...

2 views

வைகுந்தம் எவ்வளவு தூரம்?
வைகுந்தம் எவ்வளவு தூரம்!
கதாநாயகனாக நடிப்பவர் நம் பெருமாள்!
கதாநாயகி நம் தாயார் மகாலட்சுமி


ஒரு நாட்டில் மன்னர் பாகவதம் கதைகள் ப்ரவசனம் கேட்டுக் கொண்டிருந்தார்!
அதில் வைகுந்தம் பற்றி பல செய்திகள் சுவையாக சொல்லிக் கொண்டிருந்தார்
பாகவதோத்தமர்!


திடீரென்று ராஜாவுக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது!
நான் வைகுந்தம் போக முடியுமா!அது எவ்வளவு தூரம் இருக்கிறது!
எப்படி போவது!
அதற்கு கட்டுச்சோறு எத்தனை நாட்களுக்கு தட்டிக் கொண்டு போக வேண்டும்!
இதெல்லாம் எனக்கு நாளைக்கு சொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டு போய் விட்டார்!

சிலருக்கு எங்க போவதென்றாலும்
சோத்து ஞாபகமும்
சொத்து ஞாபகமும் மட்டும் போகாது!
இந்த சொத்தை உடம்பு
செத்துப் போகும் வரை
இதே ஞாபகம் தான் இருக்கும்!
இதெல்லாம் அவரவர் பூர்வ ஜென்ம வாசனைகள்!
நாம என்ன செய்வது!

உபன்யாசகருக்கு ஒரே கவலை!
இல்லை இல்லை
ஏகப்பட்ட கவலை.
அரசர்கள் திடீர் திடீரென்று
கேனத்தனமாக ஏதாவது
யோசிப்பார்கள் செய்வார்கள்!
ஏதாவது குண்டக்க மண்டக்க என்று கேள்வி கேட்பார்கள்.இதற்கு என்ன செய்வது என்று
கவலையுடன் ஆத்துக்குப் போய் சேர்ந்தார்!

சாப்பாடு சாத்தமுது தஜோவனம் எதுவும் துளிகூட வயிற்றில்
இறங்கவில்லை!
துளிஜலம் மட்டும் எடுத்துக் கொண்டு படுத்தார்!

இந்த கிறுக்கு ராஜா வைகுந்தம் எவ்வளவு தூரம் என்று கேட்டு விட்டானே.
இதற்கு என்ன பதில் சொல்வது!
யாராவது வைகுண்ட வாசல் எவ்வளவு
கிலோமீட்டர் என்று
அளந்து பாத்துனுட்டு
போற வழியில் அங்கங்க டோல்கேட் போட்டு
வசூல் செய்கிறாங்களா என்ன?
என்று ஒரே கவலை!

அவருடைய செல்ல பேத்தி
ஸ்ரீ சௌந்தர்யா வந்து தாத்தா என்ன ஒரே யோசனை என்று கேட்டாள்!
உபன்யாசகர் அது ஒன்னும் இல்லம்மா!
ராஜா பிரவசனம் கேட்டுட்டு
ஏதாவது பரிசு கொடுப்பார்
என்று பார்த்தா
வைகுந்தம் எவ்வளவு யோசனை தூரம்
என்று கேட்கிறான்!
அதான் ஒரே யோசனை நேக்கு!
இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்
என்று புலம்பினார்!

அதற்கு பேத்தி தாத்தா என்ன பிரச்சனை உங்களுக்கு!
இதற்கு உடனே பதில் சொல்ல வேண்டியது தானே என்றாள்!
நாற்பது ஆண்டுகளாக ப்ரவசனம் செய்து வரும் தாத்தா திகைத்துப் போனார்!
ஏம்மா இதற்கு என்ன
பதில் சொல்ல முடியும் என்றார்!

என்ன தாத்தா நீங்க எத்தனை முறை கஜேந்திர மோட்ச்சம் கதை சொல்லி இருக்கீங்க!
அதுல இருந்து ராஜனுக்கு
பதில் சொல்ல வேண்டியது தானே என்றாள்!

