13) Adventures of the four friends
நால்வரும் அங்கிருந்த ஒரு மரத்தின் அருகே அமர்ந்து இருந்தனர் .
" வர்ஷு . எதாவது பேசு டி . " வருண் .
" என்ன பேசுறது . " வர்ஷினி .
" நீ ஏதோ project பண்றன்னு சொன்னியே . அத சொல்லு . " வருண் .
" என்ன project வர்ஷும்மா . " வினு ஆர்வத்துடன் கேட்டாள் .
" Automatic Bus . " வர்ஷினி .
" அது எப்டி work ஆகும் . " வருண் .
கிருஷ் இதில் கலந்து கொள்ளாமல் ஓரத்தில் அமர்ந்திருந்தான் .
" இது என்னோட சின்ன வயசு project . Busல யாரும் தொங்கிட்டு போக கூடாதுன்றதுக்காக யோசிச்சது . ஒரு Busல இவ்ளோ பேர் தான் இருக்கனும்னு வச்சுட்டா , அதுக்கு மேல யாரும் ஏற முடியாது . " வர்ஷு .
" அது முடியுமா வர்ஷு . " வருண் .
" ஆங் . முடியும் . " வர்ஷினி .
" அதுக்கு என்னென்ன வேணும் டி . " வினு .
" Altra sonic sensor - input
Temperature sensor - input
LED 2 - output
Arduino 1 - program . " வர்ஷினி .
" Temperature sensor எதுக்கு டி . " வினு .
" சொல்றேன் . ஒரு முப்பது பேர் ஒரு Busல இருக்கலாம்னு வச்சுக்கோயேன் . முப்பது பேர்க்கு மேல யாரும் ஏற முடியாது . அதுக்கு தான் Altra sonic sensor . ஒரு குறிப்பிட்ட distanceகு குள்ள யாராவது வந்தா door தானா open ஆகும் . " வர்ஷினி .
" LED எதுக்கு டி . " வருண் .
" நீ inputனு ஒன்னு குடுத்தா output கு நீ எதையாவது குடுத்தே ஆகனும் . அதுக்கு தான் LED . " வர்ஷினி .
" உனக்கு program பண்ண தெரியுமா . " வருண் .
" தெரியும் . Bisoft app ஏத்தி பண்ணனும் . Bisoft appல program பண்றது ரொம்ப easy . right to left போனா +1 . left to right போனா -1 . temperature sensor , நம்ம body temperature check பண்ண . " என்று கூறிவிட்டு திரும்பி பார்த்தால் வினுவும் வருணும் உறங்கி கொண்டிருந்தனர் . கிருஷ் மட்டும் தான் அவள் கூறியதை கேட்டுக் கொண்டிருந்தான் .
அதை பார்த்து பெருமூச்சு விட்டவள் , எழுந்து நடக்க தொடங்கினாள் , வருணின் watchஐ எடுத்துக் கொண்டு .
சிறிது தூரம் watch இல் இருக்கும் light இன் வெளிச்சத்தில் நடந்தவள் , அப்படியே நின்றாள் . வானத்தை இரசித்துக் கொண்டே .
" இங்க என்ன பண்ற . " திடீரென்று குரல் கேட்டவுடன் திடுக்கிட்டு திரும்பினாள் வர்ஷினி .
அங்கு கிருஷ் அவளை முறைத்துக் கொண்டே நின்று இருந்தான் .
" அறிவில்லையா உனக்கு . நீ பாட்டுக்கு நடந்து வர . இது என்ன parkஆ . எதாவது ஆச்சுன்னா என்ன டி பண்ணுவ . " என்று திட்டினான் கிருஷ் .
" I'm sorry . " என்றவள் மீண்டும் வானத்தை பார்க்க தொடங்கினாள் .
" ஏய் லூசு . நீ என்ன பைத்தியமா . வா போலாம் . "
அதை கேட்டும் அவள் அமைதியாக நின்று இருக்கும் போது , அங்கு காட்டுத்தீ பரவ தொடங்கியது .
