...

8 views

பொக்கிஷமான நட்பு-11
நாட்கள் புரண்டு ஓடி இருவரும் கல்லூரியின் இறுதி வருடத்திற்கு வந்தார்கள். இறுதி வருடம் என்பதால் அவர்களுக்கு அது பிரட்டிக்கல் செமஸ்டர். ஓஸ்டலை விட்டு வெளியே தங்கும் சூழ்நிலை. திவ்யா பிரியாவை  கோலாலம்பூரில் உள்ள அவளின் அப்பா கேஸ்ட் அவ்சில் தங்க சொன்னாள். திவ்யா அவள் இருக்கும் இடத்தின் அருகிலே பிரட்டிக்கல் செய்தாள். என்னதான் தான் இருவரும் ஒரே மாநிலத்தில் இருந்தாலும் சந்திக்க வழி கிடைக்க வில்லை. காலையில் வேலையும் இரவு நேரங்களில் அவர்களுடைய ஃபொரோஜேக் மற்றும் எசாயின்மன் செய்ய அவளுக்கு நேரம் சரியாக இருக்கும்.  இதற்கிடையில் ஒருநாள் பிரியா திவ்யாவுக்கு தொடர்பு கொண்டாள் ஆனால் அவள் எடுக்க வில்லை. தன் தோழியிடம் பேச முடியாத ஏக்கத்தில் அவள் அறையில் திவ்யாவின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டே படுத்து இருந்தாள். திடீரென கதவு வேகமாக தட்டும் சத்தம் கேட்டது. பிரியா எழுந்து கடிகாரத்தை பார்த்தாள் மணி நல்லிரவு மூன்று. "இந்த நேரத்துல யாரு வந்துருப்பாங்க?" என்று அவளுக்குளே யோசித்தாள். கதவு தொடர்ந்து தட்டும் சத்தம் அவளுக்கு வொளித்துக் கொண்டே இருந்தது. அவள் இருதயம் "லப்டப் லப்டப் லப்டப்" என்று துடித்தது! முகம் வேற்த்து கொட்டியது! "யாரா இருப்பாங்க அதுவும் கதவ விடாம தட்டிக்கீட்டே இருக்காங்க" என்று சொல்லிக்கொண்டே 
அறையிலிருந்து வெளியே வந்தாள். அவள் கிட்ட வர வர ஒரு பெண்ணுடைய குரல் கேட்டது. அந்த குரல் "பிரியா கதவ சீக்கிரம தொர பிரியா...பிரிய...." என்றது, "இது திவ்யா குரல் மாதிரியே இருக்கு" ன்னு சொல்லி சன்னலில் எட்டி பார்த்தாள் பிரியா ஆனால் யாரும் தெரியவில்லை. ஆனால் கதவு தட்டும் சத்தம் தொடர்ந்து கேட்டு கொண்டு தான் இருந்தது! "பிரியா கதவ தொர பிரியா" "குரலு கேட்க திவ்யா மாதிரியே இருக்கே, சரி தொரந்து தான் பார்ப்போ யாருன்னு" என்று சொல்லி கதவை திறந்தாள் பிரியா. வெளியே நின்றது பிரியாவின் தோழி திவ்யா! அவள் தலை முதல் கால் வரை வொரே இரத்தம் கரையாக இருந்தது. அவள் "என்ன காப்பாத்து பிரியா"  என்று சொல்லி மயங்கி விழுந்தாள்!  "அய்யோ திவ்யா! என்னாச்சு?  எழுந்திரு திவ்யா கண்ண தோர திவ்யா திவ்யா திவ்யா!!!!"

தொடரும்....

திவ்யா மயங்கி விழுந்த காரணம் என்னவாக இருக்கும்? பிரிய அவளை எவ்வாறு காப்பாற்றுவாள்? உங்கள் பதிலை கமெண்ட்ஸ் பகுதியில் எழுதவும் நன்றி...



#writcostory
#frienship
#family


© Dana Hephzibah