அதெப்படி என்று கேட்க
அவருக்காக கண்ணன்
கீதோபதேம் போல
முருகன் சாமிநாதனாக
தகப்பன் சாமியாக வந்து
உபதேசம் செய்தது போல
தாத்தா காதில் ஏதோ கூறினாள்!

உடனே அவர் முகம் மலர்ந்தது!
பேத்தியை தாயார் மகாலட்சுமியை போல நினைத்து வணங்கி விட்டு நிம்மதியாகத் தூங்கப் போனார்!
காலை எழுந்து உற்சாகமாக மன்னரை சந்தித்தார்!

என்ன உபன்யாசகரே வைகுந்தம் எத்தனை தூரம் என்று பதில் கொண்டு வந்திருக்கிறீர்களா என்று கேட்டார்!

மகாராஜா வைகுந்தம்
கூப்பிடும் தூரம் தான் என்றார்!

அதெப்படி என்று கேட்டார் ராஜா!

கஜேந்திரன் என்று ஒரு யானைகளின் ராஜா
தான் என்று ஒரு அகங்காரத்தில் திரிந்த போது ஒரு நாள் ஆற்றில் கால் வைத்து பெரிய முதலையிடம் சிக்கிக் கொண்டது!
தன்னால் முடிந்தவரை போராடி விட்டு பிறகு ஒன்றும் முடியவில்லை
என்று உணர்ந்தது!
எல்லாம் பகவான் செயல் தான்!
அவரே உலகில் வல்லவர்!
அனாதரட்சகன்
ஆபத்பாந்தவன்
என்று உணர்ந்து
உள்ளம்உருகி மனம் நிறைந்து.ஆதிமூலமே என்று சொல்லி
கூவிஅழைத்தது!
உடனே பகவான் மகாவிஷ்ணு
கருடாரூடனராக சங்கு சக்ரதாரியாக வந்து
கஜேந்திரன்யானையை
முதலையிடம் இருந்து
சக்ராயுதத்தை விட்டு காப்பாற்றினார்!
ஆகவே வைகுண்ட வாசல் கூப்பிடும் தூரத்தில் உள்ளது என்றார்!

ஓகோ அப்படியா!
நான் இப்போது கூப்பிட்டால் பகவான் வருவாரா
என்றார் ராஜா!

அதெல்லாம் உங்களுக்கும் பகவானுக்கும் உள்ள தொடர்பைப் பொறுத்தது!
கஜேந்திரன்ஆதிமூலமே காப்பாத்துன்னு அழச்ச போது உடனே ஓடி வந்தார்!
அவன் இருக்கும் இடம் தேடி வந்தார்!

பக்தன் பிரகலாதன் கூப்பிட்ட போது தூணிலும் இருந்து நரசிம்மாக
உடனே வந்தார்!

திரௌபதியை வஸ்திராபரணம்
செய்யும் போது கூப்பிட்டபோது
அவள் கண்ணா நீயே
துணை என்று தன்னை மறந்து துகிலை மறந்து
உலகை மறந்து
பக்தவச்சலா பரந்தாமா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று அழைத்த போது உடனே வந்தார்!
இழுக்க இழுக்க
சேலைகள் தந்தார்!

அதுபோல உங்களுக்கும்
ஏதாவது பெரிய ஆபத்து வந்தால் நீங்கள் மனமுருகி அழைத்தால் பகவான்
வருவான் என்றார் பாகவதர்!

மன்னன் பயந்து போனான்!
பெரியவர் என்னமோ
அட்சாண்யமாப் பேசறாரே
இதெல்லாம் நல்லதில்லை என்று அருகில் இருந்த மகாராணி ராஜா காதைப் பிடித்து கடித்தாள்
கடிந்தாள்!

உடனே ராஜா
ஐயா சாமி எனக்கு ஆபத்தெல்லாம் வரவேண்டாம்!
நீங்கள் சொல்வது சரியாகத் தான் இருக்கும்!
வைகுண்டம் கூப்பிடும் தூரம் தான் இருக்கும் என்று ஒப்புக் கொண்டு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக தந்து
அரசு ரதத்தில் ஏற்றி
அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தான்!
பாகவதோத்தமரும் சுகமே வாழ்ந்தார்.


பார்த்ததில் படித்தது
படித்ததில் பிடித்தது
பிடித்ததில் பகிர்ந்தது