அதை பார்த்த கிருஷ் வர்ஷினியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு ஓடத் துவங்கினான் .
அங்கு வருணும் வினுவும் உறங்கி கொண்டிருந்தனர் .
" வருண் . எழுந்துக்கோ டா . " என்று எழுப்பினான் கிருஷ் .
அவனின் சத்தத்தில் இருவரும் கண் விழித்து பார்த்தனர் . அப்போது அவர்களை சுற்றி முக்கால்வாசி தீ பற்றி இருந்தது .
ஒரு இடத்தில் மட்டும் தீ பிடிக்காமல் இருந்ததால் , நால்வரும் அதன் வழியே ஓட , அவர்கள் செல்லும் இடமெல்லிம் தீ பற்றிக் கொண்டிருந்தது . அப்படி இப்படி என்று நால்வரும் வளைந்து வளைந்து ஓடினார்கள் . இறுதியில் இருவரும் ஒரு பாழடைந்த கினற்றின் அருகே வந்தனர் . அந்த கினற்றை சுற்றி தீ பற்றி இருந்தது .
" இப்போ என்ன பண்றது . " வினு .
" கினத்துக்குள்ள போலாம் . " வர்ஷினி .
" தண்ணி இல்ல அனு . " கிருஷ் .
" அங்க படி இருக்கு பாருங்க . அது வழியா போலாம் . " என்றவள் அந்த படிகளின் வழியே கீழிறங்க , மற்றவர்களும் இறங்கினார்கள் .
" அனுஉஉஉ . கினத்துக்குள்ள என்ன இருக்கு . " கிருஷ் .
" எதுவும் இல்ல . " வர்ஷினி .
அவள் கால் வைத்த படி உடைய , கையை செவுற்றில் வைத்தாள் . அவள் வைத்ததும் , அந்த படி கீழிறங்கத் தொடங்கியது .
" என்ன டி பண்ண . " வருண் கத்தினான் .
" நான் எதுவும் பண்ணல டா . படிக்கட்டு ரொம்ப பழசுல்ல , அதான் ஒடைஞ்சுருச்சு . " என்று அவர்கள் கூறிக் கொண்டு இருக்கும் போதே தரையை அடைந்து இருந்தனர் நால்வரும் .
.
.
" Henna . இப்போ வெளிய போலாம் . " Henry .
மூவரும் அந்த குகையுனுள் இருந்து வெளியே வந்தனர் . அது ஒரு காடு .
மூவரும் மெதுவாக நடக்கத் தொடங்கினார்கள் .
வழியில் ஒரு வீடு .
" விஷ்ணு . இந்த வீட்டுக்குள்ள யார் இருக்காங்கன்னு பாப்போமா . " Henry .
" ம்ம்ம் . பாக்கலாம் . "
மூவரும் சென்று கதவை தட்டினார்கள் . கதவை திறந்தான் ஒருவன் .
" யாரு நீங்க . என்ன வேணும் . " அவன் .
" இங்க வழி தவறி வந்துட்டோம் . இங்க இருந்து எப்டி திரும்பி போறது . " Henna .
" உள்ள வாங்க . " என்று கூறி மூவரையும் உள்ளே அழைத்துச் சென்றான் .
" எப்டி இந்த காட்ட விட்டு வெளிய போகனும் . " Henry .
.
.
அங்கிருந்த அனைவரும் அழுது கொண்டு இருந்தனர் .
" எம்புள்ள என்ன பண்றான்னே தெரியலையே . " என்று கண்ணீர் விட்டுக் கொண்டு இருந்தார் வர்ஷினியின் தாய் .
" இங்க பாருங்கம்மா . இங்க எல்லாம் இப்படி உக்காந்து கத்த கூடாது . வெளிய போய் கத்திக்கோங்க . " police .
.
என்ன நடக்கும் . யார் அவன்?? . எப்படி திடீரென்று காட்டுக்குள் தீ பற்றியது?? . கினற்றுக்குள் என்ன இருக்கும்?? . பார்ப்போம்....
© Ashwini