...

21 views

இயற்கை
இயற்கை.. இயற்கை.. இயற்கை
   இயற்கை அளவிட  முடியாத மிக பெரிய, அப்பாற்பட்ட ஒரு சக்தி.  இயற்கையின் அதிசயங்கள் அளப்பறியது.    எல்லா மதங்களும் இயற்கையை இறைவனாகவும், இறைவனின் படைப்பாகவும் கருதுகிறது. கடவுளை நம்பாதோர் கூட இயற்கையை நம்பி தான் ஆக வேண்டும்.  ஏன், அறிவியாலாளர்களின் அறிவுக்கு கூட எட்டாத பல அற்புதங்களை கொண்டது இயற்கை. இவ்வாறு எவ்வளவு சிறப்புகள் கூறினாலும் அதற்கும் மேலாக எவராலும் போற்றக்கூடிய, போற்றப்பட வேண்டிய பழமையான என்றும் புதுமையான பொதுவான அனைவராலும் ஏற்க கூடிய மிகப்பெரிய தனிமதம் தான் இயற்கை.
இயற்கையின் அதிசயங்களையும்,
  அதன் ஒப்பற்ற சக்தியையும் எண்ணி  வியக்கிறேன்.  ஒவ்வொரு அணுவிலும் ஏன் அணுவே இயற்கையாகவும் அதை நிகழ்த்தும் இயற்கைசக்தியையும் எண்ணி ஆச்சரியமடைகிறேன்.
     இயற்கை இல்லையேல் எங்கும் எதுவுமில்லை. நன்கு யோசித்து பாருங்கள் இப்போது உங்களை சுற்றி நோக்குங்கள் உங்கள் கண்ணில் காணும் எதுவுமே இயற்கை தான். உங்கள்  ஆடை இயற்கையிலிருந்து பெறப்படுகிறது.
உங்கள் வீடு கற்கள், மணல், சிமெண்ட்டால் ஆனது  கதவு, சன்னல் மரத்தால் ஆனது இவையும் இயற்கையிலிருந்து பெறப்படுகிறது. பாதுகாப்பை கொடுக்கிறது. பயணிக்கும் வாகனம், இப்போது உங்கள் கையிலுள்ள ஆண்ட்ராய்டு போன், டேப்லட், லேப்டாப், கம்ப்யூட்டர் இயற்கையல்ல என்று கூறலாம் உண்மை தான். இது எல்லாம் எவ்வாறு  தயாரிக்கப்படுகிறது அதன் உலோகங்கள் எங்கிருந்து பெறப்படுகின்றன. அதை தயாரிக்கும் மனித மூளை எவ்வாறு உருவானது, சிந்திக்கின்றன.
  ஆம், இயற்கை, இயற்கைசக்தி
     உண்ணும் உணவு இயற்கை. குடிக்கும் நீர் இயற்கை . சுவாசிக்கும் காற்று இயற்கை. எல்லாம் இயற்கை. இயற்கை இல்லாமல் பார்த்தால் எதுவுமே இல்லை. ஆம்,  அனைத்துமே இயற்கையால் தான் நிறைந்துள்ளது. இயற்கையை வணங்குவோம். நீங்கள் மரத்தை வளர்த்தால் இயற்கை >> மழை என்னும் அமுதை பரிசாக கொடுக்கிறது. அதைபோல தான் நல்லது செய்தால் இயற்கை நல்லதே கொடுக்கும். நல்லதே நடக்கும்
                                
தினகரத்தேவன்
© thinakaradevan