். "அட என்னானு சொல்...லு" தன் மகளை திட்ட தொடங்கிய திருமதி செல்வி திவ்யாவை பார்த்ததும் வார்த்தையை முழங்கினார். "என்ன மா ஏதோ சொல்ல வந்தீங்க போல" என்றாள் திவ்யா "அட ஒன்னு இல்ல மா இவ என்ன மொதையோ இப்படி தா அம்மா அம்மா னு கூப்டா, நானு போய் பார்த்த ஆலே கானும் அத இப்பயோ இப்படி விளையாடுற நேனைச்சா, பார்த்த நீ" என்றார் திருமதி செல்வி "ஹாஹாஹாஹா அது ஒன்னு இல்ல மா அவ உங்கள கூப்ட தா நா தா நீங்க வரதுக்கு குள்ள ரூம்புக்கு கூட்டிட்டு போய்டே மா சோரி மா" என்றாள் திவ்யா "சே இதுக்குல போய் யெ மா சோரி சொல்லுற" என்று கேட்டார் பிரியாவின் அம்மா "சரி மா உங்களுக்கு ஒரு குட் நியூஸ்" என்றாள் பிரியா. "என்ன நியூஸ்?" என்று அம்மா கேட்க பிரியா கல்லூரி உறுதிபடுத்துதல் கடித்தத்தை காண்பித்தாள், கடித்தத்தை படித்த அம்மாவின் முகம் புன்னகிக்க தொடங்கினார். "ரொம்ப சந்தோஷ மா வாழ்த்துக்கள், நல்ல படிச்சி பெரிய ஆல வரனு மா" என்று ஆசிர்வதித்தார் அம்மா. "டேங்கியு சோ மாச் அம்மா" என்றாள் திவ்யா. "சாப்டியா மா?" என்று அம்மா கேட்க "சாப்டே மா" என்றாள் திவ்யா. "சரி மா நீங்க வேலயா இருக்கீங்க நாங்க முன்னுக்கு போரோ மா"என்று பிரியா சொன்னாள் "சரி மா" என்றார் திருமதி செல்வி. " சரி டீ வா போலா" னு சொல்லி இருவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாய்கள். "நீ எப்ப டீ ஃக்கோலேஸ்க்கு ஜோயின் பண்ணற?" என திவ்யா கேட்க "தெரியல டீ இன்னும் லெட்டர் வரல டீ ." என்று பிரியா சொன்னாள்
"ஆமாவா சேரி டீ கவல பாடத சீக்கிரமா வந்துரும். நம்பிக்கையா இரு டீ."
பிரியாவும் அதற்கு "அத டீ கண்டிப்பா கெடைச்சிரும் னு நம்புரே டீ." என்று சொன்னாள்.
இப்படி பேசிக்கொண்டே இருக்கும் போதே பிரியாவுடைய கடிதம் வந்தது. அவர்கள் இருவரும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்கள். உடனே அவர்கள் இருவரும் ஓடி போய் பிரியாவின் பெற்றோரிடம் அந்த கடிதத்தை காண்பித்தார்கள். அவளுடைய பெற்றோரும் அவளை ஆசிர்வதித்தார்கள். அவர்கள் விண்ணப்பம் செய்த படிப்பு வெவ்வேறாக இருந்தாலும் கிடைத்த திகதி ஒன்றுதான் ஆனால் வெவ்வேறு இடங்களில் கிடைத்தது. இருவருக்கும் அது ஒரு தாங்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியது. என்னதான் திவ்யாவுக்கு நிறைய பணம் இருந்தாலும் பிரியாவின் நட்புக்கு ஈடு இல்லாததாக இருந்தது. அதனால் இந்த புது வாழ்க்கை ஏற்றுக் கொள்ளவும் மாற்றிக்கொள்ளவும் சிரம்மப்பட்டார்கள். இவர்களுடைய பெற்றோர்களுக்கும் இது ஒரு ஆச்சாரியத்தை ஏற்படுத்தியது. "சரி மா கவல படாதீங்க" என்று பிரியாவின் அப்பா சொல்ல "ம்ம்ம ஆமா பிள்ளைகளா அத க்கோஷ்ல லீவு லாம் கிடைக்கும்ல அப்போ ரெண்டு பேரும் பார்த்துக்கலாம் சரியா?" என்று அவள் அம்மாவும் சொல்ல அவர்கள் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

#writcostory
#friendship
#family
© Dana Hephzibah